மேலும் அறிய

Soorasamharam 2024: பக்தர்களே! சூரசம்ஹாரம் நடைபெறாத புகழ்பெற்ற முருகன் கோயில் - ஏன் தெரியுமா? 

Soorasamharam " முருகனின் அறுபடை கோவில்களில் போன்ற திருத்தணியில் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடைபெறுவதில்லை "

இந்து மதத்தில் பல்வேறு கடவுள்கள் இருந்தாலும், தமிழ் கடவுள் என்று அழைக்கப்படுபவர் முருகன். சங்ககாலத்தில் இருந்தே முருக வழிபாடு என்பது தமிழர் மரபில், இருந்து வந்துள்ளது. இன்றளவும் தமிழ்நாட்டில் பெரும்பாலான நபர்கள் வழிபடும், தெய்வமாக முருகர் இருந்து வருகிறார். தமிழ்நாடு முழுவதும் முருகர் கோயில்கள் இருந்தாலும், அறுபடை கோவில்கள் முக்கியத்துவம் பெறுகின்றன. திருப்பரங்குன்றம் , திருச்செந்தூர் , பழனி , சுவாமிமலை , திருத்தணி , பழமுதிர்ச்சோலை ஆகிய ஆறு கோயில்கள் முக்கிய இடம் பிடித்துள்ளன. 

அறுபடை கோயில்கள்

அறுபடை கோயில்களில் ஐந்தாவது கோவிலாக, திருத்தணி அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உள்ளது. தொண்டை நாட்டில் அமைந்துள்ள மிக முக்கிய கோயில்களில் ஒன்றாக இந்த கோயில் விளங்கி வருகிறது. தேவர்களை அச்சுறுத்தி வந்த , சூரனை வதம் செய்த பிறகு சினம் தணிந்து வள்ளி மற்றும் தேவயானியுடன் சாந்த சொற்பமாக காட்சியளிக்கும் கோயிலாக இக்கோயில் உள்ளது. 

சூரசம்ஹாரம் 

புராண காலத்தில் சூரபத்மன் அசுரன் வாழ்ந்து வந்தான். சூரபத்மன் சிவனை நோக்கி கடும் தவம் புரிந்து 108 யுகம் உயிர் வாழவும் 1008 அண்டம் அரசாளவும் இந்திர ஞாலம் எனும் தேரையும் வரமாக பெற்றான். மேலும் சிவபெருமானிடம் சூரபத்மன், சாகாவரம் வேண்டும் என கேட்க அதற்கு சிவபெருமான் அப்படி ஒரு வரத்தை கொடுக்க முடியாது என கூறவே, ஒரு பெண்ணின் வயிற்றில் பிறக்காத பிள்ளையால் தான் தனக்கு அழிவு வர வேண்டும் என கேட்க சிவபெருமானும் அவ்வாறே அருளி விட்டு செல்கிறார். 

சூரபத்மன் கிடைத்த வரத்தை வைத்து மக்களுக்கு நல்லது செய்யாமல், தேவர்களை அடிமைப்படுத்தி நடத்தி வந்தான்.இந்திரன் முதல் அனைத்து தேவர்களையும் சிறை பிடித்து சூரபத்மன் வெற்றி கொண்டான். வேறு வழி இல்லாமல் அனைத்து தேவர்களும் சிவபெருமானிடம் சென்று தங்களை காத்தருளுமாறு வேண்டினர். 

பிறகு சிவபெருமான் தனது நெற்றிக்கண்ணில் இருந்து, தீப்பொறிகள் மூலம் ஆறு குழந்தைகளை உருவாக்கினார். ஆறு குழந்தைகளையும் ஆறு கார்த்திகைப் பெண்கள் ஞானம், ஐஸ்வர்யம், அழகு, வீரியம், வைராக்கியம், புகழ் எனும் ஆறு குணங்களைக் கொண்டவாறு வளர்த்தெடுத்தனர். உடன்பிறகு ஆறு குழந்தைகளும் ஒரே ரூபமாக பார்வதி உதவியுடன் மாற்றப்பட்டு ஆறுமுகனாக அனைவருக்கும் காட்சி தந்தார் .

அதன்படி தனது தாயார் பார்வதியின் அறிவுரையின்படி சூரபத்மனை போரில் விழுத்தி தேவர்களை விடுவிக்க முருகப்பெருமாள் முடிவு செய்தார். தனது சேனைத்தலைவரான வீரபாகுவை சூரபத்மனிடம் தூது அனுப்பி அவனைத் திருந்தும்படி எச்சரித்தார். ஆனால், சூரபத்மன், பாலகன் முருகனா எனக்கு எதிரி! யார் வந்தாலும் தேவர்களை விடுவிக்க போவதில்லை போரை சந்திக்க தயார் என சூரபதமன் சூலூரைத்தார். இதன் பிறகு 6 நாட்கள் கடுமையாக போராடிகள் நடைபெறுகிறது. 

ஆறு நாட்கள் நடைபெற்ற சூரசம்ஹாரத்தின் முடிவில் முருகன் மாமரமாக நின்ற சூரனை தன் சக்தியாகிய வேலினால் பிளந்தார். பிளவுபட்ட மாமரம் சேவலும் மயிலுமாக மாறவும், சேவலை கொடியாகவும் மயிலை வாகனமாகவும் முருகன் ஏற்றுக்கொண்டார். இன்றும் ஆண்டுதோறும் சூரசம்ஹாரம் நிகழ்ச்சியில் இதுதான் நடைபெற்று வருகிறது.

சூரசம்ஹாரம் ஏன் நடைபெறுவதில்லை ?

திருத்தணி பெயர் வர காரணமே முருகன் சினம் தணிந்து காட்சியளித்ததால், திருதணிகைமலை என அழைக்கப்பட்டது.‌ சூரனை வதம் செய்த பிறகு கோபம் தனித்து காட்சி தரும் என்பதால் , திருத்தணி முருகர் கோயிலில் சூரசம்ஹாரம் நடத்தப்படுவது கிடையாது. தமிழ்நாட்டில் இருக்கும் அனைத்து முருகர் கோயில்களிலும் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி மிக விமர்சையாக நடைபெற்றாலும், திருத்தணி முருகர் கோயிலில் , முருகனைக் குளிர்விக்க புஷ்பாஞ்சலி செய்யப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் திருத்தணி முருகர் கோயிலில் நடைபெறும் புஷ்பாஞ்சலி நிகழ்ச்சியை பார்க்க பல ஆயிரம் கணக்கான பக்தர்கள் குவியவது வழக்கம். அப்போது, ஆயிரம் தன் பூக்களை கொண்டு புஷ்பாஞ்சலி நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கமாக உள்ளது. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TVK vs DMK: விஜய்க்காக விட்டுக்கொடுக்கும் அ.தி.மு.க.? இடைத்தேர்தலில் தி.மு.க.வுடன் மல்லுகட்டுமா தவெக?
TVK vs DMK: விஜய்க்காக விட்டுக்கொடுக்கும் அ.தி.மு.க.? இடைத்தேர்தலில் தி.மு.க.வுடன் மல்லுகட்டுமா தவெக?
ADMK Meeting: அதிமுக பொதுக்குழு கூட்டம் - 16 தீர்மானங்கள் என்னென்ன? திமுக, பாஜகவிற்கு கண்டனம்
ADMK Meeting: அதிமுக பொதுக்குழு கூட்டம் - 16 தீர்மானங்கள் என்னென்ன? திமுக, பாஜகவிற்கு கண்டனம்
Premalatha Vijayakanth:
Premalatha Vijayakanth: "விஜய் முதலில் தன்னை நிரூபிக்கட்டும்” ”வாய்சவடால் மட்டும் இருக்கக்கூடாது” -பிரேமலதா விஜயகாந்த்.
Travis Head:
Travis Head: "இந்தியானாலே அடிப்பேன்" எப்படி போட்டாலும் அடிக்கும் டிராவிஸ் ஹெட் புது ரெக்கார்ட்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”யப்பா... 2 MATHS PERIOD! அமித்ஷாவின் ரியாக்‌ஷன்” மோடியை கலாய்த்த பிரியங்காவிஜய்க்காக மாஸ்டர் ப்ளான்! EPS போடும் கணக்கு! திமுக vs தவெக ட்விஸ்ட்Allu Arjun Vs Revanth Reddy : ”வெறும் சினிமாக்காரன்..நாட்டுக்கா போராடுனாரு?”ரேவந்த் vs அல்லு அர்ஜுன்!Gukesh Dommaraju Profile : குருவை மிஞ்சிய சிஷ்யன்?சொல்லி அடித்த 7 வயது சிறுவன்!யார் இந்த குகேஷ்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK vs DMK: விஜய்க்காக விட்டுக்கொடுக்கும் அ.தி.மு.க.? இடைத்தேர்தலில் தி.மு.க.வுடன் மல்லுகட்டுமா தவெக?
TVK vs DMK: விஜய்க்காக விட்டுக்கொடுக்கும் அ.தி.மு.க.? இடைத்தேர்தலில் தி.மு.க.வுடன் மல்லுகட்டுமா தவெக?
ADMK Meeting: அதிமுக பொதுக்குழு கூட்டம் - 16 தீர்மானங்கள் என்னென்ன? திமுக, பாஜகவிற்கு கண்டனம்
ADMK Meeting: அதிமுக பொதுக்குழு கூட்டம் - 16 தீர்மானங்கள் என்னென்ன? திமுக, பாஜகவிற்கு கண்டனம்
Premalatha Vijayakanth:
Premalatha Vijayakanth: "விஜய் முதலில் தன்னை நிரூபிக்கட்டும்” ”வாய்சவடால் மட்டும் இருக்கக்கூடாது” -பிரேமலதா விஜயகாந்த்.
Travis Head:
Travis Head: "இந்தியானாலே அடிப்பேன்" எப்படி போட்டாலும் அடிக்கும் டிராவிஸ் ஹெட் புது ரெக்கார்ட்!
Car Launch 2024: விதவிதமா, ரகரகமா..! 2024ல் இந்தியாவில் அறிமுகமான கார்கள் - எஸ்யுவி தொடங்கி  ஈவி வரை, இவ்வளவா?
Car Launch 2024: விதவிதமா, ரகரகமா..! 2024ல் இந்தியாவில் அறிமுகமான கார்கள் - எஸ்யுவி தொடங்கி ஈவி வரை, இவ்வளவா?
Breaking News LIVE: தமிழ்நாட்டில் பச்சைப் பொய் சொல்லி ஆட்சியை கைப்பற்றிய கட்சி தி.மு.க. - இபிஎஸ்
Breaking News LIVE: தமிழ்நாட்டில் பச்சைப் பொய் சொல்லி ஆட்சியை கைப்பற்றிய கட்சி தி.மு.க. - இபிஎஸ்
TAHDCO Loan Scheme: பெண்களுக்கான ஜாக்பாட் - ரூ.4.5 லட்சம் வரை கடன், 5.5% மட்டுமே வட்டி - யாருக்கு கிடைக்கும்?
TAHDCO Loan Scheme: பெண்களுக்கான ஜாக்பாட் - ரூ.4.5 லட்சம் வரை கடன், 5.5% மட்டுமே வட்டி - யாருக்கு கிடைக்கும்?
Margazhi Rasi Palan: மேஷ ராசிக்காரர்களே! பிறக்கப்போகுது விடிவு காலம் - மார்கழி மாத பலன்கள்!
Margazhi Rasi Palan: மேஷ ராசிக்காரர்களே! பிறக்கப்போகுது விடிவு காலம் - மார்கழி மாத பலன்கள்!
Embed widget