EB Bill Date Extended: மின்கட்டணம் செலுத்த 4 மாவட்ட மக்களுக்கு 15 நாட்கள் கூடுதல் அவகாசம் - அமைச்சர் செந்தில்பாலாஜி
சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்ட மக்களுக்கு மின்கட்டணம் செலுத்த 15 நாட்கள் கூடுதல் அவகாசம் வழங்கப்படும் என்று அமைச்சர் செந்தில்பாலாஜி தகவல் தெரிவித்துள்ளார்.
வங்கக்கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக சென்னையில் கடந்த சனிக்கிழமை முதல் தீவிர மழை பெய்து வருகிறது. இதனால், சென்னை முழுவதும் சாலைளில் மழைநீர் வெள்ளம்போல தேங்கி நிற்கிறது. பல பகுதிகளில் மின்வெட்டு ஏற்பட்டு, அதை சரிசெய்யும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், சென்னை கோடம்பாக்கம் துணைமின் நிலையத்தில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி இன்று ஆய்வு மேற்கொண்டார். அப்பகுதியில் எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து மின் வாரிய அதிகாரிகளிடம் கேட்டறிந்த அமைச்சர் செந்தில் பாலாஜி, மழையால் பாதிக்கப்பட்டுள்ள பகுதியில் விரைந்து மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
பின்னர் அமைச்சர் செந்தில்பாலாஜி நிருபர்களைச் சந்தித்தார். அப்போது, அவர் கூறியதாவது,
"வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ளும் விதமாக பல்வேறு உத்தரவுகளை முதலமைச்சர் வழங்கியுள்ளார். 25 ஆயிரம் மின்கம்பங்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாற்றப்பட்டுள்ளது. சென்னையில் 4000 மின்வாரிய பணியாளர்கள் இரவு பகலாக உழைத்து வருகின்றனர். பொதுமக்களுக்கு பாதிப்பில்லாத வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நேற்று 71 இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்பட்ட நிலையில் 41 இடங்களில் மீண்டும் மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது.
66 ஆயிரம் விடுகளில் மின் விநியோகம் நிறுத்தப்பட்ட நிலையில், 28 ஆயிரம் வீடுகளுக்கு மின் வினியோகம் மீண்டும் வழங்கபட்டுள்ளது. மீதமுள்ள இடங்களில் இன்று மாலை அல்லது நாளை காலைக்குள் மின் வினியோகம் வழங்கப்படும். கடந்த ஆட்சியில் மழையால் பாதிப்பு ஏற்பட்டால் மின் விநியோகம் கிடைக்க 10 நாட்கள் ஆகும். ஆனால், முதலமைச்சரின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் இந்த ஆண்டு விரைவாக மின் விநியோகம் வழங்கப்பட்டுள்ளது.
மழைநீர் விரைவாக அகற்றப்பட்டு வருகிறது. விரைவில் அனைத்து இடங்களில் மின் வினியோகம் அளிக்கப்படும். சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளுவர், செங்கல்பட்டு மாவட்டங்களில் மின் கட்டணம் செலுத்த 15 நாட்கள் கூடுதல் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
தருமபுரியில் பரபரப்பு! ரயிலும் வருது.. பாறையும் உருண்டது.. தடம் புரண்ட பெட்டிகள்.!
வடசென்னை அனல் மின் நிலையத்தில் ஏற்பட்ட பாதிப்புகள் மேட்டூர், திருச்சி அனல்மின் நிலையத்தில் கூடுதலாக உற்பத்தி செய்த மின்சாரத்தை கொண்டு சரி செய்யப்பட்டது. மழைக்காலம் என்பதால் நிர் மின் உற்பத்தி அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும், 2016-17 ஆண்டுகளில் வடசென்னை அனல்மின் நிலையத்தில் பாதிப்பு ஏற்பட்ட போது சரி செய்ய 2 மாதம் கால அவகாசம் ஏற்பட்டது. ஆனால் தற்போது நேற்று ஏற்பட்ட பாதிப்புகளை சரி செய்து இன்று பிற்பகலுக்குள் மின் உற்பத்தியை தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
திருச்சியில் ஒரு இடத்தில் விபத்து ஏற்பட்டது. ஆனால் முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதால் கடந்த காலங்களை போல் பெரிய அளவில் விபத்து ஏற்படவில்லை. 2 ஆயிரத்து 700 புகார்களில் நேற்று ஒரே நாளில் 900 புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் எடுத்த நடவடிக்கை காரணமாக அனைத்து துறைகளும் சிறப்பாக செயல்பட்டு பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு ஏற்படாத வகையில் விரைந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது."
இவ்வாறு அவர் கூறினார்.
Heavy Rain : கரையைக் கடந்தது காற்றழுத்தம்.. ஆனாலும் மழை இருக்கு - வானிலை எச்சரிக்கை!
மேலும் இன்றைய முக்கியச் செய்திகள்...
ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்