மேலும் அறிய

Rajinikanth: திமுக - அதிமுகவை இணைக்க ரஜினிகாந்த் முயற்சித்தாரா? உண்மையை உடைத்த சூப்பர்ஸ்டார்!

திமுக- அதிமுக-வை இணைக்கும் முயற்சியில் ரஜினிகாந்த் ஈடுபட்டாரா? என்பது குறித்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டின் சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாகி பல கட்ட பரபரப்பிற்கு பிறகு தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் இன்று  முதலமைச்சராக பொறுப்பேற்றார். தமிழ்நாட்டின் சட்டமன்ற தேர்தல் முடிவுகள் கடந்த 4ம் தேதி வெளியானாலும் தனிப்பெரும்பான்மை இல்லாததால் ஆட்சியமைக்க இயலாமல் விஜய் அவதிப்பட்டு வந்தார். 

ரஜினிதான் காரணமா?

இந்த சூழலில், திமுக மற்றும் அதிமுக இடையே கூட்டணிப் பேச்சுவார்த்தை நடைபெற்றதாகவும், அதிமுக ஆட்சியமைக்க திமுக வெளியில் இருந்து ஆதரவு அளிக்க திட்டமிட்டதாகவும் தொடர்ந்து தகவல்கள் வெளியாகியது. இந்த விவகாரத்திற்கு ரஜினிகாந்தே காரணம் என்று தொடர்ந்து இணையத்தில் தகவல்கள் வெளியானது. 

இந்த சம்பவம் தொடர்பாக ரஜினிகாந்தின் செய்தித் தொடர்பாளர் ரியாஸ் விளக்கம் அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது,  சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்  அவர்களும் மதிப்பிற்குரிய மு.க.ஸ்டாலினும் 42 ஆண்டு கால நண்பர்கள். நட்பு ரீதியாக ஸ்டாலினைச் சந்தித்தார். இதுலே எந்த அரசியலும் இல்லே. இதை மீடியா தேவையில்லாமே வேறே மாதிரி எதையும் பரப்பாதீங்க என தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

மு.க.ஸ்டாலினைச் சந்தித்த ரஜினிகாந்த்:

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றி பெறும் என்று தொடர்ந்து கருத்துக்கணிப்புகள் வெளியாகிய நிலையில், திமுக யாருமே எதிர்பாராத சூழலில் தோல்வி அடைந்தது. குறிப்பாக, அக்கட்சியின் தலைவரான முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் சுமார் 10 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார். 

மு.க.ஸ்டாலின் தோல்வி அடைந்தது பலருக்கும் பேரதிர்ச்சியை உண்டாக்கியது. தவெக-வும் தனிப்பெரும்பான்மை இல்லாமல் தவித்து வந்த நிலையில், கூட்டணியில் இருந்து காங்கிரஸ் வெளியேறிய சூழலில் ரஜினிகாந்த் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். அதன்பின்னரே, திமுக - அதிமுக கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தியதாக தகவல்கள் வெளியானது. 

ரஜினிகாந்த் மீது விமர்சனம்:

இந்த விவகாரத்திற்கு ரஜினிகாந்தே மூல காரணம் என்றும், அவர் மூலமாக பாஜக காய் நகர்த்தியதாகவும் தகவல்கள் வெளியாகியது. இந்த சூழலில், இந்த விவகாரத்திற்கும் ரஜினிக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று மறுப்பு அளிக்கப்பட்டுள்ளது.

நடிகர் ரஜினிகாந்த் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியுடன் நெருக்கமான உறவு கொண்டவர். கடந்த சட்டமன்ற தேர்தலுக்கு முன்பு கட்சி தொடங்குவதாக அறிவித்து பின்னர் உடல்நலத்தை காரணம் காட்டி கட்சி தொடங்காமல் இருந்துவிட்டார். பின்னர், கடந்த ஆட்சியில் மு.க.ஸ்டாலின் - ரஜினிகாந்த் நட்பு மேலும் வலுவாக இருந்தது.

இணையத்தில் ரஜினிகாந்த் விஜய் ரசிகர்கள் மோதல் உச்சகட்டத்தில் நடந்து வந்த தருணத்தில், ரஜினியும் திமுக-வுடன் நெருக்கமான உறவு கொண்டு வருகிறார். இந்த சூழலிலே இந்த தகவல்கள் இணையத்தில் வெளியானது.

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

புதுச்சேரி இளைஞர்களுக்கு குட் நியூஸ்! இன்னும் சில ஆண்டுகளில் 2,000 அரசு வேலை - ரங்கசாமி உறுதி!
புதுச்சேரி இளைஞர்களுக்கு குட் நியூஸ்! இன்னும் சில ஆண்டுகளில் 2,000 அரசு வேலை - ரங்கசாமி உறுதி!
பாஜக கூட்டத்தில் புகுந்த கரப்பான் பூச்சி... அமைச்சர் சொன்ன ஒற்றை வார்த்தை!
பாஜக கூட்டத்தில் புகுந்த கரப்பான் பூச்சி... அமைச்சர் சொன்ன ஒற்றை வார்த்தை!
மேய்ச்சல் நிலங்கள் மாயம்... மாடுகளின் வயிற்றில் குப்பைக் கிடங்கு! டெல்டாவில் தொடரும் உயிர் பலி அபாயம்!
மேய்ச்சல் நிலங்கள் மாயம்... மாடுகளின் வயிற்றில் குப்பைக் கிடங்கு! டெல்டாவில் தொடரும் உயிர் பலி அபாயம்!
Tamil Nadu Weather Today: இன்று மழைக்கு வாய்ப்பு! காஞ்சிபுரம், செங்கல்பட்டில் எந்த நேரத்தில் மழை?
இன்று மழைக்கு வாய்ப்பு! காஞ்சிபுரம், செங்கல்பட்டில் எந்த நேரத்தில் மழை?

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
விண்ணில் பாய்ந்த GSLV - F18: வெற்றிகரமாக நிலை நிறுத்தப்பட்ட NVS-03 செயற்கைக்கோள்!
விண்ணில் பாய்ந்த GSLV - F18: வெற்றிகரமாக நிலை நிறுத்தப்பட்ட NVS-03 செயற்கைக்கோள்!
200 ரூபாய்க்கு 1.4 கிலோ மளிகைப் பொருட்கள்! செங்கல்பட்டு மக்களுக்கு அதிரடி சலுகை! உடனே முந்துங்க!
200 ரூபாய்க்கு 1.4 கிலோ மளிகைப் பொருட்கள்! செங்கல்பட்டு மக்களுக்கு அதிரடி சலுகை! உடனே முந்துங்க!
Magalir Urimai Thogai: மகளிருக்கு ரூ.2,500 உரிமைத்தொகை எப்போது? அமைச்சர் ஜெகதீஸ்வரி முக்கிய அப்டேட்!
Magalir Urimai Thogai: மகளிருக்கு ரூ.2,500 உரிமைத்தொகை எப்போது? அமைச்சர் ஜெகதீஸ்வரி முக்கிய அப்டேட்!
TET Exam: டிசம்பரில் மீண்டும் டெட் சிறப்பு தேர்வு... புதிய விதிகளால் ஆசிரியர்கள் அதிருப்தி!
TET Exam: டிசம்பரில் மீண்டும் டெட் சிறப்பு தேர்வு... புதிய விதிகளால் ஆசிரியர்கள் அதிருப்தி!
"ஸ்டாலினுக்கு பெருந்தன்மை அதிகம்" திமுக, அதிமுக ஆதரவு கொடுத்தா ஏத்துப்பேன் - சீமான் ஓபன் டாக்
க்ரூஸர் பைக்குகளுக்கு இனி நான்தான் கிங்.. வரப்போது Harley-Davidson Sprint 440 Cruiser விலை எப்படி?
க்ரூஸர் பைக்குகளுக்கு இனி நான்தான் கிங்.. வரப்போது Harley-Davidson Sprint 440 Cruiser விலை எப்படி?
Tamilnadu Power Cut: தமிழகத்தில் நாளை (31-10-2026) எங்கெல்லாம் முழு நேர மின் தடை ? - மின் வாரியத்தின்  முழு லிஸ்ட் இதோ
தமிழகத்தில் நாளை (31-10-2026) எங்கெல்லாம் முழு நேர மின் தடை ? - மின் வாரியத்தின்  முழு லிஸ்ட் இதோ
பொதுமக்களை அச்சுறுத்துவோர் மீது அதிரடி ஆக்சன்: மயிலாடுதுறையில் தொடரும் குண்டர் சட்ட நடவடிக்கை!  
பொதுமக்களை அச்சுறுத்துவோர் மீது அதிரடி ஆக்சன்: மயிலாடுதுறையில் தொடரும் குண்டர் சட்ட நடவடிக்கை!  
Embed widget