மேலும் அறிய
Advertisement
சென்னை உள்ளிட்ட 7 துறைமுகங்களில் 3ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
தமிழ்நாட்டின் 7 துறைமுகங்களில் வானிலையை குறிக்கும் 3ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
சென்னை, நாகப்பட்டினம் உள்ளிட்ட தமிழ்நாட்டின் 7 துறைமுகங்களில் திடீர் காற்றுடன் கூடிய மழை பெய்யக்கூடிய வானிலையை குறிக்கும் 3ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நேற்று முன்தினம் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம், அதே பகுதியில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழந்து. இது மேற்கு தென்மேற்கு திசையில் நகர்ந்து நாளை தென்மேற்கு வங்கக்கடல் பகுதியை ஒட்டிய வடதமிழகம் மற்றும் தெற்கு ஆந்திர கடலோர பகுதிகளை நோக்கி நகரும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் டிசம்பர் 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் சென்னை, கடலூர், நாகப்பட்டினம், எண்ணூர், காட்டுப்பள்ளி, பாண்டிச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய 7 துறைமுகங்களில் 3ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. திடீர் காற்றுடன் மழை பெய்யக்கூடிய வானிலை உருவாக்கி உள்ளதை குறிக்கும் வகையில் இந்தப் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
கல்வி
கல்வி
அரசியல்
பொழுதுபோக்கு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion