மேலும் அறிய
Advertisement
குறைவான வாய்ப்பு கொண்டவர்களின் நிலையை உயர்த்த பாடுபடுங்கள் - மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான்
’’ஏபிஜே அப்துல் கலாம், இந்தியா முன்னேற்றமடைந்த நாடாக மாறுவதற்கு மாணவர்களின் பங்கு இன்றியமையாதது’’
திருவாரூரில் உள்ள தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகத்தின், 6 ஆவது பட்டமளிப்பு விழா இணைய வழியில் நடைபெற்றது. விழாவில் காணொலி காட்சி வாயிலாக சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்ற மத்திய கல்வி மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பேசியது, மாணவர்கள் தற்போது பெறும் பட்டம், உங்களுக்கு புதிய பயணத்தை அளிக்கும். தொழில்முறையில் உங்கள் கனவுகளுக்கு வடிவம் அளிக்கக் கூடியதாக இருக்கும். ஆனால், நீங்கள் கனவுகள் குறைவான வாய்ப்பு கொண்டவர்களின் வாழ்க்கையை மேம்படுத்த உதவ வேண்டும். அதாவது, பொருளாதார நிலையில் குறைந்து, தங்கள் கனவுகளை நிறைவேற்றி கொள்ள இயலாதவர்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்த உறுதி ஏற்க வேண்டும். ஏவுகணை நாயகன் என அழைக்கப்பட்ட முன்னாள் குடியரசுத் தலைவர் ஏபிஜே அப்துல் கலாம், இந்தியா முன்னேற்றமடைந்த நாடாக மாறுவதற்கு மாணவர்களின் பங்கு இன்றியமையாதது என்றார். அவரின் எண்ணத்தை மாணவர்கள் செயல்படுத்தினால், பிரதமர் மோடியின் புதிய இந்தியா உருவாகும்.
கல்வித் துறையில் பல்வேறு சீர்திருத்தங்கள் கொண்டு வரப்படுகின்றன. இதன் மூலம் வரும் ஆண்டுகளில் நமது கல்வி முறையில் நாடு மிகப்பெரிய மாற்றத்தை காண போகிறது. நேர்மையான பாதையில், உங்கள் கனவுகளை செயல்படுத்தினால் சமூகத்தில் சிறப்பான நிலையை அடைய முடியும். இதையே திருவள்ளுவர், கற்க கசடற கற்பவை கற்றபின் அதற்குத் தக என அறிவுறுத்துகிறார். எனவே, மாணவர்கள் அனைவரும், நேர்மையான வழியில் தாங்கள் கற்ற கல்வியின் படி சிறப்பான நிலையை அடைய வேண்டும் என்றார்.
நிகழ்ச்சியில், மத்திய அரசின் பாதுகாப்புத் துறை செயலாளரும் இராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் துறைத் தலைவருமான சதீஸ்ரெட்டி சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று பேசியதாவது... கல்வி நிறுவனங்களில் முக்கிய ஆராய்ச்சி செய்வதன் மூலம் முதல் வகையான தொழில்நுட்பங்களை உருவாக்கவும், புதுமையான யோசனைகளைக் கொண்டு வரவும், அவற்றை நிறுவனங்களில் பயன்பாட்டு ஆராய்ச்சியாக மாற்றவும் மாணவர்கள் முன் வர வேண்டும். இதன்மூலமாக, நிலைத்து நிற்கக் கூடிய புதுமையான உற்பத்திகள் அதிக அளவிலும் குறைந்த விலையிலும் கிடைக்கும் போது நமது நாட்டிற்கு பெருமையை தேடித்தர முடியும் என்றார். நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தின் வேந்தர் பத்மநாபன் தலைமை வகித்து மாணவர்களுக்குப் பட்டங்களை வழங்கிப் பேசியதாவது..
உள்ளூர் விவசாயிகளின் தேவைகளுக்கு பயன்படும் வகையில் விவசாய தொழில்நுட்பம் சார்ந்து ஆராய்ச்சியின் மூலம் உதவுவது, ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி மூலம் தேசிய மற்றும் உலகளாவிய அங்கீகாரத்தை பெற சிறந்தக் கல்வி நிறுவனங்களுடன் போட்டியிடுவது என இருபெரும் சவால்களை பல்கலைக்கழகம் சந்திக்கிறது. கொரோனா தொற்று பேரிடர் காலங்களில், பல்கலைக்கழகம் உள்ளூர் மக்களுக்காகச் செய்த சிறந்த நலத்திட்டங்கள் சிறப்பானது. இதுபோன்ற நலத்திட்டங்களில் மாணவர்கள் பெருமளவில் பங்கேற்ற வேண்டும் என்றார். முன்னதாக மத்திய பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற விழாவில் துணைவேந்தர் கிருஷ்ணன் வரவேற்புரை நிகழ்த்தி அறிக்கை அளித்தார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
இந்தியா
அரசியல்
உலகம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion