Assembly Live : 2,600 ஆண்டுகள் முன்பிருந்தே தமிழர்கள் எழுத்தறிவு பெற்றவர்கள் - சட்டசபையில் முதல்வர் பெருமிதம்
சட்டசபையில் இன்று நடைபெறும் காவல் மற்றும் தீயணைப்புத்துறை மீதான மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின் அப்டேட்களை உடனுக்குடன் கீழே தெரிந்து கொள்ளலாம்.
LIVE
Background
தமிழக சட்டசபை கூட்டத்தொடரின் நிதிநிலை அறிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், இன்று சட்டசபைக் கூட்டத்தொடரில் காவல்துறை மற்றும் தீயணைப்புத்துறை மீதான மானியக்கோரிக்கை மீதான விவாதம் இன்று நடைபெறுகிறது. இந்த இரு துறைகளும் முதல்வர் மு.க.ஸ்டாலின் வசம் இருப்பதால் முதல்வர் விளக்கம் அளித்து பேச உள்ளார்.
வழக்கம்போல, சட்டசபை இன்று கூடியதும் கேள்விநேரம் நடைபெறும். பின்னர், பூஜ்ய நேரம் எனப்படும் நேரமில்லா நேரத்தில் கவன ஈர்ப்பு தீர்மானங்கள், முக்கியமான மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட உள்ளது. இதைத்தொடர்ந்து, காவல் மற்றும் தீயணைப்பு, மீட்புப்பணித்துறை மீதான மானியக்கோரிக்கை விவாதம் நடக்க உள்ளது. எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியும் இந்த விவாதத்தில் பங்கேற்று பேசுகிறார். இன்று நடைபெறும் கூட்டத்தை தொடர்ந்து நாளை நடைபெறும் காவல், தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் மீதான மானியக்கோரிக்கைக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிலளித்து பேச உள்ளார்.
2,600 ஆண்டுகள் முன்பிருந்தே தமிழர்கள் எழுத்தறிவு பெற்றவர்கள் - சட்டசபையில் முதல்வர் பெருமிதம்
தமிழர்கள் 2 ஆயிரத்து 600 ஆண்டுகள் முன்பிருந்தே எழுத்தறிவு பெற்றிருந்தவர்கள் என்று சட்டசபையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதமாக கூறியுள்ளார்.
ஆர்.ஏ.புரம் பகுதியில் உள்ள வீடுகளை இடிப்பதை தமிழக அரசு நிறுத்த வேண்டும் - சட்டசபையில் ஓ.பன்னீர்செல்வம் பேச்சு
சென்னை ராஜா அண்ணாமலைபுரம் பகுதியில் இளங்கோ தெருவில் உள்ள வீடுகளை இடிப்பதை தமிழக அரசு நிறுத்த வேண்டும் என்று சட்டசபையில் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.