மேலும் அறிய

Kanniyakumari Special Train : எழும்பூர் டூ கன்னியாகுமரிக்கு சிறப்பு ரயில்.! காத்திருந்த மக்களுக்கு குட் நியூஸ்- முன்பதிவு எப்போது.?

Special Train Kanniyakumari : ரயில்களில் பயணிகள் கூட்டம் அதிகரித்து வரும் நிலையில், பொதுமக்களின் வசதிக்காக செங்கோட்டை, கன்னியாகுமரி, திருவனந்தபுரத்திற்கு சிறப்பு ரயில் அறிவிக்கப்பட்டுள்ளது.

கோடை சிறப்பு ரயில்

வெளியூர்களுக்கு சுற்றுலா செல்ல பொதுமக்கள் திட்டமிடும் நிலையில், அனைத்து ரயிலிகளிலும் முன்பதிவு முடிவடைந்துள்ளதன் காரணமாக சிறப்பு ரயில் இயக்கப்படுமா.? பொதுமக்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர். அந்த வகையில் குற்றாலத்திற்கு செல்லும் வகையில் செங்கோட்டைக்கு சிறப்பு ரயில் அறிவிக்கப்பட்டு அந்த ரயில்களுக்கான முன்பதிவு தொடங்கியுள்ளது. இந்த நிலையில் கன்னியாகுமரி, திருவனந்தபுரம், மங்களூருக்கு சிறப்பு ரயில் அறிவிக்கப்பட்டுள்ளது.

கன்னியாகுமரிக்கு சிறப்பு ரயில்

அந்த வகையில் தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில், பயணிகளின் கூடுதல் நெரிசலை சமாளிக்க சிறப்பு கோடை ரயில்களை இயக்கப்படவுள்ளதாக தெரிவித்துள்ளது. அந்த வகையில், சென்னை எழும்பூர் – கன்னியாகுமரி வாராந்திர சூப்பர்பாஸ்ட் சிறப்பு ரயில்  (ரயில் எண் 06043) சென்னை எழும்பூரில் இருந்து ஜூன் 20, 2026 (சனிக்கிழமை) இரவு 11.50 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் மதியம் 1.00 மணிக்கு கன்னியாகுமரியை சென்றடையும்.

மறுமார்க்கத்தில் (ரயில் எண் 06044) ரயில் கன்னியாகுமரியில் இருந்து ஜூன் 21, 2026 (ஞாயிற்றுக்கிழமை) இரவு 11.25 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 11.30 மணிக்கு சென்னை எழும்பூரை அடையும். இந்த சிறப்பு ரயிலானது தாம்பரம், செங்கல்பட்டு, விழுப்புரம், திருச்சி, மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில் உள்ளிட்ட முக்கிய நிலையங்களில் நின்று செல்லும் என அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருவனந்தபுரத்திற்கு சிறப்பு ரயில்

மற்றொரு சிறப்பு ரயிலாக திருவனந்தபுரம் – மங்களூரு வாராந்திர சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. (ரயில் எண் 06041) ஜூன் 21, 2026 (ஞாயிறு) இரவு 9.25 மணிக்கு திருவனந்தபுரத்தில் இருந்து புறப்பட்டு, மறுநாள் காலை 10.05 மணிக்கு மங்களூருவை அடையும்.
(ரயில் எண் 06042) ஜூன் 22, 2026 (திங்கள்) மாலை 3.15 மணிக்கு மங்களூருவில் இருந்து புறப்பட்டு, மறுநாள் அதிகாலை 4.45 மணிக்கு திருவனந்தபுரத்தை அடையும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதே போல திருவனந்தபுரம் – மங்களூரு ஒருவழி சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளதாகவும், (ரயில் எண் 06093) ஜூன் 20, 2026 அன்று காலை 7.45 மணிக்கு திருவனந்தபுரம் சென்ட்ரலில் இருந்து புறப்பட்டு, அதே நாள் மாலை 7.45 மணிக்கு மங்களூரு சந்திப்பை அடையும் என கூறப்பட்டுள்ளது. 
(ரயில் எண் 06094) மங்களூருவில் இருந்து ஜூன் 20, 2026 அன்று இரவு 8.40 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 10.15 மணிக்கு திருவனந்தபுரம் சென்ட்ரலை சென்றடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

முன்பதிவு எப்போது.?

இந்த ரயில்களுக்கான முன்பதிவை பொறுத்தவரை ரயில் எண் 06043 மற்றும் 06093 ஆகிய ரயில்களுக்கான முன்பதிவு ஜூன் 18, 2026 அன்று பிற்பகல் 2.15 மணி முதல் தொடங்கியுள்ளது. ரயில் எண் 06044, 06094, 06041, 06042 ரயில்களுக்கான முன்பதிவு ஜூன் 19, 2026 காலை 8.00 மணி முதல் தொடங்கும் என அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. 

Advertisement

தலைப்பு செய்திகள்

விவசாயிகளுக்கு சட்டசபையில் ஜாக்பாட்.! நெல், கரும்புக்கு ஊக்கத்தொகை உயர்வு- முதலமைச்சர் விஜய் அறிவிப்பு
விவசாயிகளுக்கு சட்டசபையில் ஜாக்பாட்.! நெல், கரும்புக்கு ஊக்கத்தொகை உயர்வு- முதலமைச்சர் விஜய் அறிவிப்பு
காரைக்குடி: 3 ஆண்டுகளுக்குப் பிறகு ஊத்தா மீன்பிடி திருவிழா.. மீன்கள் குவிந்ததால் மக்கள் கொண்டாட்டம்!
காரைக்குடி: 3 ஆண்டுகளுக்குப் பிறகு ஊத்தா மீன்பிடி திருவிழா.. மீன்கள் குவிந்ததால் மக்கள் கொண்டாட்டம்!
TN Assembly : 'யார் ஆட்சியில் அதிக டென்ஷன்?' பேரவையில் MRK பன்னீர்செல்வம் – அமைச்சர் ஆனந்த் இடையே ஜாலியான விவாதம்..!
யார் ஆட்சியில் அதிக டென்ஷன்? பேரவையில் ஜாலியான விவாதம்..!
'தமிழ் என்றால் கெத்து, தமிழ் என்றால் POWER' சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் கர்ஜனை
'தமிழ் என்றால் கெத்து, தமிழ் என்றால் POWER' சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் கர்ஜனை
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
விவசாயிகளுக்கு சட்டசபையில் ஜாக்பாட்.! நெல், கரும்புக்கு ஊக்கத்தொகை உயர்வு- முதலமைச்சர் விஜய் அறிவிப்பு
விவசாயிகளுக்கு சட்டசபையில் ஜாக்பாட்.! நெல், கரும்புக்கு ஊக்கத்தொகை உயர்வு- முதலமைச்சர் விஜய் அறிவிப்பு
TN Assembly : 'யார் ஆட்சியில் அதிக டென்ஷன்?' பேரவையில் MRK பன்னீர்செல்வம் – அமைச்சர் ஆனந்த் இடையே ஜாலியான விவாதம்..!
யார் ஆட்சியில் அதிக டென்ஷன்? பேரவையில் ஜாலியான விவாதம்..!
'தமிழ் என்றால் கெத்து, தமிழ் என்றால் POWER' சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் கர்ஜனை
'தமிழ் என்றால் கெத்து, தமிழ் என்றால் POWER' சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் கர்ஜனை
இது தான் மாற்றமா.? லஞ்சம் வாங்கிய கணவனை நீக்கிட்டு மனைவிக்கு பொறுப்பு.! TVK- வை கிண்டல் செய்யும் நெட்டிசன்கள்
இது தான் மாற்றமா.? லஞ்சம் வாங்கிய கணவனை நீக்கிட்டு மனைவிக்கு பொறுப்பு.! TVK- வை கிண்டல் செய்யும் நெட்டிசன்கள்
FCRA Bill: உங்க சந்தோஷம் தான் முக்கியம்..! DMK-விற்காக FCRA மசோதாவை தாமதப்படுத்த BJP முடிவு? காரணம் என்ன?
உங்க சந்தோஷம் தான் முக்கியம்..! DMK-விற்காக FCRA மசோதாவை தாமதப்படுத்த BJP முடிவு? காரணம் என்ன?
Sunscreen For Oily Skin: ஆய்லி ஸ்கின்னா? எண்ணெய் வடிகிறதா? 5 பொருட்களை கொண்ட டக்கரான சன்ஸ்க்ரீன் - செய்வது எப்படி?
ஆய்லி ஸ்கின்னா? எண்ணெய் வடிகிறதா? 5 பொருட்களை கொண்ட டக்கரான சன்ஸ்க்ரீன் - செய்வது எப்படி?
ARR AMEEN CAR ACCIDENT : விபத்தில் சிக்கிய ஏ.ஆர்.ரகுமான் மகன் ஓட்டிய கார்.! சென்னையில் நள்ளிரவில் நடந்தது என்ன.?
விபத்தில் சிக்கிய ஏ.ஆர்.ரகுமான் மகன் ஓட்டிய கார்.! சென்னையில் நள்ளிரவில் நடந்தது என்ன.?
CM Vijay: தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம்..! தனித்தீர்மானம் கொண்டு வரும் CM விஜய் - ஒருமனதாக நிறைவேறுமா?
தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம்..! தனித்தீர்மானம் கொண்டு வரும் CM விஜய் - ஒருமனதாக நிறைவேறுமா?
Embed widget