Tamilnadu Roundup: தமிழகத்தில் தொடரும் மழை! ஞானசேகரனுக்கு 15 நாள் நீதிமன்ற காவல்!
Tamilnadu Roundup 26th Dec 2024: தமிழ்நாட்டில் காலை முதல் தற்போது வரை நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளை கீழே தலைப்புச் செய்திகளாக காணலாம்.
மத்திய மேற்கு வங்கக்கடலில் தீவிர காற்றழுத்த தாழ்வுப்பகுதி காரணமாக கடலோர மாவட்டங்களில் பரவலாக மழை - சென்னையில் விட்டு விட்டு மழை
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் பரவலாக மழை பெய்ய வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட இளைஞருக்கு 15 நாள் நீதிமன்ற காவல்
மாணவி பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட ஞானசேகரன் தப்பியோட முயற்சி - கை, கால் முறிந்ததால் மாவுக்கட்டு
சுனாமி 20ம் ஆண்டு நினைவு தினம்; சுனாமியால் உயிரிழந்தவர்களுக்கு தமிழ்நாடு முழுவதும் அஞ்சலி
சுனாமியால் உயிரிழந்தவர்களுக்கு சென்னையில் மலர் வளையம் வைத்து அஞ்சலி
ஏற்காட்டில் நூலகம் அருகே ஆழ்துளை கிணறு அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு
சுனாமியால் குடும்பங்கள், உறவினர்களை இழந்தவர்கள் கடற்கரைகளில் இன்று தங்களது உறவினருடன் கண்ணீர் அஞ்சலி
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நூற்றாண்டு விழா; சென்னையில் நடக்கும் விழாவில் நல்லகண்ணுவுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்பு
பழைய வாகன விற்பனைக்கு 18 சதவீத ஜிஎஸ்டி வரி விதிப்பதா? ஜிஎஸ்டி வரி விதிப்பு குறித்து முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் கண்டனம்
அமித்ஷா நாளை தமிழ்நாடு வருகை: அமித்ஷாவிற்கு எதிராக தீவிர போராட்டம் நடத்த காங்கிரஸ், விசிக உள்ளிட்ட கட்சிகள் திட்டம்
நெருங்கும் பொங்கல்; கரும்பு சாற்றின் தரம் குறைந்ததால் வெல்லம் தயாரிப்பு பாதிப்பு
பொங்கல் பண்டிகைக்கு தமிழக அரசே கரும்பை நேரடியாக கொள்முதல் செய்ய விவசாயிகள் கோரிக்கை
ஒட்டன்சத்திரம் காய்கனி சந்தையில் பீட்ரூட் விலை உயர்வு - விவசாயிகள் மகிழ்ச்சி
நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே முகாமிட்டுள்ள புல்லட் யானை - வனத்திற்குள் விரட்ட வனத்துறை முயற்சி