மாணவர்கள் பாத பூஜை செய்த விவகாரம்- அமைச்சர் அன்பில் மகேஸ் அதிரடி உத்தரவு
தாம்பரத்தில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியர் தினத்தை முன்னிட்டு ஆசிரியர்களுக்கு மாணவர்கள் பாத பூஜை செய்த விவகாரத்தில் விளக்கம் கேட்கப்பட்டுள்ளதாக அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார்.
தனியார் பள்ளியில் ஆசிரியர் தின கொண்டாட்டத்தில் மாணவர்கள் ஆசிரியர்களுக்கு பாதபூஜை செய்தது கண்டிக்கத்தக்க்து என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார்.
சென்னையில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் ஆசிரியர் தினத்தையொட்டி மாணவர்கள் ஆசிரியர்களுக்கு பாதபூஜை செய்தனர். இந்த விவகாரம் சர்ச்சையை கிளப்பயது. மாணவர்கள் பாத பூஜை செய்யும் வீடியோவைப் பார்த்த பலரும் இது ஏற்றுக்கொள்ளத்தக்கது இல்லை என்று கருத்து தெரிவித்தனர்.
இந்த விவகாரம் தொடர்பாக பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழியிடன் கேள்வி கேட்கப்பட்டது. அப்போது, அவர் பதில அளிக்கையில், “ஆசிரியர்கள் பாதத்தை கழுவ வைப்பது எல்லாம் என்ன மாதிரியான கலாச்சாரம் என்று தெரியவில்லை. ஆசிரியர்களை கொண்டாட வேண்டும். நாங்கள் கொண்டாடும் வகையில் யாரும் கொண்டாடியதில்லை. ஆனால், அவர்களின் பாதங்களை கழுவுவது வன்மையாக கண்டிக்கத்தக்கது. இது குறித்து பள்ளி நிர்வாகத்திடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. ” என்று தெரிவித்தார், அதோடு, இனி இதுபோன்று நடக்காத வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதியளித்தார்.
சென்னை அசோக் நகரில் உள்ள அரசுப்பள்ளியில் நேற்று நடைபெற்ற ஆன்மீக சொற்பொழிவும், அந்த ஆன்மீக சொற்பொழிவின்போது அந்த சொற்பொழிவாளர் ஆசிரியருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சைதாப்பேட்டை அரசுப்பள்ளியில் ஆன்மீக சொற்பொழிவாளர் மகாவிஷ்ணு குருகுலக் கல்வி, மறுபிறவி குறித்து பேசிய கருத்துக்கள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
சைதாப்பேட்டை அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பரம்பொருள் அறக்கட்டலை என்ற பெயரில் ஆன்மீக சொற்பொழிவாளர் மகாவிஷ்ணு குருகுலக் கல்வி, மறுபிறவி குறித்து பேசிய கருத்துக்கள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
பள்ளி வளாகம் என்பது ஆசிரியர்களுக்கானது. நமது மாணவச் செல்வங்களுக்கானது. நமது பள்ளிக்குள் நுழைந்து மாணவர்களிடம் உரையாடுபவர்களின் பின்புலத்தை ஆராய வேண்டிய கடமை பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு உண்டு.
— Anbil Mahesh (@Anbil_Mahesh) September 6, 2024
"எந்தவொரு கருத்தையும் அறிவியல் ரீதியாக பகுத்தறிந்து சிந்திக்க வேண்டும்" என்பதை நாம்… pic.twitter.com/kjCNKem2N7
இதற்கு அந்த பள்ளியைச் சேர்ந்த ஆசிரியர் சங்கர்.” இது ஆன்மீக சொற்பொழிவா? நீங்கள் கர்மா பற்றியெல்லாம் பேசிக் கொண்டிருக்கிறீர்கள்? பள்ளியில் ஆன்மீகம் பற்றி பேசக்கூடாது.” என்று கண்டித்துள்ளார்,.
அதற்கு மகாவிஷ்ணு ஆசிரியரிடம் கேள்வி கேட்டு அவரை மரியாதை இல்லாமல் பேசியிருக்கிறார். இது பரபரப்பை ஏற்படுத்தியது.
இதுகுறித்து பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஸ் செய்தியாளர்களிடம் பேசுகையில், ’’நானும் அரசுப் பள்ளியில் படித்து வந்தவன்தான். என் துறை தமிழ் ஆசிரியர் சங்கரைத் தவறாகப் பேசிய மகா விஷ்ணுவை சும்மா விட மாட்டேன். பிற்போக்குத் தனமாக பேசிய மகா விஷ்ணுவை, ஆசிரியர் சங்கர் கேள்வி கேட்டது பெருமையாக உள்ளது.” என்று தெரிவித்தார்.
இந்நிலையில், அசோக் நகர் அரசுப்பள்ளி தலைமை ஆசிரியை அதிரடியாக திருவள்ளூர் மாவட்டத்துக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
இப்போது தாம்பரம் தனியார் பள்ளியில் மாணவர்களை பாத பூஜை செய்ய வைத்த பள்ளி நிர்வாகம் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.