மேலும் அறிய

TN Weather Update: தமிழ்நாட்டில் 5 நாட்களுக்கு கனமழை முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு - வானிலை மையம் தகவல்

தமிழ்நாட்டில் 5 நாட்களுக்கு கனமழை முதல் மிககனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 

தமிழகத்தின் மேல் 1.5 கிலோமீட்டர் உயரத்தில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக  
இன்று மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்கள், தென் தமிழக மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதி, தருமபுரி, சேலம், கிருஷ்ணகிரி, ஈரோடு, திருப்பூர், வேலூர், கடலூர் மாவட்டங்கள் மற்றும் புதுவை பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய இலேசானது முதல் மிதமான மழையும், நீலகிரி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும் பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.

TN Weather Update: தமிழ்நாட்டில் 5 நாட்களுக்கு கனமழை முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு - வானிலை மையம் தகவல்

நாளை, மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்கள், தென் தமிழக மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதி, தருமபுரி, சேலம், கிருஷ்ணகிரி, ஈரோடு, திருப்பூர், மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய இலேசானது முதல் மிதமான மழையும், நீலகிரி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும் பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.

வரும் 14ஆம் தேதி நீலகிரி, கோவை, தென் தமிழக மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் காற்றுடன் கூடிய கன முதல் மிக கன மழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும் பெய்யக்கூடும்.

TN Weather Update: தமிழ்நாட்டில் 5 நாட்களுக்கு கனமழை முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு - வானிலை மையம் தகவல்

வரும் 15ஆம் தேதி மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்கள், கடலோர மாவட்டங்கள் மற்றும் காரைக்கால், புதுவை பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் காற்றுடன் கூடிய கன முதல் மிக கன மழையும், ஏனைய மாவட்டங்களில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும் பெய்யக்கூடும்.

வரும் 16ஆம் தேதி மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்கள், தென் கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் காற்றுடன் கூடிய கன முதல் மிக கன மழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் காரைக்கால், புதுவை பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும் பெய்யக்கூடும்

தென் மேற்கு திசையிலிருந்து தரைக்காற்று வீச வாய்ப்புள்ளதால் திருவள்ளூர், வேலூர், காஞ்சிபுரம், கள்ளக்குறிச்சி திருவண்ணாமலை, பெரம்பலூர் மற்றும் திருச்சிராப்பள்ளி மாவட்டங்களில்  அதிகபட்ச வெப்பநிலை 2  முதல் 3  டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூட்டும்.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 36 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.

கடந்த 24 மணி நேரத்தில் மழை அளவு (சென்டிமீட்டரில்): 

குழித்துறை  (கன்னியாகுமரி) 7, தக்கலை  (கன்னியாகுமரி) 6, பெருஞ்சாணி  அணை (கன்னியாகுமரி), சோழவந்தான்  (மதுரை)  தலா  5, வால்பாறை  (கோவை),  கலியால் (கன்னியாகுமரி) தலா  4,  நாகர்கோயில்   3, ஆண்டிபட்டி  (மதுரை),  சின்னக்கல்லார்  (கோவை) தலா 2.

மீனவர்களுக்கான எச்சரிக்கை :  

12-05-2021: தென்மேற்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென் கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40-50 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

13-05-2021: குமரிக்கடல் பகுதி, தென் கிழக்கு அரபிக்கடல், லட்சத்தீவு மற்றும் மாலத்தீவு பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 45-55 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும். தென்மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40-50 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

TN Weather Update: தமிழ்நாட்டில் 5 நாட்களுக்கு கனமழை முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு - வானிலை மையம் தகவல்

வரும் 14-05-2021 அன்று தென் கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய லட்சத்தீவு, மாலத்தீவு பகுதியில் புதிய  காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாவதன் காரணமாக குமரிக்கடல் பகுதி, லட்சத்தீவு, மாலத்தீவு, தென் கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 45-55 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

தென்மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40-50 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

15.05.2021,16.05.2021: (காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் அதனை தொடர்ந்து வட மேற்கு திசையில் நகர்ந்து புயலாக வலுபெறக்கூடும்)  இதன் காரணமாக
குமரிக்கடல் பகுதி, லட்சத்தீவு, மாலத்தீவு, தென்மேற்கு அரபிக்கடல் தென் கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40-50 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில்  சூறாவளி காற்று மணிக்கு 60-70 கிலோமீட்டர் வேகத்திலும்  இடைஇடையே 80 கிலோமீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்

மீனவர்கள்  இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென அறியுறுத்தப்படுகிறார்கள்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Sunita Kejriwal: டெல்லி முதலமைச்சராகிறாரா சுனிதா கெஜ்ரிவால்? கவனம் ஈர்க்கும் முன்னாள் ஐ.ஆர்.எஸ். அதிகாரி - யார் இவர்?
டெல்லி முதலமைச்சர் ஆகிறாரா சுனிதா கெஜ்ரிவால்? கவனம் ஈர்க்கும் முன்னாள் ஐ.ஆர்.எஸ். அதிகாரி - யார் இவர்?
கடன் பிரச்னையால் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தற்கொலை - தேனியில் சோகம்
கடன் பிரச்னையால் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தற்கொலை - தேனியில் சோகம்
Kanimozhi MP:
Kanimozhi MP: "தி.மு.க.விற்குத்தான் வெற்றி! கோவையில் இரண்டாவது இடத்திற்கு தான் போட்டி" - கனிமொழி எம்.பி. நம்பிக்கை
பெண் தொழில்முனைவோரை வழிநடத்தத் தயாரா?- ஊதியத்துடன் விண்ணப்பிக்கலாம்!- எப்படி?
பெண் தொழில்முனைவோரை வழிநடத்தத் தயாரா?- ஊதியத்துடன் விண்ணப்பிக்கலாம்!- எப்படி?
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Annamalai Nomination Issue : வேட்புமனு சர்ச்சை” இது ஒரு விஷயமே இல்ல” அ.மலையின் புது TWIST | BJPSingai Ramachandran :”அ.மலை மிரட்டி பணம் வசூலித்துள்ளார்” சிங்கை ராமச்சந்திரன் பகீர் | AnnamalaiJothimani Issue -'’5 வருசமா எங்க போனீங்க?’’ ஜோதிமணியை சுத்துப்போட்ட பெண்கள்Sowmiya anbumani - ஹிந்தியில் வாக்கு கேட்ட செளமியா அன்புமணி வைரலாகும் வீடியோ!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Sunita Kejriwal: டெல்லி முதலமைச்சராகிறாரா சுனிதா கெஜ்ரிவால்? கவனம் ஈர்க்கும் முன்னாள் ஐ.ஆர்.எஸ். அதிகாரி - யார் இவர்?
டெல்லி முதலமைச்சர் ஆகிறாரா சுனிதா கெஜ்ரிவால்? கவனம் ஈர்க்கும் முன்னாள் ஐ.ஆர்.எஸ். அதிகாரி - யார் இவர்?
கடன் பிரச்னையால் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தற்கொலை - தேனியில் சோகம்
கடன் பிரச்னையால் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தற்கொலை - தேனியில் சோகம்
Kanimozhi MP:
Kanimozhi MP: "தி.மு.க.விற்குத்தான் வெற்றி! கோவையில் இரண்டாவது இடத்திற்கு தான் போட்டி" - கனிமொழி எம்.பி. நம்பிக்கை
பெண் தொழில்முனைவோரை வழிநடத்தத் தயாரா?- ஊதியத்துடன் விண்ணப்பிக்கலாம்!- எப்படி?
பெண் தொழில்முனைவோரை வழிநடத்தத் தயாரா?- ஊதியத்துடன் விண்ணப்பிக்கலாம்!- எப்படி?
PM Modi: ”திமுகவின் ஆட்சியை பார்த்து சலிப்பு.. மக்கள் எதிர்பார்க்கும் பாஜகவின் செழிப்பு” - பிரதமர் மோடி..
”திமுகவின் ஆட்சியை பார்த்து சலிப்பு.. மக்கள் எதிர்பார்க்கும் பாஜகவின் செழிப்பு” - பிரதமர் மோடி..
Gouri Kishan : என்னது 96 ராம் - ஜானுவுக்கு நிஜமாவே கல்யாணமா? ஷாக்கான நெட்டிசன்ஸ்..
என்னது 96 ராம் - ஜானுவுக்கு நிஜமாவே கல்யாணமா? ஷாக்கான நெட்டிசன்ஸ்..
Lok Sabha Elections 2024: பாஜக தவறு செய்தால் நாங்கள் கேட்போம்  -  மதுரையில் எடப்பாடி பழனிசாமி
பாஜக தவறு செய்தால் நாங்கள் கேட்போம் - மதுரையில் எடப்பாடி பழனிசாமி
Prithviraj Sukumaran : 98-இல் இருந்து 68 கிலோ.. ஆடு ஜீவிதம் படத்திற்காக 30 கிலோ எடை குறைத்த பிருத்விராஜ்
98-இல் இருந்து 68 கிலோ.. ஆடு ஜீவிதம் படத்திற்காக 30 கிலோ எடை குறைத்த பிருத்விராஜ்
Embed widget