(Source: ECI/ABP News/ABP Majha)
TN Headlines: தமிழ்நாட்டுக்கு தண்ணீர்.. முதியோர் உதவித் தொகை உயர்வு.. தமிழ்நாட்டின் முக்கிய செய்திகள்..!
TN Headlines Today: தமிழ்நாட்டில் இன்று இதுவரை நடந்த முக்கிய நிகழ்வுகளின் செய்திகளின் தொகுப்பை இங்கே காணலாம்.
-
RN Ravi Speech: “அரசால் மட்டுமே அனைத்தையும் சாதிக்க முடியாது: எனக்கு எதிரி இவர்கள்தான்” : ஆளுநர் ரவி ஓபன் டாக்
140 கோடி மக்கள் இருக்கு நாட்டில் அரசு மூல மட்டுமே அனைத்தையும் சாதிக்க முடியாது. நாடு வளர்ச்சியடை வேண்டுமெனில் ஒவ்வொரு மனிதனும் வளர்ச்சியை நோக்கி ஓட வேண்டும். கடந்த ஆட்சிக்காலத்தில் இருந்தவர்கள் நம்மை பின்நோக்கி அழைத்துச் சென்றனர் என தமிழ்நாடு ஆளுநர் ரவி கூறியுள்ளார். இன்று காலை சென்னை கிண்டியில் இருக்கும் ஆளுநர் மாளிகையில், எண்ணித் துணிக திட்டத்தின் கீழ் தொழில் முனைவோர் மத்தியில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி உரையாடினார். மேலும் படிக்க https://tamil.abplive.com/news/tamil-nadu/tamil-nadu-governor-rn-ravi-said-that-in-a-country-of-140-crore-people-everything-cannot-be-achieved-through-the-government-alone-130429
- அப்படிபோடு! ஒருவழியாக தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறக்க சம்மதித்த கர்நாடகா! ஆனால் ஒரு ட்விஸ்ட்!
காவிரியில் இருந்து மாதந்தோறும் குறிப்பிட்ட அளவு தண்ணீர் வழங்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி, ஜூன் மாதம் சுமார் 26 டி.எம்.சி. வரையில் தண்ணீரை தமிழ்நாட்டுக்கு கர்நாடகா தர வேண்டும். ஆனால், 3 டி.எம்.சி. தண்ணீர்தான் வழங்கியுள்ளனர். இதன் காரணமாக, மத்திய ஜல் சக்தி துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்தை தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், டெல்லியில் சந்தித்து காவிரியில் இருந்து நீர் திறந்து விடக்கோரி முதலமைச்சர் ஸ்டாலின் எழுதிய கடிதத்தை வழங்கினார். மேலும் படிக்க https://tamil.abplive.com/news/india/karnataka-deputy-cm-dk-shivakumar-says-will-release-cauvery-water-for-tamil-nadu-130396
- TN Rain Alert: நாளை இரண்டு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.. இன்னும் எத்தனை நாட்களுக்கு மழை இருக்கும்? இன்றைய வானிலை நிலவரம்..
22.07.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 23.07.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும் படிக்க https://tamil.abplive.com/news/tamil-nadu/tamil-nadu-is-expected-to-receive-light-to-moderate-rain-with-thunder-and-lightning-till-28th-the-meteorological-department-said-130435
- Old Age Pension: ஆகஸ்ட் முதலே.. முதியோர் உதவித் தொகை ரூபாய் 1,200; அமைச்சரவைக் கூட்டத்தில் அதிரடி முடிவு
தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று அதாவது ஜூலை 22ஆம் தேதி நடைபெற்றது. கலைஞர் மகளிர் உரிமை தொகை, கலைஞர் நூற்றாண்டு விழா கொண்டாட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்கப்படவிருப்பதாக ஏற்கனவே கூறப்பட்டது. இந்நிலையில் அமைச்சரவைக் கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு, முதியோர் உதவித் தொகை ரூபாய் ஆயிரத்தில் இருந்து ரூபாய் 1,200ஆக உயர்த்தப்படும் என தெரிவித்துள்ளார். மேலும் படிக்க https://tamil.abplive.com/news/india/old-age-pension-increased-to-rs-1-200-tamil-nadu-cabinet-meeting-decision-130423
- Common Syllabus: அனைத்து பல்கலைக்கழகங்களிலும் பொது பாடத்திட்டம்; இந்த கல்வியாண்டிலேயே அமல்: எதிர்ப்புக்கு மத்தியில் அமைச்சர் பொன்முடி அறிவிப்பு
அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் கலை அறிவியல் கல்லூரிகள் உட்பட அனைத்து பல்கலைக்கழகங்களிலும் பொது பாடத்திட்டம் இந்த கல்வியாண்டிலேயே அமல்படுத்தப்படும் என்று அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார். புதிய பாடங்களுக்கான பாடத்திட்டம் அடுத்த கல்வியாண்டில் அமல்படுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தலைமையில் உயர் கல்வித் துறையின் கீழ் உள்ள 13 பல்கலைக்கழக துணைவேந்தர்கள், பதிவாளர்கள் மற்றும் தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர்கள் உடனான கூட்டம் நடைபெற்றது. மேலும் படிக்க https://tamil.abplive.com/education/common-syllabus-in-all-universities-implementation-this-academic-year-minister-ponmudi-130438