School Leave: மழையால் ராணிப்பேட்டையில் பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை - மாவட்ட ஆட்சியர் உத்தரவு
மழை காரணமாக ராணிப்பேட்டையில் பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
மழை காரணமாக ராணிப்பேட்டையில் பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக காற்றழுத்த தாழ்வு பகுதியின் காரணமாக பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. வட கடலோர தமிழகம் மட்டுமல்லாமல் உள்மாவட்டங்களிலும் நல்ல மழை பெய்து வருகிறது.
ராணிபேட்டையில் மழை காரணமாக இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு கருதி இன்று விடுமுறை அளிக்கப்பட்டதாக அறிவிப்பு.
குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தெற்கு ஆந்திர, வட தமிழ்நாடு கடற்கரைக்கு மற்றும் மேற்கு மத்திய அதை ஒட்டிய தென்மேற்கு வங்க கடலில் நிலை கொண்டுள்ளது. மேலும், அதனுடன் தொடர்புடைய சூறாவளி சுழற்சி சராசரி கடல் மட்டத்திலிருந்து 4.5 கிமீ வரை பரவியுள்ளது.
இதன் காரணமாக இன்று வட தமிழகம்-புதுச்சேரி, தென் கடலோர ஆந்திரா மற்றும் ராயலசீமாவில் சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும் தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, நேற்றூ காலை (22.11.2022) ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழந்து மத்தியமேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடலில் தெற்கு ஆந்திர மற்றும் வட தமிழக கடலோரப்பகுதிகளை ஒட்டி நிலவுகிறது என்றும் இதன் காரணமாக
23.11.2022 மற்றும் 24.11.2022: வடதமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களிலும், தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
25.11.2022 மற்றும் 26.11.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்):
செஞ்சி (விழுப்புரம்) 2, வளத்தி (விழுப்புரம்), மரக்காணம் (விழுப்புரம்), ஆரணி (திருவண்ணாமலை), வந்தவாசி (திருவண்ணாமலை), வல்லம் (விழுப்புரம்) தலா 1 செ.மீ மழை பதிவாகியுள்ளது.
Chennai rain: அடுத்த 3 மணி நேரம்..! கொட்டப்போகுது மழை..! எந்தெந்த மாவட்டங்களில் வாய்ப்பு..?