TamilNadu Power Shutdown: தமிழகத்தில் நாளை(08-07-2026) எங்கெல்லாம் மின் தடை ஏற்படும்? எத்தனை மணி நேரம்? - லிஸ்ட் வந்தாச்சு
Tamil Nadu Power Shutdown (08-07-2026): தமிழகத்தில் நாளை எங்கெல்லாம் மின் தடை ஏற்படும் பகுதிகளின் விவரங்களை மின்சார வாரியம் வெளியிட்டுள்ளது.

Tamil Nadu Power Shutdown: தமிழ்நாட்டில் நாளை (ஜூலை 08 ஆம் தேதி) எந்தெந்த மாவட்டங்களில் மின் தடை ஏற்படும் பகுதிகள் குறித்த அறிவிப்பை மின்சாரம் வாரியம் வெளியிட்டுள்ளது.
மாதாந்திர பராமரிப்புப் பணிகள்
தமிழ்நாட்டில் மாதாந்திர மின் பராமரிப்புப் பணிகள் காரணமாக மின்சாரம் நிறுத்தப்படும்போது, அது குறித்து முந்தைய நாள் அறிவிக்கப்படும். இந்த பராமரிப்புப் பணிகளின்போது, சிறிய பழுதுகளைச் சரிசெய்வது, மின்கம்பங்கள் மற்றும் மின்வழித்தடங்களில் உள்ள மரக்கிளைகளை அகற்றுவது போன்ற பல்வேறு பணிகளில் மின்சார வாரிய ஊழியர்கள் ஈடுபடுவார்கள். இந்நிலையில், தமிழ்நாட்டில் நாளை சென்னை, கோவை, நாமக்கல், உடுமலைப்பேட்டை, தருமபுரி,உள்ளிட்ட இடங்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படவுள்ளது. சில மாவட்டங்களில் மின்தடை நேரம் மாறுபடுகிறது.
மின்சாரம் நிறுத்தப்படும் இடங்கள்:
சென்னை ( 9 to 2)
கொட்டிவாக்கம்: திருவள்ளுவர் நகர் 1-வது பிரதான சாலை, திருவள்ளுவர் நகர் 3-வது முதல் 6-வது பிரதான சாலை, திருவள்ளுவர் நகர் 7-வது முதல் 33-வது குறுக்குச் சாலைகள், 1-வது மற்றும் 3-வது அவென்யூ, வீட்டுவசதி வாரிய அடுக்குமாடி குடியிருப்புகள் H12 முதல் H40 மற்றும் சுற்றியுள்ள அனைத்துப் பகுதிகளும்.
பெசன்ட் நகர்: சாஸ்திரி நகர் 1-வது அவென்யூ, சாஸ்திரி நகர் 1-வது மற்றும் 2-வது குறுக்குத் தெருக்கள், 9-வது லேன், ஜீவரத்னம் நகர் 1-வது பிரதான சாலை, தொலைபேசி நிலையம், வணிக வளாகம்.
நொளம்பூர்: மேற்கு முகப்பேர் 5 முதல் 8-ம் பிளாக்குகள், கவிமணி சாலை.
கோவை (9 to 4)
பெத்தாபுரம், தண்ணீர்பந்தல், கோட்டைப்பிரிவு, ஒன்னிபாளையம் சாலை, அறிவொளி நகர், சின்னமடம்பாளையம், மடம்பாளையம், செல்வபுரம், சாந்திமேடு, பாரதி நகர், சமநாயக்கன்பாளையம் சாலை, கண்ணர்பாளையம் சாலை, வகுதம்பாளையம், தேவனாம்பாளையம், செடிபுதூர் ஒரு பகுதி, கபாலங்கரை ஒரு பகுதி, எம்மேகவுண்டம்பாளையம், செரிபாளையம், ஆண்டிபாளையம், செங்குட்டுப்பாளையம், என்.ஜி.புதூர், பெரும்பதி, முள்ளுபாடி, வடக்கிபாளையம்.
ஈரோடு (9 to 5)
சிப்காட் பெருந்துறை, டவுன் பெருந்துறை, வடக்கு பெருந்துறை, கிராமிய சிப்காட் SEZ வளாகம், சின்னவேட்டுவபாளையம், பெரியவேட்டுவபாளையம், கோட்டைமேடு, பெருண்டை மேற்குப் பக்கம், சின்னமடத்துப்பாளையம், பெரியமடத்துப்பாளையம், ராயரோடு டவுன், சூரம்பட்டி நல்லரோடு, சாலையோரம், எஸ்.ஆர்.கே. என்.ஜி.ஜி.ஓ.காலனி, வீரப்பன்சத்திரம், இடையன்காட்டுவலசு, முனிசிபால்காலனி, ஆசிரியர் காலனி, பெருந்துறைரோடு, சம்பத்நகர், வெட்டுக்காட்டுவலசு
பல்லடம் ( 9 to 4)
அண்ணா நகர், குமரன் ஊட்டி, செம்மிபாளையம், சுக்கன்பாளையம், பெரும்பலி, உஞ்சப்பாளையம், பல்லடம் ஹைடெக், விகாஷினி ஊட்டி, கே.அய்யம்பாளையம்.
நாமக்கல் (9 to 5)
சோலசிராமணி, பல்லக்கபாளையம்.
கரூர் (9 to 5)
ஜெகதாபி, பாலபட்டி, வில்வமரத்துப்பட்டி, கணியாலம்பட்டி, வீரியபட்டி, சுண்டுகுழிப்பட்டி, முத்துரெங்கம்பட்டி, பண்ணப்பட்டி, காளையப்பட்டி, வரவாணி வடக்கு, மேலப்பாகுத்தி, சி.புதூர், வெரளிப்பட்டி
உடுமலைப்பேட்டை (9 to 4)
கொத்தமங்கலம், பொன்னாரி, வெள்ளியம்பாளையம், ஐயம்பாளையம், குமாரபாளையம், வரதராஜபுரம், முருங்கம்பட்டி, சுங்கரமடகு, குடிமங்கலம்..
தஞ்சாவூர் (9 to 3)
அய்யம்பேட்டை, மேலட்டூர், வீரமரசம் பேட்டை, புடலூர், அச்சம்பட்டிமணிமண்டபம்.
திருவாரூர் (9 to 3)
நீடாமங்கலம் பச்சகுளம் சர்வமான்யம், ஆர்.பி.சாவடி.
புதுக்கோட்டை (9 to 4)
மராமடக்கி முழுப் பகுதி, அறந்தாங்கி நகர்ப்பகுதி, தல்லாம்பட்டி முழுப் பகுதி, அரிமளம் முழுப் பகுதி, அலியநிலை முழுப் பகுதி.
தருமபுரி (9 to 5)
அதியமான்கோட்டை, ஏலகிரி, சாமிசெட்டிபட்டி, பாளையம்புதூர், தடங்கம், ரெட்டிஹள்ளி, ஹெச்பிசிஎல், நாகர்கூடல், பரிகம், போலீஸ் குவாட்டர்ஸ், வெண்ணம்பட்டி.
திண்டுக்கல் (9 to 2)
ரெட்டியார்சத்திரம்.செம்மாடிப்பட்டி, பழங்கானூத்து.
தேனி (10 to 4)
சின்னமனூர், பாலவராயன்பட்டி, குண்டலநாயக்கன்பட்டி, அம்மாபட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள்.
விருதுநகர் (9 to 2)
மம்சாபுரம் - மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள் நல்லமனைக்கன்பட்டி - சோழபுரம், தேசிகபுரம், ஆவரந்தை, கிளவிக்குளம், சங்கரலிங்காபுரம், முதுகுடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான தொட்டியப்பட்டி - முத்துலிங்கபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள் படிக்கசுவைத்தான்பட்டி - வன்னியம்பட்டி, கொட்டாங்குளம், வன்னியம்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள்.
கன்னியாகுமரி (9 to 3)
திருவிதாங்கோடு, பத்மநாபபுரம், விளாவூர், முளகுமூடு, குமாரபுரம், வில்லுக்குறிகோட்டார், இளங்கடை, ஞானேசபுரம், ராமவர்மபுரம், கலெக்டரேட், மீனாட்சிபுரம், ராமன்புதூர், வீரநாராயணமங்கலம் கோட்டார், எலங்காடை, ஞானேசபுரம், ராமவர்மபுரம், ராமவர்மபுரம், ராமவர்மபுரம் வீரநாராயணமங்கலம் பாக்கோடு, குழித்துறை, உண்ணாமலைக்கடை, வல்வைதாங்கோஷ்டம், கடையல்.
மின்தடை நேரத்தில் செய்ய வேண்டியவை
மின்தடை காலங்களில் தகவல்களைப் பெறுவது மிகவும் முக்கியம். மின்சாரம் மீண்டும் வழங்கப்படும் நிலை மற்றும் அவசர அறிவிப்புகள் குறித்து தெரிந்துகொள்ள, குடியிருப்போர் பேட்டரி சக்தியில் இயங்கும் வானொலிகள் அல்லது முழுமையாக சார்ஜ் செய்யப்பட்ட மொபைல் போன்களை பயன்படுத்த வேண்டும். மொபைல் பேட்டரி ஆயுளை பாதுகாக்க, பவர் சேவிங் மோடினை இயக்கி, அவசர அழைப்புகள் மற்றும் குறுந்தகவல்கள் போன்ற தேவையான பயன்பாட்டிற்கு மட்டுமே போனைக் கொண்டு செயல்படுவது நல்லது.
பாதுகாப்பாக சமாளிக்க முடியும்
மின்தடை நேரத்தில் திடீர் மின்வெட்டு ஏற்படும் அபாயத்தைத் தவிர்க்க, லிப்டைப் பயன்படுத்தாமல் இருக்க வேண்டும். மேலும், அவசர தொடர்பு எண்கள் எளிதில் கிடைக்கும் வகையில் வைத்திருப்பதோடு, தண்ணீர், சிற்றுண்டி, மற்றும் முதலுதவி பெட்டி போன்ற அத்தியாவசிய பொருட்களையும் தயாராக வைத்திருக்க வேண்டும். இந்த முன்னெச்சரிக்கைகளைப் பின்பற்றுவதன் மூலம், குடியிருப்போர் மின்தடை நேரத்தை பாதுகாப்பாக சமாளிக்க முடியும்.
ட்ரெண்டிங் செய்திகள்






















