தெற்கு ரயில்வேயில் மதுரைக்கு மட்டும் 5 கேடயம்.. பரிசுகளை தட்டித் தூக்கிய மதுரை கோட்டம் !
ரயில்வே வார விழா கொண்டாட்டம்: மதுரை கோட்டத்திற்கு 5 கேடயங்கள் கிடைத்துள்ளது.

தெற்கு ரயில்வேயில் மதுரை கோட்டம் சாதனை: 5 கேடயங்கள் வென்று அசத்தல்!
மதுரை கோட்டம் ஐந்து கேடயங்களை வென்றுள்ளது.
2025–26 ஆம் ஆண்டில் சிறப்பான செயல்திறனை வெளிப்படுத்தியதற்காக தெற்கு ரயில்வேயின் மதுரை கோட்டம் ஐந்து கேடயங்களை வென்றுள்ளது.
71வது ரயில்வே வார விழா “விஷிஷ்ட் ரயில் சேவா புரஸ்கார் – 2026” நிகழ்ச்சி
சென்னையில் நடைபெற்ற 71வது ரயில்வே வார விழா “விஷிஷ்ட் ரயில் சேவா புரஸ்கார் – 2026” நிகழ்ச்சியில், மதுரை கோட்ட ரயில்வே மேலாளர் (DRM) ஓம்பிரகாஷ் மீனா மற்றும் கோட்ட அதிகாரிகள், தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர். என். சிங் அவர்களிடமிருந்து விருதுகளை பெற்றுக்கொண்டனர். இந்நிகழ்ச்சியில் கூடுதல் பொது மேலாளர் விபின் குமார் மற்றும் தலைமைத் துறை அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.
5 விருதுகளையும் மதுரை கோட்டம் பெற்றுள்ளது.
மதுரை கோட்டம், சென்னை மற்றும் சேலம் கோட்டங்களுடன் இணைந்து செயல்பாட்டு திறன் (Operating Efficiency) கேடயத்தையும், திருச்சிராப்பள்ளி கோட்டத்துடன் இணைந்து இயந்திரவியல் திறன் (Mechanical Efficiency) கேடயத்தையும் வென்றது. மேலும், RailMadad சேவைக்கான இரண்டாம் இட கேடயம், சிறந்த ரயில்வே பள்ளிக்கான கேடயம் (மதுரை ரயில்வே மேல்நிலைப் பள்ளி), மற்றும் சிறப்பாக பராமரிக்கப்பட்ட Running Room-க்கான கேடயம் (மதுரை) ஆகிய விருதுகளையும் மதுரை கோட்டம் பெற்றுள்ளது.
ட்ரெண்டிங் செய்திகள்






















