மேலும் அறிய

Ration Card : ஒரே நாளில் ரேஷன் கார்டு... எதிர்பார்த்திருந்த மக்களுக்கு சூப்பர் வாய்ப்பு - மிஸ் பண்ணாதீங்க- வெளியான தேதி

Ration Card : புதிய ரேஷன் கார்டிற்காக விண்ணப்பித்து 3 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் காத்திருந்த நிலையில், இன்னும் இரண்டு வாரங்களில் வீட்டிற்கே நேரில் வந்து ரேஷன் கார்டு விநியோகிக்கப்படவுள்ளது. மேலும் ரேஷன் கார்டில் திருத்தம் செய்வதற்கான சிறப்பு முகாமிற்கான தேதியும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ரேஷன் கார்டிற்காக காத்திருக்கும் மக்கள்

தமிழகம் முழுவதும்  34 ஆயிரத்து 916 நியாய விலை கடைகளில் உள்ள 2 கோடியே 28 லட்சத்து 12,942 ரேஷன் கார்டுகளுக்கு உணவு பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. ரேஷன் கார்டு உணவு பொருட்களை வாங்குவதற்கான அட்டையாள அட்டையாக இல்லாமல், அடையாள ஆவணமாகவும் உள்ளது. அதிலும்  மகளிர் உரிமை தொகை பெறுவதற்கும், பேரிடர் காலங்களில் உதவித்தொகை பெறுவதற்கும் ரேஷன் அட்டை கட்டாய தேவையாக உள்ளது. இந்த நிலையில் புதிதாக ரேஷன் கார்டு கேட்டு 3 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் விண்ணப்பித்துள்ளனர். இவர்களின் உண்மை தன்மை ஆராயப்பட்டு ரேஷன் கார்டானது வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் தவெக அரசு பதவியேற்றுள்ள நிலையில்,

2 வாரங்களில் புதிய ரேஷன் அட்டை

புதிய ரேஷன் அட்டைகள் வழங்கும் பணியானது தொடங்கப்படவுள்ளது. இது தொடர்பாக தமிழக உணவுத்துறை அமைச்சர் வெங்கட்ராமன் கூறுகையில், புதிய ரேஷன் கார்டுகள் அச்சடிக்கப்பட்டு தயாராக உள்ளதாக தெரிவித்தார். 2 அல்லது 3 வார காலத்திற்குள் புதிய ரேஷன் கார்டு விநியோகிக்கும் பணி தொடங்கும் என தெரிவித்தார். அதே நேரம் ஏற்கனவே ரேஷன் கார்டு வைத்திருப்பவர்கள் முகவரி மாறியிருந்தாலும், பெயரில் குளறுபடியாக இருந்தாலும் உடனடியாக தீர்வு கிடைக்கும் வகையில் ஒவ்வொரு மாதமும் சிறப்பு முகாம் நடைபெறும், அந்த வகையில் ஒரே நாளில் ரேஷன் கார்டில் திருத்தம் செய்ய வாய்ப்பானது ஏற்பட்டுள்ளது. இதற்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

ரேஷன் கார்டில் திருத்தம் செய்ய வாய்ப்பு

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், பொது விநியோகத் திட்டத்தின் பயன்களை குடிமக்கள் எளிதில் பெறும் வகையில் தமிழ்நாடு முழுவதும் ஒவ்வொரு வட்டத்திலும் மக்கள் குறைதீர் முகாம் பிரதி மாதமும் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில்,  ஜுலை 2026 மாதத்திற்கான மாதாந்திர பொது விநியோகத் திட்ட மக்கள் குறைதீர் முகாம் சென்னையில் உள்ள உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் 19 மண்டல உதவி ஆணையாளர் அலுவலகங்களில் 11.07.2026 அன்று காலை 10.00 மணி முதல் பிற்பகல் 1.00 மணி வரை நடைபெற இருப்பதாக அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. 

ஜூலை 11ஆம் தேதி சிறப்பு முகாம்

இந்த சிறப்பு முகாமில்  குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம், கைபேசி எண் பதிவு மற்றும் மாற்றம் செய்தல் உள்ளிட்ட பொது விநியோகத் திட்டம் தொடர்பான சேவைகள் மேற்கொள்ளப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், நியாய விலைக் கடைகளில் பொருள் பெற நேரில் வருகை தர இயலாத மூத்த குடிமக்கள் உள்ளிட்டோருக்கு அங்கீகாரச் சான்றும் இந்த முகாமில்  வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

மேலும்  சேவைகள் பதிவு செய்யப்பட்ட கைப்பேசி எண்களில் பெறப்படும் கடவுச்சொல் வழியாக (OTP) மேற்கொள்ளப்படும் என்பதால் குடும்ப அட்டைதாரர்கள் பதிவு செய்யப்பட்ட கைபேசியுடன் மண்டல அலுவலகத்தை தொடர்பு கொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்ளப்படுவதாக அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. 

Advertisement

தலைப்பு செய்திகள்

கள்ளத் தொடர்பு சந்தேகத்தில் காதலி கொலை !! தனிமையில் இருந்த போது நேர்ந்த கொடூரம்
கள்ளத் தொடர்பு சந்தேகத்தில் காதலி கொலை !! தனிமையில் இருந்த போது நேர்ந்த கொடூரம்
வீட்டில் தனியாக இருந்த 12 - ம் வகுப்பு மாணவி 7 மாத கர்ப்பம் !! பள்ளி மாணவர் மீது போக்சோ
வீட்டில் தனியாக இருந்த 12 - ம் வகுப்பு மாணவி 7 மாத கர்ப்பம் !! பள்ளி மாணவர் மீது போக்சோ
அமைச்சரானது எப்படி? திருமாவளவன் சொன்னது என்ன? அமைச்சர் வன்னியரசு பிரத்யேக பேட்டி
அமைச்சரானது எப்படி? திருமாவளவன் சொன்னது என்ன? அமைச்சர் வன்னியரசு பிரத்யேக பேட்டி
மெய்யழகனுக்கு விருதுகள் இல்லை... ஆனால் மக்கள் மனதில் வெற்றி - மதுரை போஸ்டரால் பரபரப்பு !
மெய்யழகனுக்கு விருதுகள் இல்லை... ஆனால் மக்கள் மனதில் வெற்றி - மதுரை போஸ்டரால் பரபரப்பு !
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Actor Dhanush : ’பாஜகவில் இணையும் நடிகர் தனுஷ்?’ அறிவிப்பு எப்போது?
’பாஜகவில் இணையும் நடிகர் தனுஷ்?’ அறிவிப்பு எப்போது?
Bankipur Bypoll: பீகாரில் பாஜவின் கோட்டையில் ஓட்டையை போட்ட பிரசாந்த் கிஷோர்; வெற்றி பெற்றது எப்படி தெரியுமா.?
பீகாரில் பாஜவின் கோட்டையில் ஓட்டையை போட்ட பிரசாந்த் கிஷோர்; வெற்றி பெற்றது எப்படி தெரியுமா.?
டெல்லியை தொடர்ந்து ஜார்க்கண்ட்.. 6 நாட்களாக மாணவர்கள் உண்ணாவிரத போராட்டம்- கோரிக்கைகள் என்ன?
டெல்லியை தொடர்ந்து ஜார்க்கண்ட்.. 6 நாட்களாக மாணவர்கள் உண்ணாவிரத போராட்டம்- கோரிக்கைகள் என்ன?
TVK: நீட் போராட்டம்; மாணவர்கள் மீதான வழக்கு ரத்தாகவில்லையா? தவெக விளக்கம்
TVK: நீட் போராட்டம்; மாணவர்கள் மீதான வழக்கு ரத்தாகவில்லையா? தவெக விளக்கம்
Trump Vs Iran: பேச்சுவார்த்தைக்கு சிக்னல் கொடுக்கும் ட்ரம்ப்; மதிக்காமல் ஓமனுடன் ஹார்முஸ் டீல் போடும் ஈரான்
பேச்சுவார்த்தைக்கு சிக்னல் கொடுக்கும் ட்ரம்ப்; மதிக்காமல் ஓமனுடன் ஹார்முஸ் டீல் போடும் ஈரான்
Maruti Brezza Vs Renault Kiger: மாருதி பிரெஸ்ஸாவா.? ரெனால்ட் கைகரா.? குறைவான பட்ஜெட்டில் நிறைவான எஸ்யூவி எது.? தெரிஞ்சுக்கோங்க
மாருதி பிரெஸ்ஸாவா.? ரெனால்ட் கைகரா.? குறைவான பட்ஜெட்டில் நிறைவான எஸ்யூவி எது.? தெரிஞ்சுக்கோங்க
Maruti XL6 Facelift: செம லுக் யா.! பிரபலமான XL6 எஸ்யூவியின் ஃபேஸ்லிஃப்ட்டை இந்தியாவில் களமிறக்கும் மாருதி சுசூகி
செம லுக் யா.! பிரபலமான XL6 எஸ்யூவியின் ஃபேஸ்லிஃப்ட்டை இந்தியாவில் களமிறக்கும் மாருதி சுசூகி
Innova Hycross on EMI: ஹைடெக்கான இன்னோவா ஹைக்ராஸ் கார் வாங்க ஆசையா.? ரூ.1 லட்சம் முன்பணம் கட்டுனா எவ்ளோ EMI வரும்.?
ஹைடெக்கான இன்னோவா ஹைக்ராஸ் கார் வாங்க ஆசையா.? ரூ.1 லட்சம் முன்பணம் கட்டுனா எவ்ளோ EMI வரும்.?
Embed widget