2 மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல்: தமிழ்நாடு அரசுடன் இணக்கமா..அதுதான் இல்லை?
TN Governor Assent Bills: தமிழ்நாடு சட்டப்பேரவையில் இயற்றப்பட்ட 2 மசோதாக்களுக்கு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி இன்று ஒப்புதல் அளித்துள்ளார்.

தமிழ்நாட்டில் அரசுக்கும், ஆளுநருக்கு இடையிலான பனிப்போர் நிலவி வந்த நிலையில், தற்போது 2 மசோதாக்களுக்கு ஒப்புதல் அளித்தது மூலம் தமிழ்நாடு அரசுடன் இணக்கமான போக்கை எடுத்து வருவதாக பார்க்கப்பட்டாலும், அப்படியில்லை துணைவேந்தர் மாநாட்டை ஏப்ரல் 25 ஆம் தேதி கூட்டியிருப்பது, அதற்கு சான்று என அரசியல் விமர்சர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
உச்சநீதிமன்றம் வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு:
சில தினங்களுக்கு முன்பு, ஆளுநருக்கு எதிராக தமிழ்நாடு அரசானது உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தது. அதில், தமிழ்நாடு சட்டப்பேரவையில் இயற்றிய மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளிக்காமல் இருக்கிறார். இதன் மூலம் தமிழ்நாடு அரசின் நிர்வாகங்களுக்கு இடையூறு ஏற்படுத்துகிறார். ஆளுநர் மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசுக்கும், சட்டப்பேரவைக்கு எதிராக ஆளுநர் ஆர்.என். ரவி செயல்படுகிறார். அரசியலமைப்பு எதிராக செயல்படுகிறார் என்று ஆளுநருக்கு எதிராக குற்றச்சாட்டுகளை வைத்தது.
இதையடுத்து, தொடர்ந்து இரு தரப்பு வாதங்களையும் கேட்ட உச்சநீதிமன்றம், ஆளுநருக்கு எதிராக வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு வழங்கியது. அதில் தமிழ்நாடு சட்டப்பேரவையில் இயற்றிய 10 மசோதாக்களயும் முன் தேதியிட்டு நிறைவேற்றம் செய்யப்பட்டதாக எடுத்துக் கொள்ளலாம் என உத்தரவு பிறப்பித்தது. மேலும், மசோதாக்கள் தொடர்பாக எடுக்கும் முடிவுகளுக்கு காலக்கெடுவையும் நிர்ணயம் செய்து அதிரடி காட்டியது.
குடியரசுத் துணை தலைவர் எதிர்ப்பு:
இந்த தீர்ப்பை திமுக , விசிக, உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் வரவேற்றனர். மேலும், இந்த தீர்ப்பானது ஆளுநருக்கு விழுந்த பெருத்த அடியாக பார்க்கப்பட்டது. ஆனால், இந்த தீர்ப்பானது சட்டமியற்றும் அங்கங்களான சட்டப்பேரவை மற்றும் நாடாளுமன்றத்தின் மீதான அதிகாரங்களில் உச்சநீதிமன்றம் தலையிடுகிறது என்றும் குடியரசுத் துணைத் தலைவர் ஜெக்தீப் தங்கர் எதிர்ப்பு தெரிவித்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
Also Read: E-Pass: நீலகிரியின் 4 இடங்களில் மட்டும் இ பாஸ்..சுற்றுலா போறவங்க நோட் பண்ணிக்கோங்க!
2 மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல்:
இந்நிலையில், 10 மசோதாக்கள் நிறைவேற்றம் செய்யப்பட்டதாக உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்த நிலையில், பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்களை நியமனம் செய்யும் அதிகாரம் தமிழ்நாடு அரசுக்கு இருப்பதாக உறுதி செய்யப்பட்டது. இந்த தருணத்தில், வரும் ஏப்ரல் 25, 26 ஆகிய நாட்களில் துணைவேந்தர்கள் மாநாட்டை , நடத்த திட்டமிட்டுள்ளார் ஆளுநர் ஆர்.என். ரவி. இதில், சர்ச்சை கருத்து தெரிவித்த குடியரசு துணை தலைவர் ஜெக்தீப் தங்கரும் பங்கேற்று உரையாற்றுவுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆளுநர் ஆர்.என்.ரவி மீண்டும் அரசுடன் மோதல் போக்கையை தொடர நினைக்கிறார் எனவும் பேசப்பட்டு வருகிறது.
Also Read: Subhanshu Shukla: சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு செல்லும் இந்தியர்: சுபான்ஷூ சுக்லா யார்?
துணைவேந்தர்கள் மாநாடு:
இந்நிலையில்தான், தமிழ்நாடு சட்டப்பேரவை இயற்றிய 2 மசோதாக்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளார். தனியார் பல்கலைக்கழகங்கள் திருத்த சட்ட மசோதா மற்றும் தமிழ்நாடு பொது கட்டட உரிமை திருத்த சட்ட மசோதா ஆகிய 2 மசோதாக்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளார்.
உச்சநீதிமன்ற உத்தரவின்படி ஆளுநர் ஆர்.என்.ரவி. ஒப்புதல் அளித்துள்ளாரே தவிர, தமிழ்நாடு அரசுடன் இணக்கமான போக்கை அவர் எடுக்கவில்லை என்றும் அப்படியில்லையென்றால், துணைவேந்தர் மாநாட்டை அவர் நடத்த திட்டமிட்டிருக்க மாட்டார் என்றும் அரசியல் விமர்சர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

