மேலும் அறிய
Advertisement
Tamilnadu RoundUp: காலமானார் டெல்லி கணேஷ்! காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாவதில் தாமதம் - தமிழ்நாட்டில் இதுவரை
Tamilnadu RoundUp: தமிழ்நாட்டில் காலை முதல் 10 மணி வரை நடைபெறற பல்வேறு முக்கிய நிகழ்வுகளை கீழே தலைப்புச் செய்திகளாக காணலாம்.
- தமிழ் திரையுலகின் பிரபல நடிகர் டெல்லி கணேஷ் காலமானார் – பிரபலங்கள் இரங்கல்
- விருதுநகர் மாவட்டத்தில் இன்று ரூபாய் 417 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் – முடிவுற்ற திட்டப்பணிகளையும் முதலமைச்சர் திறந்து வைக்கிறார்
- திருநெல்வேலியில் பிரபல தொழிலதிபர் வீட்டில் நான்கு நாட்களாக நடைபெற்ற வருமான வரித்துறை சோதனை நிறைவு – கோடிக்கணக்கான சொத்துக்களுக்கான ஆவணங்கள் பறிமுதல்
- தமிழ்நாட்டில் அடுத்த 7 நாட்கள் பல மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு – திருவாரூர் மாவட்டத்திற்கு மஞ்சள் எச்சரிக்கை
- தென்மேற்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உ:ருவாவதில் தாமதம் – அடுத்த 36 மணி நேரத்தில் உருவாக வாய்ப்பு
- தஞ்சாவூரில் மாமன்னன் ராஜராஜ சோழனின் சதய விழா கோலாகல கொண்டாட்டம் – ராஜராஜ சோழன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை
- சென்னை பெரும்பாக்கத்தில் வெடித்த மின்சார கேபிள்; 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் இருளில் மூழ்கியது
- நீலகிரி குந்தா நீர்மின் உற்பத்தி பணிக்காக எமரால்ட் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு – கரையோர மக்களுக்கு எச்சரிக்கை
- இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் 21 பேர் கைது – நெடுந்தீவு அருகே ராமேஸ்வரம் மீனவர்களை சிறைபிடித்தனர்
- திருச்சி – காரைக்குடி இடையே ரயில்வே வழித்தடத்தில் மாற்றம்; பராமரிப்பு பணிகள் காரணமாக ரயில்வே நடவடிக்கை
- ஓடிடி தளங்களில் வெளியாகும் படங்கள், வெப்சீரிஸ்களுக்கும் சென்சார் கொண்டு வரப்படும் – மத்திய இணையமைச்சர் எல்.முருகன்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
திரை விமர்சனம்
அரசியல்
தமிழ்நாடு
கல்வி
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion