TN Assembly: கோரிக்கை வைத்த உதயநிதி; உடனே ஓகே சொன்ன முதல்வர் விஜய்- தீர்மானத்தில் மாற்றம்!
Tamil Nadu Assembly: உதயநிதி கோரிக்கையை ஏற்றார் முதல்வர் விஜய்: மேகதாது தீர்மானத்தில் தனி நடுவர் மன்றம்!

எதிர்க் கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் சட்டப்பேரவையில் முன்வைத்த கோரிக்கை, இன்று கொண்டு வந்த மேகதாது அணைக்கு எதிரான தனித் தீர்மானத்தில் சேர்க்கப்படும் என்று முதல்வர் விஜய் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டமன்றத்தில் நேற்று ஆளுநர் உரையுடன் தவெக தலைமையிலான தமிழக சட்டப்பேரவை முதல் கூட்டத் தொடர் தொடங்கியது. தொடர்ந்து இன்று (ஜூன் 19) ஆளுநர் உரை மீதான விவாதம் தொடங்கியது. இதனை அடுத்து காலை 9.30 மணிக்கு சட்டப்பேரவை தொடங்கியது.
முதல்வர் விஜய் தனித் தீர்மானம்
முதலில் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர்கள், திரைப் பிரபலங்களின் மறைவுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. தொடர்ந்து காவிரி ஆற்றுக்குக் குறுக்கே, கர்நாடக அரசால் கட்டப்படத் திட்டமிடப்பட்டுள்ள மேகதாது அணைக்கு எதிராக தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் தனித் தீர்மானம் கொண்டு வந்தார்.
அதற்கு திமுக, அதிமுக, பாமக, தேமுதிக, உள்ளிட்ட அனைத்து எதிர்க் கட்சிகளும் ஆதரவு தெரிவித்துள்ளன. அதேபோல காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்ட், மமக, மஜக உள்ளிட்ட கட்சிகளும் ஆதரவு தெரிவித்து உள்ளன.
அப்போது முதல்வரின் தனித் தீர்மானத்துக்கு ஆதரவு அளித்துப் பேசிய எதிர்க் கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், ’’காவிரி நதிநீர் நடுவர் மன்றத்தோடு, மேகதாது அணை கட்டும் விவகாரத்தில் தனி நடுவர் மன்றத்தை உருவாக்க வேண்டும்’’ என்று கோரிக்கை விடுத்தார்.
இதைத் தொடர்ந்து பேசிய முதல்வர் விஜய், ’’தீர்மானத்துக்கு ஆதரவு அளித்த அனைத்து கட்சிகளுக்கும் நன்றி.
நிறைவேறிய தனித்தீர்மானம்
ஏற்கெனவே 26.05.2026 அன்று பிரத்யேகமாக தனி நடுவர் மன்றம் அமைப்பது குறித்து சட்ட வல்லுநர்கள் உடன் ஆலோசிக்கப்பட்டது. இதுகுறித்த எதிர்க்கட்சித் தலைவரின் கருத்தை 4ஆம் பத்திக்கு கீழே சேர்க்க வேண்டும் என்று பேரவைத் தலைவருக்கு வேண்டுகோள் விடுக்கிறேன்’’ என்று முதல்வர் விஜய் தெரிவித்து இருந்தார்.
இந்த நிலையில் தீர்மானம் திருத்தியவாறு முழு மனதாக நிறைவேற்றப்படுவதாக சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் தெரிவித்துள்ளார்.
Before You Go
Cauvery Issue : "நாங்களே வறட்சியில் இருக்கோம்! ஹெலிகாப்டர்ல வந்து பாருங்க" விஜய்க்கு DKS அழைப்பு!
ட்ரெண்டிங் செய்திகள்























