தீவிரமடையும் தென்மேற்கு பருவமழை : தமிழ்நாட்டில் பல இடங்களில் மழைக்கு வாய்ப்பு

தென்மேற்கு பருவமழை தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் அடுத்த 24 மணிநேரத்திற்குள் முன்னேற்றம் அடையும் என்பதால், மாநிலம் முழுவதும் பல இடங்களில் மழை பெய்வதற்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

FOLLOW US: 

முக்கிய பருவமழையான தென்மேற்கு பருவமழையானது ஜூன் 3-ஆம் தேதி தொடங்கும் என்று ஏற்கனவே இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. இதன் காரணமாக, தமிழகத்தில் கடந்த சில தினங்களாக பல இடங்களில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில், சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில், “வெப்பச்சலனம் மட்டும் தமிழ்நாட்டின் தென்கடல் ஓரத்தில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாகவும், குமரிக்கடல் மற்றும் இலங்கையை ஒட்டி நிலவும் வறட்சி காரணமாகவும் கர்நாடகம் முதல் தென் தமிழ்நாடு வரை நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாகவும், ஜூன் 4-ஆம் தேதி( இன்று) டெல்டா மாவட்டங்கள், புதுக்கோட்டை, சிவகங்கை, மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை முதல் மிக கனமழை, மதுரை, விருதுநுகர், ராமநாதபுரம், தூத்துக்குடி, கடலூர், கள்ளக்குறிச்சி, சேலம், தருமபுரி, திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை, ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும் பெய்யக்கூடும்.தீவிரமடையும் தென்மேற்கு பருவமழை : தமிழ்நாட்டில் பல இடங்களில் மழைக்கு வாய்ப்பு

தமிழ்நாட்டின் உள்மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழையும், ஏனைய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய கனமழையும், ஏனைய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழையும் நாளை பெய்யக்கூடும். தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் கன்னியாகுமரி மாவட்டம் சித்தாறு பகுதியில் 14 செ.மீ. மழையும், கன்னியாகுமரி மாவட்டம் சிவலோகம் பகுதியில் 12 செ.மீ. மழையும், பேச்சிப்பாறையில் 11 செ.மீ. மழையும் பதிவாகி உள்ளது. குறைந்தபட்சமாக கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரத்தில் 3 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.தீவிரமடையும் தென்மேற்கு பருவமழை : தமிழ்நாட்டில் பல இடங்களில் மழைக்கு வாய்ப்பு

இன்று  மற்றும் நாளை குமரிக்கடல் மற்றும் மன்னார் வளைகுடா பகுதியில் பலத்த காற்று மணிக்கு 40 கி.மீ. முதல் 50 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும். மீனவர்கள் இந்த தேதிகளில் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம். மேலும், இன்று மற்றும் நாளை கேரளா மற்றும் கடலோர பகுதிகள், லட்சத்தீவு பகுதியில் சூறாவளி காற்று மணிக்கு 40 கி.மீ. முதல் 50 கி.மீ. வரை வேகத்தில் வீசக்கூடும். தென்மேற்கு பருவமழை இன்று தமிழ்நாட்டின் பெரும்பாலான மாவட்டங்களில் முன்னேறியுள்ளது. அடுத்த 24 மணிநேரத்திற்கு தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் முன்னேற வாய்ப்பு உள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தமிழகத்தில் கடந்த மாதம் முழுவதும் வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில், சென்னை வானிலை ஆய்வு மையத்தின் மழை பெய்யும் என்ற அறிவிப்பு மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க :Tamil Nadu 12th Exam News Live: 12ம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்து - மகாராஷ்டிரா அரசு அறிவிப்பு

Tags: Tamilnadu heavy rain 24 hours southwest mansoon

தொடர்புடைய செய்திகள்

தமிழ்நாட்டில் 9 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்தது கொரோனா தினசரி பாதிப்பு..!

தமிழ்நாட்டில் 9 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்தது கொரோனா தினசரி பாதிப்பு..!

தூத்துக்குடி : குறைந்துவரும் கொரோனா தொற்று : பூஜ்ஜியமானது உயிரிழப்பு.. நிம்மதியில் மக்கள்..!

தூத்துக்குடி : குறைந்துவரும் கொரோனா தொற்று : பூஜ்ஜியமானது உயிரிழப்பு.. நிம்மதியில் மக்கள்..!

Tamil Nadu Coronavirus LIVE News : தமிழ்நாட்டில் இன்று கொரோனா பாதிப்பு என்ன தெரியுமா?

Tamil Nadu Coronavirus LIVE News : தமிழ்நாட்டில் இன்று கொரோனா பாதிப்பு என்ன தெரியுமா?

Sivashankar Baba | சிவசங்கர் பாபாவின் பெண் பக்தர் சுஷ்மிதா கைது..!

Sivashankar Baba | சிவசங்கர் பாபாவின் பெண் பக்தர் சுஷ்மிதா கைது..!

வண்டலூர் பூங்கா சிங்கங்களுக்குப் பரவியது மாறுபட்ட கொரோனா வைரஸ் தொற்று..!

வண்டலூர் பூங்கா சிங்கங்களுக்குப் பரவியது மாறுபட்ட கொரோனா  வைரஸ் தொற்று..!

டாப் நியூஸ்

NEET Exam 2021: நீட் தேர்வை நடத்த திட்டம்? - விரைவில் அறிவிப்பு

NEET Exam 2021: நீட் தேர்வை நடத்த திட்டம்? - விரைவில் அறிவிப்பு

Jagame Thandhiram Movie: என்ன வேணா நடக்கட்டும் நான் சந்தோசமா இருப்பேன் - ஜகமே தந்திரம்!

Jagame Thandhiram Movie: என்ன வேணா நடக்கட்டும் நான் சந்தோசமா இருப்பேன் - ஜகமே தந்திரம்!

WTC Final Preview : நிறைவடைந்த கவுண்டவுன் - இன்று தொடங்கும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் யுத்தம்!

WTC Final Preview : நிறைவடைந்த கவுண்டவுன் - இன்று தொடங்கும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் யுத்தம்!

Oil Spill | எண்ணெய் படர்ந்த சென்னை கடல், போர்த்துகீசிய கப்பலில் கசிவு! நிலவரம் என்ன?

Oil Spill | எண்ணெய் படர்ந்த சென்னை கடல், போர்த்துகீசிய கப்பலில் கசிவு! நிலவரம் என்ன?