சென்னையில் குழந்தைகள் பராமரிப்பிற்காக உதவி எண்கள் அறிவிப்பு

தமிழகம் மற்றும் இந்தியாவில் மேற்கொள்ளப்படும் கொரோனா நோய்த் தொற்று மேலாண்மை மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த செய்திகளை உடனுக்குடன் இந்த லைவ் ப்ளாக்கில் தெரிந்து கொள்ளலாம்.

சென்னையில் குழந்தைகள் பராமரிப்பிற்கான உதவி எண்கள் அறிவிப்பு

தமிழகத்தில் பல பகுதிகளில் கொரோனாவால் பெற்றோர்கள் இருவரும் பாதிக்கப்படுவதால், அவர்களின் குழந்தைகளின் பராமரிப்பு குறித்து கேள்வி எழுந்துள்ளது. இதையடுத்து, தமிழக அரசு சார்பில் குழந்தைகள் பாதுகாப்பு மையம் தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சென்னையில் இதுபோன்று கொரோனா பாதிக்கப்பட்ட பெற்றோர்களின் குழந்தைகளுக்காக பாதுகாப்பு மையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக 1098, 99442 90306, 044 2595 2450 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.  

சென்னையில் ஊரடங்கை மீறியதற்காக 35 ஆயிரம் வாகனங்கள் பறிமுதல்

தமிழகத்தில் கொரோனா பரவலின் இரண்டாவது அலையை மோசமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதை கட்டுப்படுத்துவதற்காக மாநிலம் முழுவதும் 10-ந் தேதி முதல் அமலில் இருந்து வரும் ஊரடங்கு, கடந்த 24-ந் தேதி முதல் எந்த தளர்வும் இல்லாத ஊரடங்காக அமலில் உள்ளது. இந்த நிலையில், சென்னையில் ஊரடங்கின்போது தேவையின்றி வெளியில் சுற்றியதாக கடந்த 10 நாட்களில் 32 ஆயிரத்து 980 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், சென்னையில் ஊரடங்கை மீறியதாக 35 ஆயிரத்து 629 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

கருப்பு பூஞ்சை குறித்து ஆய்வு செய்ய பல்துறை நிபுணர்கள் குழு - சுகாதாரத்துறை அமைச்சர் பேட்டி

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கட்டுக்குள் வராமல் இருந்த கொரோனா தொற்று, நேற்று சற்றே ஆறுதல் அளிக்கும் விதமாக குறையத் தொடங்கியது. கொரோனா தடுப்பு பணிகளை துரிதப்படுத்துவதற்காக அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் தொடர்ந்து ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும் என்று முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

இதன்படி, சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று கொரோனா தடுப்பு பணிகளை ஆய்வு செய்வதற்காக தூத்துக்குடி சென்றார். தூத்துக்குடி விமான நிலையத்தில் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, அவர் கூறியதாவது,

“ தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி, விருதுநகர், தேனி ஆகிய மாவட்டங்களில் கொரோனா சிகிச்சைக்காக செய்யப்பட்டுள்ள மருத்துவ கட்டமைப்பு மற்றும் தடுப்பூசி போடும் நடவடிக்கைகளை ஆய்வு செய்ய உள்ளோம்.

தமிழகத்தில் அரசு எடுத்த துரித நடவடிக்கை காரணமாக கொரோனா பாதிப்பு 36 ஆயிரத்தில் இருந்து தற்போது 34 ஆயிரத்து 800 என்ற அளவில் குறைந்து உள்ளது. தமிழகத்திற்கு தற்போது வரை 80 லட்சம் தடுப்பூசிகள் வந்துள்ளன. இதுவரை 70 லட்சம் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது.

18 வயது முதல் 44 வயதில் உள்ளவர்களுக்கு தடுப்பூசி செலுத்துவதற்கு ரூபாய் 46 கோடி செலவில் 12 லட்சம் தடுப்பூசிகள் வரவழைக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் தடுப்பூசி போடதவர்களே இல்லை என்ற நிலையை உருவாக்குவதற்காக 3.5 கோடி தடுப்பூசிகள் வாங்குவதற்கு உலகளாவிய ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளது.  

தமிழகத்தில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு மருத்துவ ஆக்சிஜனுக்கு இக்கட்டான சூழல் இருந்தது. ஆனால், தமிழக சுகாதாரத்துறை, தொழில்முறை, மின்சார வாரியத்துறைகளின் முயற்சியால் ஜாம்ஷெட்பூர், ரூர்கேலா போன்ற பகுதிகளில் இருந்து ஆக்சிஜன் கொண்டு வரப்பட்டு தற்போது மருத்துவ ஆக்சிஜன் தேவை முழுமையாக நிறைவேற்றப்பட்டுள்ளது.

கொரோனா மூன்றாவது அலை ஏற்பட்டாலும் அதனை சமாளிக்க கூடிய அளவிற்கு பல்வேறு பகுதிகளிலும் ஆக்சிஜன் உற்பத்தி உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கருப்பு பூஞ்சை நோய் ஏற்படுவதாக கூறப்படுகிறது. ஆனால், கொரோனா பாதிப்பில் உள்ளவர்களுக்கும் பாதிப்பு ஏற்படுவது குறித்து ஆய்வு செய்ய பல்துறை அலுவலர்கள் அடங்கிய 10க்கும் மேற்பட்டவர்களை கொண்ட நிபுணர்கள் குழு அமைக்கப்பட்டுள்ளது.

ஸ்டீராய்டு கொடுப்பதாலும், அசுத்தமான தண்ணீரில் இருந்து ஆக்சிஜன் உற்பத்தி செய்து அதை மூச்சாக உள்ளிழுப்பதாலும் கருப்பு பூஞ்சை தொற்று ஏற்படுவதாக தெரிவிக்கிறார்கள். இதுகுறித்து, ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டு வல்லுனர்கள் குழு இரண்டு நாட்களிலே ஆராய்ச்சியைத் தொடங்கும். கொரோனா வைரசின் உண்மையான உயிரிழப்பை சொன்னால்தான் மக்களுக்கு விழிப்புணர்வும், பயமும் வரும். எனவே, கொரோனா விழிப்புணர்வில் எந்த ஒளிவுமறைவும் இல்லை.”

இவ்வாறு அவர் கூறினார்.

கருப்பு ப

முதல்வர் காப்பீடு திட்டத்தின்கீழ் கொரோனா சிகிச்சை அளிக்க வேண்டும் - தனியார் மருத்துவமனைகளுக்கு அமைச்சர் அறிவுறுத்தல்

தமிழகத்தில் கொரோனா தடுப்பு பணிகளில் மாநில அரசு தீவிர கவனம் செலுத்தி வருகிறது, மேலும், பொதுமக்களின் நலன் கருதி கொரோனாவால் பாதிக்கப்படும் நோயாளிகள் மாநிலம் முழுவதும் 890 தனியார் மருத்துவமனைகளில் காப்பீடு திட்டத்தின் கீழ் சிகிச்சை பெற தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில், இன்று கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, கொரோனா சிகிச்சைக்காக யார் வந்தாலும் அவர்களுக்கு முதல்வர் காப்பீடு திட்டத்தின் கீழ் சிகிச்சை அளிக்க வேண்டும் என்று தனியார் மருத்துவமனைகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

புதுச்சேரியில் மேலும் 1,237 பேருக்கு கொரோனா

புதுச்சேரியில் மேலும் 1,237 பேருக்கு இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம், பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 98,219 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 26 பேர் இறந்ததால், பலி எண்ணிக்கை 1,408 ஆக அதிகரித்துள்ளது. 15,475 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கருப்பு பூஞ்சை நோய்க்கான மருந்தை இறக்குமதி செய்யுங்கள்..!

நாட்டில் கருப்பு பூஞ்சை நோய் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், வெளிநாடுகளில் இலவசமாக கிடைக்கக்கூடிய கருப்பு பூஞ்சை நோய்க்கான லிப்போசோமல் அம்போடெரிசின்-பி மருந்தை இறக்குமதி செய்யக்கோரி மத்திய சுகாதாரத்துறை அமைச்சருக்கு சு.வெங்கடேசன் எம்பி கடிதம் எழுதியுள்ளார். 

அத்தியாவசிய பொருட்கள் விநியோகம் குறித்து முதல்வர் ஆலோசனை

முழு ஊரடங்கில் மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை விநியோகிப்பது குறித்து தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டுள்ளார். அமைச்சர்கள் துரைமுருகன், எம்ஆர்கே பன்னீர்செல்வம், செயலாளர் கோபால் உள்ளிட்டோர் ஆலோசனையில் பங்கேற்றுள்ளனர்.

இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு 2 லட்சத்துக்கு கீழ் குறைந்தது

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் ஒரு லட்சத்து 96 ஆயிரத்து 427 பேருக்கு  கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் கூறியுள்ளது. நேற்று முன்தினம் 2.59 லட்சம், நேற்று 2.22 லட்சமாக இருந்த பாதிப்பு இன்று 1.96 லட்சமாக குறைந்துள்ளது. 

இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘நாட்டில் ஒரேநாளில் ஒரு லட்சத்து 96 ஆயிரத்து 427 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ‘பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2 கோடியே 67 லட்சத்து 52 ஆயிரத்து 447-இல் இருந்து 2 கோடியே 69 லட்சத்து 48 ஆயிரத்து 874-ஆக அதிகரித்துள்ளது. ஒரே நாளில் கொரோனாவுக்கு 3 ஆயிரத்து 511 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 3 லட்சத்து 3 ஆயிரத்து 720-ல் இருந்து 3 லட்சத்து 7 ஆயிரத்து 231-ஆக உயர்ந்துள்ளது. பாதிப்பில் இருந்து ஒரே நாளில் 3 லட்சத்து 26 ஆயிரத்து 850 பேர் குணமடைந்துள்ளனர். இதன்மூலம், குணமடைந்தோரின் எண்ணிக்கை 2 கோடியே 37 லட்சத்து 28 ஆயிரத்து 11இல் இருந்து 2 கோடியே 40 லட்சத்து 54 ஆயிரத்து 861 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா தொற்றி இருந்து குணமடைந்தோர் விகிதம் 88.69 சதவீதமாகவும், உயிரிழப்பு விகிதம் 1.14 சதவீதமாகவும் உள்ளது. நாடு முழுவதும் கொரோனா பாதித்து சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 25 லட்சத்து 86 ஆயிரத்து 782-ஆக குறைந்துள்ளது.  இதுவரை 19 கோடியே 85 லட்சத்து 38 ஆயிரத்து 999 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

20.58 லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 20,58,112 பேருக்கும், இதுவரை 33,25,94,176 பேருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக ஐசிஎம்ஆர் தகவல் தெரிவித்துள்ளது.

ஊரடங்கால் கொரோனா குறைந்து வருகிறது

“ஊரடங்கு காரணத்தால் கொரோனா படிப்படியாக குறைந்து வருகிறது. கடந்த நான்கு நாட்களாக பாதிப்பும் குறைந்துள்ளது. தமிழகத்தில் கருப்பு பூஞ்சை நோயால் 38 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் கொரோனா இறப்புகளை மறைக்கவில்லை. 10 பேர் கொண்ட வல்லுநர் குழு அமைத்து இரண்டு நாளில் கருப்பு பூஞ்சை குறித்து ஆய்வு தொடங்கப்படும்” என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.

இலங்கை, ஜப்பானுக்கு அமெரிக்கர்கள் செல்ல வேண்டாம்

கொரோனா பரவல் அதிகமாக இருப்பதால் இலங்கை, ஜப்பானுக்கு அமெரிக்கர்கள் செல்ல வேண்டாம் என அந்நாடு எச்சரிக்கை விடுத்துள்ளது. அப்படி செல்ல விரும்பினால் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது. 

உலகளவில் 16.79 கோடி பேருக்கு கொரோனா

உலகில் 16.79 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 34.86 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். 14.93 கோடி பேர் குணமடைந்தனர். அமெரிக்காவில் புதிதாக 18,481 பேருக்கு கொரோனா உறுதி. ஒரேநாளில் 299 பேர் உயிரிழந்தனர். பிரேசிலில் ஒரேநாளில் 37,563 பேர் பாதிப்படைந்தனர். 841 பேர் பலியாகினர். மொத்த பாதிப்பு 1.61 கோடி; மொத்த பலி 4.50 லட்சம்

Background

தமிழகத்தில் கொரோனா வைரசின் இரண்டாவது அலை மிக மோசமான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதைத் தடுப்பதற்கு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை அமல் இருந்த நிலையில், நேற்று முதல் தளர்வுகளே இல்லாத ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. இந்த நிலையில், தமிழகத்தில் கடந்த சில தினங்களாக கொரோனா பாதிப்பு 35 ஆயிரத்திற்கும் அதிகமாக இருந்த நிலையில், நேற்று சற்று ஆறுதல் அளிக்கும் விதமாக கொரோனா பாதிப்பு 35 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்துள்ளது. தமிழகத்தில் நேற்று ஒரு நாளில் மட்டும் 34 ஆயிரத்து 867 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதனால், தமிழகம் முழுவதும் கொரோனா பாதித்தோர் மொத்த எண்ணிக்கை 18 லட்சத்து 77 ஆயிரத்து 211 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4 லட்சத்து 83 ஆயிரத்து 757 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் கடந்த சில தினங்களாக தினசரி பாதிப்பு 5 ஆயிரத்திற்கும் அதிகமாக பதிவாகி வந்த நிலையில், நேற்று கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4 ஆயிரத்து 985 ஆக குறைந்துள்ளது.

சென்னையைத் தவிர பிற மாவட்டங்களில் 29 ஆயிரத்து 882 ஆக கொரோனா பாதிப்பு பதிவாகியுள்ளது. சென்னையில் மட்டும் கொரோனா சிகிச்சை பெறுபவர்களின் மொத்த எண்ணிக்கை 48 ஆயிரத்து 151 ஆக பதிவாகியுள்ளது. இதுவரை தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களில் ஆண்கள் மட்டும் 11 லட்சத்து 13 ஆயிரத்து 207 நபர்கள் ஆவார்கள். பெண்கள் 7 லட்சத்து 63 ஆயிரத்து 966 ஆக பதிவாகியுள்ளது. மூன்றாம் பாலினத்தவர் 38 ஆக பதிவாகியுள்ளது. நேற்று மட்டும் தொற்று உறுதியானவர்களில் ஆண்கள் 19 ஆயிரத்து 421 நபர்கள் ஆவர். பெண்கள் 15 ஆயிரத்து 446 நபர்கள் ஆவர். கொரோனா தொற்றில் இருந்து குணம் அடைந்து வீடு திரும்பியோர் எண்ணிக்கை 27 ஆயிரத்து 26 ஆக உயர்ந்துள்ளது. இதனால், மாநிலம் முழுவதும் கொரோனா தொற்றில் இருந்து குணம் அடைந்து வீடு திரும்பியோர் எண்ணிக்கை 15 லட்சத்து 54 ஆயிரத்து 759 ஆக அதிகரித்துள்ளது. கடந்த சில தினங்களாக கொரோனா உயிரிழப்பு மிகுந்த கவலை அளிக்கும் விதமாக பதிவாகி வந்தது. அதிகபட்சமாக சில தினங்களுக்கு முன்பு ஒரே நாளில் 467 நபர்கள் உயிரிழந்தனர். ஆனால், பின்னர் படிப்படியாக குறையத் தொடங்கிய கொரோனா உயிரிழப்பு இன்று 404 ஆக குறைந்துள்ளது. மேலும், மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 20 ஆயிரத்து 872 ஆக பதிவாகியுள்ளது. சென்னையில் மட்டும் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 6 ஆயிரத்து 460 ஆக பதிவாகியுள்ளது.