மேலும் அறிய

AIR: அரசு வானொலியில் ஆர்ஜேக்களுக்கு சம்பளக் குறைப்பு; நேரக் கட்டுப்பாடு... மூடுவிழாவுக்கு முன்னோட்டமா?

நீண்ட போராட்டங்களுக்குப் பிறகுதான் 1 நிகழ்ச்சிக்கு ரூ.1,600 என்ற தொகை நிர்ணயிக்கப்பட்டது. மாதத்துக்கு அதிகபட்சம் 6 நிகழ்ச்சிகள் (ஆண்டுக்கு 72 நிகழ்ச்சிகள்) மட்டுமே அளிக்கப்படும். 

அரசு வானொலிகளில் முக்கியமான சென்னை ரெயின்போ எஃப்எம்மில் நீண்ட காலமாக ஒலித்து வரும் குரல்களின் குரல் நசுக்கப்படுவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

உலகின் முதல் வானொலி 1920-ல் அமெரிக்காவிலும், இரண்டாவது வானொலி 1922-ல்  இங்கிலாந்திலும் தொடங்கப்பட்டன. சென்னை வானொலி ‘மெட்ராஸ் பிரெசிடென்சி ரேடியோ கிளப்’ என்ற பெயரில் 1924-ல் தொடங்கப்பட்டு, பல்வேறு மாற்றங்களுக்குப் பிறகு 1938-ல் அகில இந்திய வானொலியின் சென்னை வானொலி நிலையமாக மாற்றப்பட்டது.

சென்னை வானொலியில் தற்போது சென்னை ‘ஏ’, சென்னை ‘பி’, விவித்பாரதி, ரெயின்போ, கோல்டு, யூத் உள்ளிட்ட பல அலைவரிசைகள் ஒலிபரப்பாகி வருகின்றன. 

பிரசார் பாரதியின் அதிகாரப்பூர்வ செயலியான நியூஸ் ஆன் ஏர் செயலி, அகில இந்திய வானொலியின் 240-க்கும் மேற்பட்ட வானொலி அலைவரிசைகளை நேரலையாக ஒலிபரப்பி வருகிறது. இந்த ஒலிபரப்பு 85-க்கும் மேற்பட்ட நாடுகளில் உள்ள நேயர்களால் கேட்கப்படுகிறது. இதில் விவித் பாரதியின் தேசிய ஒலிபரப்பு அகில இந்திய வானொலி சேவைகளில் உலகளவில் அதிகம் பேரால் கேட்கப்படும் வானொலி சேவையாக உள்ளது.  அகில இந்திய வானொலியின் சென்னை ரெயின்போ அலைவரிசை இந்த பட்டியலில் 8ஆம் இடத்தைப் பிடித்துள்ளது.

இந்த வானொலி அலைவரிசைகள் அமெரிக்கா, இங்கிலாந்து, சிங்கப்பூர், சவுதி அரேபியா, ஆஸ்திரேலியா, ஜப்பான் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் ஒளிபரப்பாகின்றன.  சிங்கப்பூரில் சென்னை ரெயின்போ 2 ஆவது இடத்திலும், ஏஐஆர் கொடைக்கானல் 3 ஆவது இடத்திலும், சென்னை பி அலைவரிசை 5 ஆம் இடத்திலும், சென்னை எப்எம் கோல்டு 6 ஆவது இடத்திலும், ஏஐஆர் காரைக்கால் 7 ஆவது இடத்திலும், கோவை எப்எம் ரெயின்போ 8 ஆவது இடத்திலும், ஏஐஆர் மதுரை 9 ஆவது இடத்திலும், ஏஐஆர் திருச்சி எப்எம் 10 ஆவது இடத்திலும் உள்ளன.

AIR: அரசு வானொலியில் ஆர்ஜேக்களுக்கு சம்பளக் குறைப்பு; நேரக் கட்டுப்பாடு... மூடுவிழாவுக்கு முன்னோட்டமா?

உலகம் முழுக்கத் தன் சேவையை விரிவுபடுத்திய அகில இந்திய வானொலியில் பல்வேறு அலைவரிசைகள் மூடல், ஒப்பந்த ஊழியர்கள், சம்பளக் குறைப்பு, நேரக் கட்டுப்பாடு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் நிலவுவதாகக் குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது.

இதுகுறித்து அகில இந்திய வானொலியின் அங்கமான சென்னை வானொலி ரெயின்போ எஃப்எம்மில், பணியாற்றும் ரேடியோ ஜாக்கிகள் பலர் விரிவாகப் பேசினர். 

ஒவ்வோர் ஆண்டும் தகுதித் தேர்வு

''ரெயின்போ பண்பலையில் ஆர்ஜேக்கள் (ரேடியோ ஜாக்கிகள்)  யாருமே நிரந்தர ஊழியர்கள் இல்லை என்பதால், ஒவ்வோர் ஆண்டும் நாங்கள் தகுதித் தேர்வு எழுதித்தான் அங்கு வேலையைப் பெற முடியும். அப்படித் தேர்வெழுதித் தேர்ச்சி பெற்ற பிறகு, ஒவ்வொருவரும் 4 மணி நேரம் பணியாற்றுவது வழக்கம். 

நீண்ட போராட்டங்களுக்குப் பிறகுதான் 1 நிகழ்ச்சிக்கு ரூ.1,600 என்ற தொகை நிர்ணயிக்கப்பட்டது. மாதத்துக்கு அதிகபட்சம் 6 நிகழ்ச்சிகள் (ஆண்டுக்கு 72 நிகழ்ச்சிகள்) மட்டுமே அளிக்கப்படும். 

பல ஆண்டுகளுக்கு முன்பு கிரேடு 1, 2 மற்றும் 3 என்பது ஆர்ஜேக்களைத் தரம் பிரிப்பதாகவும் அவர்களுக்கு முறையே ரூ.3,900,  ரூ.2,600 மற்றும் ரூ.1,300 என்று அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதற்குக் கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்து, தென்னிந்திய ஏடிஜிக்குக் (assistant director general) கடிதம் எழுதினோம். அதைத் தொடர்ந்து கிரேடு பிரித்தது, ரத்து செய்யப்பட்டது. 

AIR: அரசு வானொலியில் ஆர்ஜேக்களுக்கு சம்பளக் குறைப்பு; நேரக் கட்டுப்பாடு... மூடுவிழாவுக்கு முன்னோட்டமா?

ஒரு ஆர்ஜேவுக்கு 4 மணி நேரப் பணி என்ற கணக்கில், ஆர்ஜேக்கள் நேரடி நிகழ்ச்சியில் இருப்போம். அதாவது காலை 6- 10 என்ற நேரத்தில் ஒருவர் பணியில் இருந்தால், 10- 2 என்ற நேரத்தில் இன்னொருவர் லைவ் நிகழ்ச்சியைப் பார்த்துக்கொள்வார். இவ்வாறு சுமார் 50 ஆர்ஜேக்கள் பணியில் இருந்தனர். 

கழிப்பறைகூடப் போக முடியாத நிலை

ஆனால் பிப்ரவரி முதல் மாற்றம் கொண்டுவரப்படும் என்று ரெயின்போ வாட்ஸப் குழுவில் செய்தி வந்தது. அதன்படி, ஆர்ஜேக்களின் பணிநேரம் 7.20 மணி நேரம் என்று நிர்வாகம் (PEX- Programming Executive) தெரிவித்தது. உதாரணத்துக்கு 1 மணிக்கு ஒருவர் பணியைத் தொடங்கினால் 8.20 வரை பணியாற்ற வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது. இதனால் கழிப்பறைகூடப் போக முடியாத நிலை ஏற்படும் என்று 30-க்கும் மேற்பட்ட ஆர்ஜேக்கள் எதிர்த்தோம். 

இதனால் பின்வாங்கிய நிர்வாகம், ஆர்ஜேக்கள் அனைவரும் 3 மணி நேரம் லைவ் மேற்கொள்ள வேண்டும் என்று கூறி ஊதியமும் குறைக்கப்படும் என்று தெரிவித்தது. அதற்கும் எதிர்ப்புத் தெரிவித்தோம். படைப்பாக்கப் பணி என்பதால், 4 மணி நேரத்துக்கு மேல் தொடர்ச்சியாகப் பணியாற்ற முடியாது என்று வானொலி நிலையத் தலைவரிடம் பேசினோம், கடிதம் கொடுத்தோம். 

நீண்ட போராட்டத்துக்குப் பிறகு 4 மணி நேரப் பணி கொடுக்கப்பட்டது. ஆனால் அதிலும் செக் வைத்தனர். உதாரணத்துக்கு ஒரு ஆர்ஜேவுக்கு 6 - 7 நிகழ்ச்சி என்றால் மீண்டும் 8 - 9, 10-11, 12-1 மணி வரை நிகழ்ச்சி என்று பிரித்துப் பிரித்துப் பட்டியலிடப்பட்டனர். இதன்மூலம் ஒருவர் 7 மணி நேரம் பணியில் இருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இதுவும் ஏற்றுக்கொள்ளத் தக்கதல்ல என்று வாட்ஸப் குழுவில் தெரிவித்தோம். (ஏனெனில் எங்களுக்கான வாராந்திர சந்திப்புக் கூட்டங்கள் எதுவும் பல ஆண்டுகளாக நடத்தப்படுவதில்லை.) ஆனால் அதற்கு எந்த பதிலும் கிடைக்கவில்லை.  

ஆர்ஜேக்களில் பெரும்பாலானோர் இந்த ஊதியத்தை நம்பி வாழ்வதால், எதிர்த்துப் பேசினால் நிகழ்ச்சிகளின் எண்ணிக்கை குறைந்துவிடும் என்று பயப்படுகின்றனர். ஆனால் சில ஆர்ஜேக்கள் தொடர்ந்து குரல் கொடுத்தோம். மீண்டும் ஏடிஜிக்கும் கடிதம் எழுதப்பட்டது.

AIR: அரசு வானொலியில் ஆர்ஜேக்களுக்கு சம்பளக் குறைப்பு; நேரக் கட்டுப்பாடு... மூடுவிழாவுக்கு முன்னோட்டமா?

சில நாட்கள் கழித்து திடீரென ஒருநாள், மதியம் 2 மணிக்கு ஏடிஜியுடன் சந்திப்பு என்று 11.30 மணிக்கு வாட்ஸப் குழுவில் பதிவிட்டனர். பெரும்பாலானோர் உடனடியாகக் கிளம்பிவந்து, சந்திக்க முடியாது. வெளியூரில் இருந்து வந்து, நிகழ்ச்சி செய்பவர்கள் எல்லாம் இருக்கிறார்கள். இதனால் முன்கூட்டியே அறிவித்து, முறையாகச் சந்திப்பை நடத்துங்கள் என்று கோரிக்கை விடுத்தோம். அதனால் சந்திப்பு ரத்து செய்யப்பட்டது. அதற்குப் பிறகு, வழக்கமாகக் குழுவில் அனுப்பப்படும் பணிநேர அட்டவணை (Duty Chart) எதுவும் பகிரப்படவில்லை. எந்தச் சூழலிலும் பணிக்கு வரத் தயாராக இருந்தவர்கள் சிலரிடம் பேசி, அவர்களை மட்டுமே வேலைக்கு வரவைத்தனர். 

இதுதொடர்ந்து நடைபெறுவதால், எதிர்த்துக் குரல் கொடுத்தவர்களை மட்டும் அழைக்கவில்லை. இதனால் பலருக்குப் பணியே கிடைக்கவில்லை. மாணவர்கள், தேர்வுக்குத் தயாராவோர் உள்ளிட்டோரும் ஆர்ஜேக்களாக இருக்கின்றனர். அவர்கள் மனம் தளர்ந்தனர்.

இரவு ஷிஃப்டுகளில் அழுத்தம்

மிகப் பெரிய ஹிட்டடித்த இரவு நேர ஷிஃப்டுகளிலும் மாற்றங்களைக் கொண்டு வந்தனர். ஊதியத்தைக் குறைப்பதற்காக ஆர்ஜேக்களின் எண்ணிக்கையைக் குறைத்தனர். இதனால் ஆர்ஜேக்களின் உடல், மன நலமும் பாதிக்கப்பட்டிருக்கிறது. இதைவிட முக்கியமாக உணவு உட்கொள்ள இடவசதி, நல்ல கழிப்பறை வசதி ஆகியவை இல்லாமல்தான் பணியாற்றிக் கொண்டிருக்கிறோம். 

AIR: அரசு வானொலியில் ஆர்ஜேக்களுக்கு சம்பளக் குறைப்பு; நேரக் கட்டுப்பாடு... மூடுவிழாவுக்கு முன்னோட்டமா?

இந்தியாவில் பெங்களூரு, டெல்லி உள்ளிட்ட பல வானொலி நிலையங்களில் நிர்வாக ரீதியில் பல்வேறு மாற்றங்கள் வலுக்கட்டாயமாகத் திணிக்கப்படுகின்றன. அதேபோல பல்வேறு அலைவரிசைகளை ஒரே அலைவரிசையாக மாற்றவும் அரசு முயற்சிகள் மேற்கொள்வதாகத் தகவல் வெளியாகியுள்ளது. வருங்காலத்தில் வானொலி நிலையத்தையே மூடி, அந்த நிலத்தைத் தனியாருக்கு விற்கவும் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இவை உள்ளிட்ட அனைத்துப் பிரச்சினைகளிலும் உடனடியாகத் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்''.

இவ்வாறு பெயர் கூற விரும்பாத ஆர்ஜேக்கள் சிலர் தங்களின் மனக்குமுறலைக் கொட்டினர். 

வானொலிப் பாடல்கள் என்பது பெரும்பாலும் உழைக்கும் சாமானியர்களுக்கான வடிகால், உற்சாகம். அதை படைப்பாக்கத்துடன் அளிக்கும் ஆர்ஜேக்களுக்கு அழுத்தம் கொடுப்பதும், அந்தக் குரல்களின் குரலை ஒடுக்க நினைப்பதும், அலைவரிசைகளைக் குறைத்து வானொலி நிலையத்தையே மொத்தமாக மூட நினைப்பதும் சரியல்ல என்பதை ஆள்வோர் உணர வேண்டியது அவசியம்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

தமிழர்களின் வாக்குகளை அள்ளிக் குவித்த AKD.. இலங்கையில் எங்கு பார்த்தாலும் NPP அலைதான்!
தமிழர்களின் நம்பிக்கை நாயகனாக மாறிய AKD.. இலங்கையில் எங்கு பார்த்தாலும் NPP அலைதான்!
EPS: இனி என்னிடம் இந்த கேள்வியை கேட்க வேண்டாம்... கடுப்பான இபிஎஸ்.
EPS: இனி என்னிடம் இந்த கேள்வியை கேட்க வேண்டாம்... கடுப்பான இபிஎஸ்.
ஒரே நாளில் 10 விமானங்கள் ரத்து.. என்ன நடக்கிறது சென்னை விமான நிலையத்தில்..?
ஒரே நாளில் 10 விமானங்கள் ரத்து.. என்ன நடக்கிறது சென்னை விமான நிலையத்தில்..?
முக்கால் மணி நேரமாக காத்திருந்த ராகுல் காந்தி.. Take OFF ஆகாத ஹெலிகாப்டர்.. பறந்தது புகார்!
முக்கால் மணி நேரமாக காத்திருந்த ராகுல் காந்தி.. Take OFF ஆகாத ஹெலிகாப்டர்.. பறந்தது புகார்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

DMK cadres joins TVK |துரைமுருகன் கோட்டையில் ஓட்டை!தவெகவிற்கு பாயும் திமுகவினர்!விஜய் பக்கா ஸ்கெட்ச்Maipi clarke | கிழித்தெறியப்பட்ட மசோதா! ஹக்கா நடனமாடிய பெண் MP! வாயடைத்து போன நாடாளுமன்றம்Tindivanam train | ரயிலில் சிக்கிய 7 மாத குழந்தை! ஓடிவந்து காப்பாற்றிய மக்கள்! திக் திக் நிமிடங்கள்5th Class Student Question to Nirmala Sitharaman | கேள்வி கேட்ட சிறுவன்..அசந்து போன நிர்மலா

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
தமிழர்களின் வாக்குகளை அள்ளிக் குவித்த AKD.. இலங்கையில் எங்கு பார்த்தாலும் NPP அலைதான்!
தமிழர்களின் நம்பிக்கை நாயகனாக மாறிய AKD.. இலங்கையில் எங்கு பார்த்தாலும் NPP அலைதான்!
EPS: இனி என்னிடம் இந்த கேள்வியை கேட்க வேண்டாம்... கடுப்பான இபிஎஸ்.
EPS: இனி என்னிடம் இந்த கேள்வியை கேட்க வேண்டாம்... கடுப்பான இபிஎஸ்.
ஒரே நாளில் 10 விமானங்கள் ரத்து.. என்ன நடக்கிறது சென்னை விமான நிலையத்தில்..?
ஒரே நாளில் 10 விமானங்கள் ரத்து.. என்ன நடக்கிறது சென்னை விமான நிலையத்தில்..?
முக்கால் மணி நேரமாக காத்திருந்த ராகுல் காந்தி.. Take OFF ஆகாத ஹெலிகாப்டர்.. பறந்தது புகார்!
முக்கால் மணி நேரமாக காத்திருந்த ராகுல் காந்தி.. Take OFF ஆகாத ஹெலிகாப்டர்.. பறந்தது புகார்!
சிவகார்த்திகேயன் இப்படி பண்ணலாமா ? நெரிசலில் சிக்கித் தவித்த மக்கள்.. பெருங்களத்தூரில் நடந்தது என்ன ?
சிவகார்த்திகேயன் இப்படி பண்ணலாமா ? நெரிசலில் சிக்கித் தவித்த மக்கள்.. பெருங்களத்தூரில் நடந்தது என்ன ?
Kubera Glimpse : அருணாச்சலம் பட கதை மாதிரி இருக்கே.. தனுஷ் நடித்துள்ள குபேரா படத்தின் க்ளிம்ப்ஸ் வீடியோ இதோ
Kubera Glimpse : அருணாச்சலம் பட கதை மாதிரி இருக்கே.. தனுஷ் நடித்துள்ள குபேரா படத்தின் க்ளிம்ப்ஸ் வீடியோ இதோ
"இரவு நேரங்களில் அவசர தேவைனா.. GH போங்க" அலட்சியமாக பேசிய அமைச்சர் மா. சுப்பிரமணியன்
TNPSC Telegram Channel: தமிழக போட்டித் தேர்வர்களே, உங்களுக்குத்தான்...! டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
TNPSC Telegram Channel: தமிழக போட்டித் தேர்வர்களே, உங்களுக்குத்தான்...! டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
Embed widget