Tamil Nadu Coronavirus LIVE News :கோயம்பேடு சந்தையில் 8,239 நபர்களுக்கு தடுப்பூசி
தமிழ்நாடு மற்றும் இந்தியாவில் மேற்கொள்ளப்படும் கொரோனா நோய்த் தொற்று மேலாண்மை மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த செய்திகளை உடனுக்குடன் இந்த லைவ் ப்ளாக்கில் தெரிந்து கொள்ளலாம்.

Background
கடந்த 24 மணி நேரத்தில் தமிழ்நாட்டில் 17,321 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டது. இது, கடந்த 40 நாட்களில் இல்லாத மிகக்குறைவான தினசரி பாதிப்பு எண்ணிக்கை யாகும் . தற்போது, மாநிலம் முழுவதும் 2,04,258 பேர் கொரோனா நோய்த் தொற்றுக்கு சிகிச்சைப் பெற்று வருகின்றனர். கடந்த 24 மணி நேரத்தில் 31,253 பேர் குணமடைந்தனர்.
கோயம்பேடு சந்தையில் 8,239 நபர்களுக்கு தடுப்பூசி
கொரோனா பரவலில் இருந்து மக்கள் தங்களை தற்காத்துக் கொள்வதற்கு தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்று அரசியல் கட்சித் தலைவர்களும், சுகாதாரத்துறையினரும் அறிவுறுத்தி வருகின்றனர். சென்னையில் உள்ள கோயம்பேடு சந்தையில் தடுப்பூசி செலுத்திக்கொள்ளும் வியாபாரிகளுக்கு மட்டுமே அனுமதி என்று கடந்த வாரம் சென்னை மாநகர ஆணையர் உத்தரவிட்டார். இந்த நிலையில், கோயம்பேடு சந்தையில் நேற்று மட்டும் 703 பேர் தடுப்பூசி செலுத்திக் கொண்டனர். இதுவரை கோயம்பேடு சந்தையில் 8 ஆயிரத்து 239 நபர்கள் தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர்.
தமிழ்நாட்டில் 17 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்த கொரோனா பாதிப்பு
தமிழ்நாட்டில் 16 ஆயிரத்து 813 நபர்களுக்கு கொரோனா பாதிப்பு இன்று ஒரே நாளில் உறுதி செய்யப்பட்டது. சென்னையில் மட்டும் கொரோனாவால் 1,223 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். கோவையில் தொடர்ந்து தமிழகத்தில் அதிக பாதிப்பாக இன்றும் 2 ஆயிரத்து 236 ஆக பதிவாகி உள்ளது. தமிழ்நாட்டில் இன்று மட்டும் 32 ஆயிரத்து 49 நபர்கள் குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளனர். தமிழ்நாடு முழுவதும் இன்று ஒரே நாளில் கொரோனா தொற்று காரணமாக 358 நபர்கள் உயிரிழந்துள்ளனர். இதனால், தமிழ்நாடு முழுவதும் 28 ஆயிரத்து 518 நபர்களாக கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கையாக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் 45 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.





















