மேலும் அறிய
சபரிமலை யாத்திரை: சிறப்பு பேருந்துகள் அறிவிப்பு! முன்பதிவு எப்போது? முழு விபரம் இதோ!
மகரஜோதி, மண்டல பூஜை உள்ளிட்ட விஷேசங்களுக்காக தமிழ்நாட்டில் சென்னை உள்ளிட்ட நகரங்களில் இருந்து பம்பைக்கு நவம்பர் 16 முதல் ஜனவரி 16 வரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்.

சபரிமலை சிறப்பு பேருந்து
Source : X
மகரஜோதி, மண்டல பூஜை உள்ளிட்ட விஷேசங்களுக்காக தமிழ்நாட்டில் சென்னை உள்ளிட்ட நகரங்களில் இருந்து பம்பைக்கு நவம்பர் 16 முதல் ஜனவரி 16 வரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தமிழ்நாடு போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.
சபரிமலைக்கு சிறப்பு பேருந்து
தமிழ்நாட்டில் இருந்து ஐயப்ப பக்தர்கள் தமிழ் மாதம் கார்த்திகை 1-ம் தேதி் முதல் அதாவது நவம்பர் 17-ம் தேதி முதல் மாலை அணிந்து, விரதம் இருந்து, சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு இருமுடி கட்டிச் செல்வார்கள். சபரிமலையில் ஐயப்பன் கோயிலில் நடைபெறும் மண்டல பூஜை, மகர விளக்கை முன்னிட்டு தமிழ்நாட்டில் இருந்து அதிக அளவில் பக்தர்கள் செல்கிறார்கள்.
மகரஜோதி, மண்டல பூஜை உள்ளிட்ட விஷேசங்களுக்காக தமிழ்நாட்டில் சென்னை உள்ளிட்ட நகரங்களில் இருந்து பம்பைக்கு நவம்பர் 16 முதல் ஜனவரி 16 வரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தமிழ்நாடு போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் முதல் ஜனவரி வரை சபரிமலையில் மண்டல பூஜையும், மகர விளக்கும் நடைபெறுகின்றன. அய்யப்ப பக்தர்கள் விரதம் இருந்து, குறிப்பாக டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் சபரிமலைக்கு செல்வது வழக்கம். இந்த காலத்தில் தமிழகம் முழுவதும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் பம்பை வழியாக சபரிமலைக்கு செல்கின்றனர். இதனால், போக்குவரத்து துறை சிறப்புப் பேருந்துகளை இயக்கி வருகிறது.
சென்னை, அக்டோபர் 28: சபரிமலை ஐயப்பன் கோயில் மண்டல பூஜை மற்றும் மகரவிளக்கு ஆகிய திருவிழாக்களை முன்னிட்டு நவம்பர் 16-ஆம் தேதி முதல் ஜனவரி 16 வரை இரு மாதங்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அரசு விரைவு போக்குவரத்துக்கழகம் தெரிவித்துள்ளது.
நவம்பர் 16 முதல் 2026 ஜனவரி 16 வரையில் (சென்னை கோயம்பேடு மற்றும் கிளாம்பாக்கம்), திருச்சி, மதுரை மற்றும் புதுச்சேரி, கடலூர் ஆகிய இடங்களிலிருந்து பம்பைக்கு அதிநவீன சொகுசு மிதவைப் பேருந்துகள், குளிர்சாதன பேருந்துகள் மற்றும் குளிர்சாதனமில்லா இருக்கை மற்றும் படுக்கை வசதி உள்ள சிறப்புப்பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.
சபரிமலை தேவஸ்தானம் அறிவிப்பின்படி டிசம்பர் 27 முதல் டிசம்பர் 30 வரை மாலை 5 மணி வரை கோயில் நடை சாத்தப்படுவதால் டிசம்பர் 26 முதல் டிசம்பர் 29 வரை இந்த சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படமாட்டாது. நிகழாண்டு பக்தர்கள் கூடுதலாக பயணம் செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதை கருத்தில் கொண்டு சென்னை மற்றும் இதர இடங்களிலிருந்து கூடுதலாக பேருந்துகள் இயக்குவதற்கு அனுமதி பெறப்பட்டு சிறப்பான முறையில் பேருந்துகளை இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும் குழுவாக செல்லும் பக்தர்களுக்கு வாடகை அடிப்படையிலும் பேருந்து வசதி செய்து தரப்படும். 60 நாள்களுக்கு முன்னதாக இந்த சிறப்புப் பேருந்துகளுக்கு இணையதளம் மூலமாக www.tnstc.in மற்றும் டி.என்எஸ்டிசி எனப்படும் செயலி மூலமகாவும் முன்பதிவு செய்துகொள்ளலாம்.
இது தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு கைப்பேசி:9445014452 9445014424, 9445014463 ஆகிய எண்களைத் தொடர்பு கொள்ளலாம் என அரசு விரைவு போக்குவரத்துக்கழகம் தெரிவித்துள்ளது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்
Advertisement
Advertisement




















