மேலும் அறிய

மகளிர் உரிமைத்தொகைக்கு விண்ணப்பிக்க தமிழகத்தில் ஆட்சியர் அலுவலகங்களில் குவிந்த பெண்கள்..! ஏமாற்றத்துடன் திரும்பியது ஏன்?

”மகளிர் உரிமைத்தொகை குறித்து வாட்ஸ் அப்பில் வரும் தகவல் வதந்தி. பொதுமக்கள் அதனை நம்ப வேண்டாம். இது போன்று தவறான தகவலை பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஆட்சியர்கள் எச்சரிக்கை”

தமிழ்நாடு அரசின் மகளிர் உரிமை தொகையானது சுமார் ஒரு கோடிக்கும் அதிகமான பெண்களின் வங்கிக்கணக்கில் மாதந்தோறும் 1000 ரூபாய் வரவு வைக்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தில் விண்ணப்பித்த சிலரது விண்ணப்பங்கள் பல்வேறு காரணங்கள் கூறி நிராகரிக்கப்பட்டது. இந்த நிலையில் இத்திட்டத்திற்கு இதுவரை விண்ணப்பிக்காதவர்களும், விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டவர்களும் மீண்டும் விண்ணப்பிக்கலாம் என்று சமூக வலைதளங்களில் பரவியது. அதில் ஆட்சியர் அலுவலகங்களில் இன்று முதல் 3  நாட்களுக்கு மனுக்களை அளிக்கலாம் என்றும், உடனே அந்த தொகை கிடைக்கும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.  இந்த தகவல் பெண்கள் மத்தியில் வேகமாக  பரவ நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நூற்றுக்கணக்கான பெண்கள் ஒரே நேரத்தில் வந்து குவிந்தனர். 

மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் குவிந்த பெண்களிடம் அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்கள் விசாரித்து உள்ளே அனுப்பியுள்ளனர். ஆனால் ஆட்சியர் அலுவலகத்திற்குள் இருந்த அதிகாரிகள் விண்ணப்பிக்க வாய்ப்பு இல்லை, அதுபோன்ற தகவல் வரவில்லை என்று கூறியுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த பெண்கள் அங்குள்ள அதிகாரிகளிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.  தொடர்ந்து அங்கிருந்து ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். அப்போது அவர்கள் கூறும் பொழுது, வசதி வாய்ப்பு உள்ளவர்களுக்கு கூட அந்த தொகை கிடைக்கிறது. ஆனால் எங்களை போன்ற ஏழைகள் பலருக்கு இந்த தொகை கிடைக்கவில்லை, இன்று விண்ணப்பிக்கலாம் என்று தெரிந்தவுடன் அனைத்து வேலைகளையும் விட்டு விட்டு வந்தால் இங்கு அப்படி ஒரு தகவலே எங்களுக்கு வரவில்லை, பொய்யான தகவலை நம்பி வந்துள்ளதாக தெரிவிக்கின்றனர். இது எங்களை மேலும் மன வருத்தத்திற்கு உள்ளாக்குகிறது என்று புலம்பியபடி சென்றனர்.

நெல்லை மட்டுமின்றி விழுப்புரம், மதுரை, திருச்சி ஆகிய மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களிலும் இத்தகவலை நம்பி நூற்றுக்கணக்கான பெண்கள் குவிந்தனர். அவர்களிடமும் வாட்ஸ் அப்பில் வரும் தகவலை நம்பி யாரும் இங்கே வர வேண்டாம் என்று தெரிவித்து திரும்பி அனுப்பினர். இதனால் ஆட்சியர் அலுவலங்களில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.  இது தொடர்பாக ஆட்சியர் அலுவலகங்களில் இருந்து மறுப்பு செய்திகளும் வெளியிடப்பட்டது.  மகளிர் உரிமைத்தொகை குறித்து வாட்ஸ் அப்பில் வரும் தகவல் வதந்தி. பொதுமக்கள் அதனை நம்ப வேண்டாம். மேலும் இது போன்று தவறான தகவலை பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  மகளிர் உரிமைத் தொகை கிடைக்காத பெண்கள் விண்ணப்பிக்கலாம் என்ற செய்தி அறிந்து அது  குவிந்த நிலையில் அது தவறான தகவல் என்று தெரிந்தவுடன் ஏமாற்றத்துடன் புலம்பியபடி திரும்பி சென்றது குறிப்பிடத்தக்கது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IPL 2025 RCB vs GT: சொந்த மண்ணில் சோடை போன ஆர்சிபி! ஈஸியா ஜெயிச்ச குஜராத்!
IPL 2025 RCB vs GT: சொந்த மண்ணில் சோடை போன ஆர்சிபி! ஈஸியா ஜெயிச்ச குஜராத்!
நித்தியானந்தா உயிரோடு இருக்கிறாரா? நாளை உடையும் உண்மை! வெளியான முக்கிய அறிவிப்பு!
நித்தியானந்தா உயிரோடு இருக்கிறாரா? நாளை உடையும் உண்மை! வெளியான முக்கிய அறிவிப்பு!
வீட்டைவிட்டு வெளியே வராதீங்க! இரவு 8 மாவட்டங்களில் மழை இருக்கு - வானிலை மையம் அறிவிப்பு!
வீட்டைவிட்டு வெளியே வராதீங்க! இரவு 8 மாவட்டங்களில் மழை இருக்கு - வானிலை மையம் அறிவிப்பு!
Stalin Vs EPS: ஏங்க.. நாங்க பண்றது இருக்கட்டும், நீங்க என்ன பண்ணீங்க.? இபிஎஸ்-ஐ வெளுத்த ஸ்டாலின்...
ஏங்க.. நாங்க பண்றது இருக்கட்டும், நீங்க என்ன பண்ணீங்க.? இபிஎஸ்-ஐ வெளுத்த ஸ்டாலின்...
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

தங்கை ஆணவக்கொலை?அண்ணன் செய்த கொடூரம் நாடகம் ஆடிய குடும்பம்BJP Posters In Ramanathapuram: ”அதிமுக கூட்டணி வேண்டாம் அண்ணாமலையே போதும்” பாஜக போஸ்டரால் பரபரப்புAnnamalai BJP: தேசிய அரசியலில் அண்ணாமலை.. மாநில அரசியலுக்கு ஆப்பு? சீனியர்ஸ் பக்கா ஸ்கெட்ச்Irfan Controversy | சமாதான கொடி தூக்கிய இர்பான் வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்” ESCAPE ஆகுறது வேலையா”

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IPL 2025 RCB vs GT: சொந்த மண்ணில் சோடை போன ஆர்சிபி! ஈஸியா ஜெயிச்ச குஜராத்!
IPL 2025 RCB vs GT: சொந்த மண்ணில் சோடை போன ஆர்சிபி! ஈஸியா ஜெயிச்ச குஜராத்!
நித்தியானந்தா உயிரோடு இருக்கிறாரா? நாளை உடையும் உண்மை! வெளியான முக்கிய அறிவிப்பு!
நித்தியானந்தா உயிரோடு இருக்கிறாரா? நாளை உடையும் உண்மை! வெளியான முக்கிய அறிவிப்பு!
வீட்டைவிட்டு வெளியே வராதீங்க! இரவு 8 மாவட்டங்களில் மழை இருக்கு - வானிலை மையம் அறிவிப்பு!
வீட்டைவிட்டு வெளியே வராதீங்க! இரவு 8 மாவட்டங்களில் மழை இருக்கு - வானிலை மையம் அறிவிப்பு!
Stalin Vs EPS: ஏங்க.. நாங்க பண்றது இருக்கட்டும், நீங்க என்ன பண்ணீங்க.? இபிஎஸ்-ஐ வெளுத்த ஸ்டாலின்...
ஏங்க.. நாங்க பண்றது இருக்கட்டும், நீங்க என்ன பண்ணீங்க.? இபிஎஸ்-ஐ வெளுத்த ஸ்டாலின்...
BJP TN New Leader: பாஜக தமிழ்நாடு புதிய தலைவர் யார்.? ரேஸில் குதித்த கருப்பு முருகானந்தம்.. புதிய அப்டேட்...
பாஜக தமிழ்நாடு புதிய தலைவர் யார்.? ரேஸில் குதித்த கருப்பு முருகானந்தம்.. புதிய அப்டேட்...
கூப்பிட்றப்ப எல்லாம் அட்ஜஸ்ட் பண்ணனும்.. இன்ஸ்டா பிரபலத்துக்கு நிகழ்ந்த கொடுமையை பாருங்க
கூப்பிட்றப்ப எல்லாம் அட்ஜஸ்ட் பண்ணனும்.. இன்ஸ்டா பிரபலத்துக்கு நிகழ்ந்த கொடுமையை பாருங்க
TNPSC: மாஸ் காட்டும் டிஎன்பிஎஸ்சி; 3 மாதங்களில் 7557 பேர் செலக்ட்- ஜெட் வேகத்தில் செய்த சீர்திருத்தங்கள் தெரியுமா?
TNPSC: மாஸ் காட்டும் டிஎன்பிஎஸ்சி; 3 மாதங்களில் 7557 பேர் செலக்ட்- ஜெட் வேகத்தில் செய்த சீர்திருத்தங்கள் தெரியுமா?
Irfan Controversy: மனுஷனாவும் இல்ல..! இஸ்லாத்தையும் மதிக்கில - காசுக்காக அலையும் இர்ஃபான் - வேடிக்கை பார்க்கும் அரசு
Irfan Controversy: மனுஷனாவும் இல்ல..! இஸ்லாத்தையும் மதிக்கில - காசுக்காக அலையும் இர்ஃபான் - வேடிக்கை பார்க்கும் அரசு
Embed widget