மேலும் அறிய

நெல்லை, தூத்துக்குடிக்கு சிறப்பு ரயில்.! முன்பதிவு எப்போது.? தெற்கு ரயில்வே அறிவிப்பு

Nellai and Tuticorin special train: தைப்பூசம் திருவிழாவையொட்டி ஏராளமான பயணிகள் வெளியூர் செல்ல திட்டமிட்டுள்ள நிலையில், தெற்கு ரயில்வே சார்பாக சென்னையில் இருந்து நெல்லை மற்றும் தூத்துக்குடிக்கு சிறப்பு ரயில் அறிவிக்கப்பட்டுள்ளது.

ரயில்களில் கூட்ட நெரிசல்- சிறப்பு ரயில் அறிவிப்பு

தைப்பூசம் திருவிழாவை முன்னிட்டு பயணிகள் கூடுதல் நெரிசலை சமாளிக்கும் வகையில் தெற்கு ரயில்வே சிறப்பு ரயில்களை இயக்க இருப்பதாக அறிவித்துள்ளது. இதுகுறித்த வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில்  சென்னை எக்மோர் – திருநெல்வேலி – தாம்பரம் இடையே சூப்பர் ஃபாஸ்ட் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  இந்த சிறப்பு ரயில் (ரயில் எண் 06001) சென்னை எக்மோரில் இருந்து நாளை (30.01.2026) (வெள்ளிக்கிழமை) இரவு 11.45 மணிக்கு புறப்படும் எனவும்,

அடுத்த நாள் காலை 11.15 மணிக்கு திருநெல்வேலி சென்றடையும் என கூறப்பட்டுள்ளது. மறுமார்க்கத்தில் (ரயில் எண் 06002)  01.02.2026 (ஞாயிற்றுக்கிழமை) இரவு 10.35 மணிக்கு திருநெல்வேலியில் இருந்து புறப்பட்டு, அடுத்த நாள் காலை 9.30 மணிக்கு தாம்பரம் சென்றடையும்  என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சென்னை- நெல்லைக்கு சிறப்பு ரயில்

இந்த சிறப்பு ரயிலில் மொத்தம் 18 ஏசி மூன்று அடுக்கு பெட்டிகள் மற்றும் 2 லகேஜ்-பிரேக் வான்கள் இணைக்கப்படும் எனவும்,  இந்த சிறப்பு ரயில் தாம்பரம், செங்கல்பட்டு, விழுப்புரம், விருத்தாச்சலம், அரியலூர், ஸ்ரீரங்கம், திருச்சிராப்பள்ளி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி ஆகிய முக்கிய நிலையங்களில் நின்று செல்லும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது 

தூத்துக்குடிக்கு சிறப்பு ரயில்

இதேபோல மற்றொரு சிறப்பு ரயிலாக தாம்பரம் – தூத்துக்குடி – சென்னை பீச் இடையே கூடுதல் சூப்பர் ஃபாஸ்ட் சிறப்பு ரயில்களும் இயக்கப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது.  (ரயில் எண் 06003) தாம்பரத்தில் இருந்து 31.01.2026 (சனிக்கிழமை) இரவு 11.50 மணிக்கு புறப்பட்டு, அடுத்த நாள் காலை 11.00 மணிக்கு தூத்துக்குடி சென்றடையும். இதன் மறுமார்க்கத்தில் (ரயில் எண் 06004) 01.02.2026 (ஞாயிற்றுக்கிழமை) இரவு 11.55 மணிக்கு தூத்துக்குடியில் இருந்து புறப்பட்டு, அடுத்த நாள் காலை 11.30 மணிக்கு சென்னை பீச் வந்தடையும்  என அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. 

முன்பதிவு எப்போது தொடங்கும்.?

இந்த சிறப்பு ரயிலில், 2 ஏசி சேர் கார் பெட்டிகள், 12 சாதாரண சேர் கார் பெட்டிகள், 4 பொதுப் பிரிவு பெட்டிகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுகான 2 இரண்டாம் வகுப்பு பெட்டிகள் இணைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சிறப்பு ரயில் விழுப்புரம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், கோவில்பட்டி உள்ளிட்ட முக்கிய நிலையங்களில் நின்று செல்லும் என கூறப்பட்டுள்ளது. இந்த அனைத்து சிறப்பு ரயில்களுக்குமான முன்பதிவு இன்று (29.01.2026) பிற்பகல் 2.15 மணி முதல் தொடங்கப்படும் என தெற்கு ரயில்வே தெரிவிக்கப்பட்டுள்ளது.

தலைப்பு செய்திகள்

விளைநிலங்களைக் கையகப்படுத்த மாட்டோம் என கொள்கை முடிவு எடுக்கத் தயாரா?: தமிழக அரசுக்கு அன்புமணி சவால்
விளைநிலங்களைக் கையகப்படுத்த மாட்டோம் என கொள்கை முடிவு எடுக்கத் தயாரா?: தமிழக அரசுக்கு அன்புமணி சவால்
Property Registration : பத்திரப் பதிவு செய்யப் போறீங்களா.? ஆகஸ்ட் 27-ல் பொதுமக்களுக்கு சூப்பர் வசதி- என்ன தெரியுமா.?
பத்திரப் பதிவு செய்யப் போறீங்களா.? ஆகஸ்ட் 27-ல் பொதுமக்களுக்கு சூப்பர் வசதி- என்ன தெரியுமா.?
Parandur Airport: கைவிடப்பட்ட பரந்தூர் விமான நிலையம்; பறந்து போனதா பல்லாயிரம் கோடி? திமுக-வுக்கு தவெக கேள்வி
Parandur Airport: கைவிடப்பட்ட பரந்தூர் விமான நிலையம்; பறந்து போனதா பல்லாயிரம் கோடி? திமுக-வுக்கு தவெக கேள்வி
அதிகாலை முதலே திரண்ட பக்தர்கள்! வல்லக்கோட்டை முருகன் கோயிலில் விமரிசையாக நடந்த சிறப்பு அபிஷேகம்!
அதிகாலை முதலே திரண்ட பக்தர்கள்! வல்லக்கோட்டை முருகன் கோயிலில் விமரிசையாக நடந்த சிறப்பு அபிஷேகம்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அமெரிக்கா-ஈரான் சண்டையால் வந்த வினை.! 4 இந்திய நிறுவனங்களுக்கு ஆப்பு வைத்த ட்ரம்ப்; நடந்தது என்ன.?
அமெரிக்கா-ஈரான் சண்டையால் வந்த வினை.! 4 இந்திய நிறுவனங்களுக்கு ஆப்பு வைத்த ட்ரம்ப்; நடந்தது என்ன.?
Parandur Airport: கைவிடப்பட்ட பரந்தூர் விமான நிலையம்; பறந்து போனதா பல்லாயிரம் கோடி? திமுக-வுக்கு தவெக கேள்வி
Parandur Airport: கைவிடப்பட்ட பரந்தூர் விமான நிலையம்; பறந்து போனதா பல்லாயிரம் கோடி? திமுக-வுக்கு தவெக கேள்வி
TET விலக்கு தீர்மானம்: நிரந்தர பாதுகாப்புக்கு நாடாளுமன்ற சட்டத் திருத்தமே அவசியம்- ஆசிரியர் கூட்டமைப்பு கோரிக்கை
TET விலக்கு தீர்மானம்: நிரந்தர பாதுகாப்புக்கு நாடாளுமன்ற சட்டத் திருத்தமே அவசியம்- ஆசிரியர் கூட்டமைப்பு கோரிக்கை
Mojtaba Khamenei Video: ட்ரம்ப்பை அலற வைத்த ஈரான்.! மொஜ்தபா கமேனியின் முதல் பரபரப்பு வீடியோ; ஈரானியர்கள் குஷி
ட்ரம்ப்பை அலற வைத்த ஈரான்.! மொஜ்தபா கமேனியின் முதல் பரபரப்பு வீடியோ; ஈரானியர்கள் குஷி
ஜி ஸ்கொயர் மாப்பிள்ளை.. லாட்டரி மருமகன்.! யாருக்காக விமான நிலையம்.? திமுக- தவெக காரசார மோதல்
ஜி ஸ்கொயர் மாப்பிள்ளை.. லாட்டரி மருமகன்.! யாருக்காக விமான நிலையம்.? திமுக- தவெக காரசார மோதல்
Bajaj Pulsar 125 & 150 Launched: அட்டகாச அம்சங்களுடன் புதிய பஜாஜ் பல்சர் 125 மற்றும் 150 அறிமுகம்; விலை என்ன.? இதோ முழு விவரம்
அட்டகாச அம்சங்களுடன் புதிய பஜாஜ் பல்சர் 125 மற்றும் 150 அறிமுகம்; விலை என்ன.? இதோ முழு விவரம்
Property Registration : பத்திரப் பதிவு செய்யப் போறீங்களா.? ஆகஸ்ட் 27-ல் பொதுமக்களுக்கு சூப்பர் வசதி- என்ன தெரியுமா.?
பத்திரப் பதிவு செய்யப் போறீங்களா.? ஆகஸ்ட் 27-ல் பொதுமக்களுக்கு சூப்பர் வசதி- என்ன தெரியுமா.?
விவசாயிகளுக்கு வந்தது செம குட் நியூஸ்! 85% நிறைவடைந்த திருக்கோவிலூர் அணைக்கட்டு!
விவசாயிகளுக்கு வந்தது செம குட் நியூஸ்! 85% நிறைவடைந்த திருக்கோவிலூர் அணைக்கட்டு!
Embed widget