மேலும் அறிய
CM Stalin: 2026 சட்டப்பேரவை தேர்தலுக்காக ஒருங்கிணைப்பு குழு அமைப்பு - முதலமைச்சர் ஸ்டாலின்
CM Stalin: 2026 சட்டப்பேரவை தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் ஒருங்கிணைப்பு குழு அமைக்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர் ஸ்டாலின்
Source : abp
2026 சட்டப்பேரவை தேர்தலை எதிர்கொள்ளும் பொருட்டு, தேர்தல் பணிகளை வலுப்படுத்தும் வகையில் ஒருங்கிணைப்பு குழு அமைக்கப்பட்டுள்ளதாக திமுக தலைவரும் முதலமைச்சருமான ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
கே.என்.நேரு, ஆர்.எஸ்.பாரதி, எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் ஒருங்கிணைப்புக் குழுவில் இடம் பெற்றுள்ளனர்.
2026 ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டப்பேரவை தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் கட்சியில் மேற்கொள்ள வேண்டிய செயல்பாடுகள் குறித்து, பரிந்துரைக்கும் என கூறப்படுகிறது,
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்





















