Registration Fee Hike: அச்சச்சோ...! ஜூலை 10 முதல் வருகிறது ஆப்பு! பத்திரப்பதிவு கட்டணம் சரமாரியாக உயர்வு!
தமிழ்நாடு அரசு பத்திரப்பதிவுத் துறையால் வழங்கப்படும் பல்வேறு சேவைகளுக்கான கட்டணத்தை பலமடங்கு உயர்த்தி தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
தமிழ்நாடு அரசு பத்திரப்பதிவுத் துறையால் வழங்கப்படும் பல்வேறு சேவைகளுக்கான கட்டணத்தை பலமடங்கு உயர்த்தி தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இதில், ரசிது ஆவணக் கட்டணம் ரூபாய் 20இல் இருந்து ரூபாய் 200க்கு உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல் செட்டில்மெண்ட் பாகம் மற்றும் விடுதலை ஆவணங்களுக்கு அதிகபட்ச பதிவு கட்டணம் ரூபாய் 4 ஆயிரத்தில் இருந்து 10 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த கட்டண உயர்வு நாளை மறுநாள் அதாவது ஜூலை மாதம் 10ஆம் தேதி முதல் அமலுக்கு வரவுள்ளது.
அதேபோல், அதிகபட்ச முத்திரைத்தீர்வை ரூபாய் 25 ஆயிரத்தில் இருந்து ரூபாய் 40 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது. தனிமனை பதிவிற்கான கட்டணம் ரூபாய் 200இல் இருந்து ரூபாய் 1,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல் பொது அதிகார ஆவணக்கட்டணம் ரூபாய் 10 ஆயிரத்தில் இருந்து சொத்து மதிப்பில் 1 சதவீதம் வசூலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது,