Tamil Nadu 12th Exam News Live: 12ம் வகுப்பு பொதுத் தேர்வு நடைபெறுமா? இன்று முக்கிய அறிவிப்பு
தமிழ்நாட்டில் 12ம் வகுப்பு பொது தேர்வுகள் நடத்துவது குறித்த முக்கிய அறிவிப்புகள் இன்று வெளியாக இருக்கின்றன. இது தொடர்பான, அனைத்து செய்திகளையும் இந்த லைவ் ப்ளாக்கில் தெரிந்து கொள்ளலம்.
LIVE
Background
தமிழ்நாட்டில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வை நடத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பான அறிவிப்பை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவுள்ளார்.
முன்னதாக, கொரோனா பெருந்தொற்று காரணமாக, இந்தாண்டு 12ம் வகுப்புக்கான சிபிஎஸ்இ வாரியத் தேர்வை ரத்து செய்வதாக மத்திய அரசு அறிவித்தது.
அசாம், பஞ்சாப், தமிழ்நாடு - 12ம் வகுப்பு தேர்வு அறிவிப்பை வெளியிடவில்லை
இந்தியாவில், அசாம், பஞ்சாப், தமிழ்நாடு ஆகிய மாநிலங்கள் மட்டுமே 12ம் வகுப்புத் தேர்வு குறித்த இறுதி அறிவிப்பை வெளியிடாமல் உள்ளன.
12ம் வகுப்பு பொதுத் தேர்வு - ஓடிசா முதல்வர் அறிவித்தார்.
கொரோனா பெருந்தொற்று காரணமாக, இந்தாண்டு 12ம் வகுப்புத் தேர்வு ரத்து செய்யப்படுவதாக ஒடிசா மாநில முதல்வர் நவீன் பட்நாயக் தெரிவித்தார்.
தொலைநோக்குப் பார்வையுடன் முடிவெடுக்க வேண்டும் - கமல்ஹாசன்
12-ம் வகுப்பு தேர்வு நடத்தும் விஷயத்தில் தமிழக அரசு தொலைநோக்குப் பார்வையுடன் முடிவெடுக்க வேண்டும் என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் ஹாசன் வலியுறித்தியுள்ளார்.
12ம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்து - யோகி ஆதித்தியநாத் அறிவிப்பு
12ம் வகுப்பு பொதுத் தேர்வை ரத்து செய்வதாக உத்தர பிரதேச மாநில அரசு நேற்று அறிவித்தது. அம்மாநிலத்தில், 56 லட்சம் மாணவர்கள் மாநில வாரியத் தேர்வுக்கு தயாராகி வருகின்றனர்.