ஓங்கட்டும் மனிதாபிமானம்! இலங்கைக்காக சட்டப்பேரவையில் களமிறங்கிய தமிழக அரசு... கைகொடுத்த அதிமுக!
இலங்கையில் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் அனைத்து மக்களுக்கு உதவிட மத்திய அரசு அனுமதி தரக்கோரி தமிழ்நாடு சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கடந்த மாதம் 18-ஆம் தேதி கூடிய தமிழக சட்டப்பேரவை நிகழ்வின்போது, 2022-2023ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். தொடர்ந்து 19-ஆம் தேதி வேளாண் பட்ஜெட்டை வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். தொடர்ந்து 21ம் தேதி முதல் 24ம் தேதி வரை பட்ஜெட் மீது விவாதம் நடைபெற்று பேரவை கூட்டம் முடிவடைந்தது. இந்நிலையில் மானியக்கோரிக்கை மீதான விவாதம் கடந்த 6-ஆம் தேதி தொடங்கி தொடர்ந்து நடந்து வருகிறது.
இதையடுத்து, இலங்கையில் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் அனைத்து மக்களுக்கு உதவிட மத்திய அரசு அனுமதி தரக்கோரி தமிழ்நாடு சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அப்பொழுது பேசிய தமிழ்நாடு முதலமைச்சர் முக ஸ்டாலின், "இலங்கையில் உள்ள மக்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் உதவிட தமிழ்நாடு அரசு தயாராக உள்ளது. ரூ. 25 கோடி மதிப்பிலான அரிசி, பால் பவுடர், மருந்துகளை அனுப்ப வைக்க மத்திய அரசு அனுமதி அளிக்க வேண்டும். 500 டன் பால் பவுடர், 40 ஆயிரம் டன் அரிசி, 137 வகையான உயிர்காக்கும் மருந்துகள் தயார் நிலையில் இருக்கின்றன. ஏற்கனவே இதுகுறித்து மத்திய அரசிடம் அனுமதிகேட்டும் இதுவரை எந்தவொரு பதிலும் இல்லை என்று தீர்மானத்தை சட்டப்பேரவையில் முன் மொழிந்தார்.
தொடர்ந்து, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம், இலங்கை மக்களுக்கு தாங்கள் உதவ முன்வருவதாக தெரிவித்து ரூ. 50 லட்சம் தர தயார் என்று தெரிவித்தனர். அதேபோல், இலங்கை மக்களுக்கு உதவ விசிக, பாஜகவினரை சேர்ந்த எம்.எல்.ஏக்கள் தங்கள் ஒரு மாத ஊதியத்தை வழங்குகின்றனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்