Rain Holiday: தமிழகத்தில் நாளைக்கும் மழை இருக்கு...! பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை இருக்கா? - காத்திருக்கும் மாணவர்கள்
தமிழ்நாட்டில் தொடரும் மழையால் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படுமா என பெற்றோர்கள், மாணவர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.
தமிழ்நாட்டிற்கு வட கிழக்கு பருவமழை, கடந்த மாதம் அக்டோபர் 29 ஆம் தேதி தொடங்கியது. இந்நிலையில் தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில், கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் சில இடங்களில் சாலைகளில் நீர் தேங்கியும் காணப்படுகிறது. இதையடுத்து, இன்று பல்வேறு மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
நாளை கனமழை பெறும் மாவட்டங்கள்:
கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி, நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் நாளை (நவம்பர்- 2) கன மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படுமா என பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் எதிர்பார்த்துள்ளனர்.
சென்னை:
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர் உள்பட 8 மாவட்டங்களில் இன்று கன மழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
சென்னையில் பெய்துவரும் கனமழை காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மீட்புப் பணிகளுக்கு தேசிய பேரிடர் மீட்புக்குழு தயாராக உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஆனால், நாளை சென்னையில் கன மழை வாய்ப்பில்லை என, இன்று மதியம் வெளியிட்டுள்ள வானிலை மையம் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. நாளை சென்னையில் மிதமான மழை மட்டுமே பெய்ய வாய்ப்புள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆகையால் சென்னையில், நாளை விடுமுறை அளிக்கப்படுமா என சந்தேகம் எழுந்துள்ளது. மேலும், நாளை காலையில், சாலையில் நீர் தேங்கியுள்ளதா அல்லது மழை அதிகம் பொழிகிறதா என்பதை பொறுத்துதான் விடுமுறை அறிவிக்கப்படுமா என்பது தெரிய வரும்.
இதர மாவட்டங்கள்:
தமிநாட்டின் உள்மாவட்டங்களில் இன்று இரவு பொழியும் மழையின் தாக்கத்தை பொறுத்து, நாளை விடுமுறை அறிவிப்பது குறித்து மாவட்ட ஆட்சியர்கள் முடிவு எடுப்பார்கள்.
RMC_Chennai_Autonowcast_Taluk_Experimental 2022-11-01-21:08:30 அடுத்த 2 மணி நேரத்திற்குள்ளாக வண்டலூர் பகுதிகளில் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளது pic.twitter.com/haC1bHHz2D
— Tamilnadu Weather-IMD (@ChennaiRmc) November 1, 2022
மேலும் அதிகபட்சமாக திருவள்ளூர், செங்குன்றம் 13 சென்டிமீட்டர் பெரம்பலூரில் 12 சென்டிமீட்டர் மழை பெய்துள்ளது.
RMC_Chennai_Autonowcast_Taluk_Experimental 2022-11-01-21:08:30 அடுத்த 2 மணி நேரத்திற்குள்ளாக வண்டலூர் பகுதிகளில் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளது pic.twitter.com/haC1bHHz2D
— Tamilnadu Weather-IMD (@ChennaiRmc) November 1, 2022
மீனவர்களுக்கான எச்சரிக்கை தமிழக கடற்கரைப் பகுதிகள் மன்னார் வளைகுடா பகுதி மற்றும் அதனை ஒட்டி உள்ள தென்மேற்கு வங்க கடல் பகுதியில் மணிக்கு காற்றானது 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும். எனவே மீனவர்கள் அடுத்த ஓரிரு தினங்கள் இந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்