TN Headlines: ஜாமின் கோரிய செந்தில் பாலாஜி... அடுத்த 3 நாட்களுக்கு கனமழை...இன்றைய முக்கிய செய்திகள் இதோ!
TN Headlines Today: தமிழ்நாட்டில் இன்று இதுவரை நடந்த முக்கிய நிகழ்வுகளின் செய்திகளின் தொகுப்பை இங்கே காணலாம்.
- Tiruvannamalai: பக்தர்களே.. நாளை பௌர்ணமி..! திருவண்ணாமலை கிரிவல நேரம் இதுதான்.. சிறப்புகள் இவைதான்..
சிவபெருமானுக்கு பல ஊர்களில் பல பெயர்களில் பல திருத்தலங்கள் அமைந்துள்ளது. தமிழ்நாட்டில் அமைந்த பஞ்ச பூத தலங்களில் நெருப்புக்கு அதாவது அக்னி தலமாக திகழ்வது திருவண்ணாமலை ஆகும். அண்ணாமலையார் கோயிலுக்கு சென்று அண்ணாமலையாரை வணங்கினால் துன்பங்கள் எல்லாம் நீங்கும் என்பது ஐதீகம் ஆகும். அமாவாசை, பௌர்ணமி, பிரதோஷம் என ஒவ்வொரு விசேஷ நாட்களிலும் அண்ணாமலையார் கோயிலுக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து வணங்கி செல்வதும், வணங்கி செல்லும் பக்தர்கள் ஈசனை நினைத்து கிரிவலம் செல்வதும் வழக்கம் ஆகும். மேலும் படிக்க
- Senthil Balaji Case: பிணை கோரி செந்தில் பாலாஜி முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல்..
ஜாமின் கோரி செந்தில் பாலாஜி சார்பில் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மேலும், அவசர வழக்காக விசாரிக்க கோரி நீதிபதி அல்லி முன்பு மூத்த வழக்கறிஞர் என்.ஆர். இளங்கோ முறையீடு செய்துள்ளார். முறையீட்டை கேட்டுக்கொண்ட நீதிபதி அல்லி " LET ME SEE" என கூறியுள்ளார். ஜாமின் மனுவை விசாரிக்க அதிகார வரம்பு இல்லை என சிறப்பு நீதிமன்றம் நேற்று திருப்பி அனுப்பியதை தொடர்ந்து இன்று செந்தில் பாலாஜி தரப்பில் ஜாமின் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மேலும் படிக்க
- EPS Condemns: மாநகராட்சியில் வீடு கட்டுவதற்கான நிபந்தனைகளை நீக்க வேண்டும் : தமிழக அரசுக்கு எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்
மாநகராட்சிப் பகுதிகளில் பழைய வீடுகளை இடித்து புதிய வீடுகளைக் கட்டுவதற்கு, ஏற்கெனவே உள்ள நிபந்தனைகளை நீக்க வேண்டுமென அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பான அறிக்கையில் “ எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவையொட்டி நடைபெற்ற நிகழ்ச்சியில் நாகர்கோவில் நகராட்சியை, மாநகராட்சியாக தரம் உயர்த்தி முதலமைச்சராக இருந்தபோது நான் அறிவிப்பு வெளியிட்டேன். நாகர்கோவில் மாநகரில் பொதுவாக குறுகிய சாலைகளும், 3 அடிக்கும் குறைவான தெருக்களும் அதிகம் உள்ளன. மேலும் படிக்க
- Cauvery Water: காவிரி மேலாண்மை ஆணையத்தில் 24,000 கன அடி நீர் திறக்க வலியுறுத்த திட்டம்.. தமிழ்நாடு அதிகாரிகள் தகவல்..
காவிரி நதி நீர் பங்கீடு குறித்து தமிழ்நாடு மற்றும் கர்நாடக அரசு முன்வைத்த கோரிக்கை மனுக்கள் மீது, முடிவு எடுக்க காவிரி மேலாண்மை ஆணையம் இன்று கூடுகிறது. இன்று கூடும் இந்த கூட்டத்தில் இரு தரப்பினருக்கும் காரசார விவாதங்கள் இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. காவிரி நதியில் இருந்து ஒவ்வொரு மாதமும் தமிழ்நாடு விவசாயத்திற்காக குறிப்பிட்ட அளவு நீரை, வழங்க வேண்டும் என கர்நாடக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் படிக்க
- TN Rain Alert: தமிழ்நாட்டில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழை கொட்டித்தீர்க்கும்.. எந்தெந்த மாவட்டங்களில்? இன்றைய மழை நிலவரம்..
29.08.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலை பகுதிகள், நீலகிரி, கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், திருச்சிராப்பள்ளி, திண்டுக்கல், மதுரை, தேனி மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது. மேலும் படிக்க