மேலும் அறிய

Rain Alert: தென் தமிழகத்தை புரட்டிப்போடும் கனமழை: மற்ற மாவட்டங்களில் எப்படி? - வானிலை சொல்வது என்ன?

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் 4 மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

இன்று வெளியான வானிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டதாவது:

”குமரிக்கடல்  மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளி மண்டல சுழற்சி நிலவுகிறது. 

18.12.2023: தென்தமிழகத்தில் அநேக இடங்களிலும், வடதமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும். 
கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் தென்காசி மாவட்டங்களில் கன முதல் மிக கனமழையும் ஓரிரு இடங்களில் அதி கனமழையும், விருதுநகர் மற்றும் தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலை பகுதிகள், திண்டுக்கல், நீலகிரி, மதுரை மற்றும் இராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யவாய்ப்புள்ளது. 

19.12.2023: தென் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும். 
கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

20.12.2023 முதல் 24.12.2023 வரை: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும்.  

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:

அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான/மிதமான மழை  பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 24-25 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். 

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான/மிதமான மழை  பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 30-31 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 24-25 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். 

மீனவர்களுக்கான எச்சரிக்கை:  

தமிழக கடலோரப்பகுதிகள்: 
18.12.2023 மற்றும் 19.12.2023: தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா, குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று  மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55  கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். 

20.12.2023: தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய  குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று  மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55  கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். 

அரபிக்கடல் பகுதிகள்: 
18.12.2023:  தென்கேரள கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகள் மற்றும் லட்சதீவு பகுதிகளில் சூறாவளிக்காற்று  மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55  கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். 
19.12.2023: லட்சதீவு பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று  மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55  கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். 
மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்த படுகிறார்கள்”. இவ்வாறு வானிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Neet exam 2025 : ஆன்லைன் தேர்வு இல்லை! இந்த ஆண்டு நீட் தேர்வு இப்படி தான் நடக்கும்! NTA அறிவிப்பு...
Neet exam 2025 : ஆன்லைன் தேர்வு இல்லை! இந்த ஆண்டு நீட் தேர்வு இப்படி தான் நடக்கும்! NTA அறிவிப்பு...
"சம்பளம் உயரப்போகுது" அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்.. மோடி கொடுத்த கிரீன் சிக்னல்!
"அதிக குழந்தைகளை பெத்துக்கலனா.. தேர்தலில் போட்டியிட முடியாது" இறுக்கி பிடித்த சந்திரபாபு நாயுடு
சைஃப் அலிகானை குத்தியது யார்? படிக்கட்டில் இருந்து இறங்கும் மர்ம நபர்.. பரபர CCTV காட்சி!
சைஃப் அலிகானை குத்தியது யார்? படிக்கட்டில் இருந்து இறங்கும் மர்ம நபர்.. பரபர CCTV காட்சி!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

கையை விரித்த கூட்டணியினர்! கழற்றி விடப்பட்ட காங்கிரஸ்! என்ன செய்யப் போகிறார் ராகுல்?BJP state executive: மாணவிக்கு பாலியல் தொல்லை.. தலைமறைவான BJP  நிர்வாகி! தட்டித்தூக்கிய காவல் துறை!Velumani Vs Munusamy | கே.பி.முனுசாமி Vs எஸ்.பி.வேலுமணி.. பிரிந்து நிற்கும் MLA-க்கள்! தலைவலியில் EPSVijay Vs Ajith : அஜித்தை கண்டுக்காத விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Neet exam 2025 : ஆன்லைன் தேர்வு இல்லை! இந்த ஆண்டு நீட் தேர்வு இப்படி தான் நடக்கும்! NTA அறிவிப்பு...
Neet exam 2025 : ஆன்லைன் தேர்வு இல்லை! இந்த ஆண்டு நீட் தேர்வு இப்படி தான் நடக்கும்! NTA அறிவிப்பு...
"சம்பளம் உயரப்போகுது" அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்.. மோடி கொடுத்த கிரீன் சிக்னல்!
"அதிக குழந்தைகளை பெத்துக்கலனா.. தேர்தலில் போட்டியிட முடியாது" இறுக்கி பிடித்த சந்திரபாபு நாயுடு
சைஃப் அலிகானை குத்தியது யார்? படிக்கட்டில் இருந்து இறங்கும் மர்ம நபர்.. பரபர CCTV காட்சி!
சைஃப் அலிகானை குத்தியது யார்? படிக்கட்டில் இருந்து இறங்கும் மர்ம நபர்.. பரபர CCTV காட்சி!
TN Rain Alert: அடுத்த 2 நாட்களுக்கு மிதமான பெய்ய வாய்ப்பு - எந்தெந்த மாவட்டங்கள் தெரியுமா?
TN Rain Alert: அடுத்த 2 நாட்களுக்கு மிதமான பெய்ய வாய்ப்பு - எந்தெந்த மாவட்டங்கள் தெரியுமா?
Ranji Trophy; கல்தா கொடுத்த கோலி... கேப்டனாக களமிறங்கும் ரிஷப் பண்ட்...
ரஞ்சிக் கோப்பை; கல்தா கொடுத்த கோலி... கேப்டனாக களமிறங்கும் ரிஷப் பண்ட்...
Vidamuyarchi Trailer : அஜித் நடித்துள்ள விடாமுயற்சி படத்தின் டிரைலர் மற்றும் ரிலீஸ் தேதி இதோ
Vidamuyarchi Trailer : அஜித் நடித்துள்ள விடாமுயற்சி படத்தின் டிரைலர் மற்றும் ரிலீஸ் தேதி இதோ
AjithKumar Racing; அஜித்குமார் ரேஸிங் அணி வீரரின் இன்ஸ்டா பதிவு... என்ன சொல்லியிருக்கார்.?
அஜித்குமார் ரேஸிங் அணி வீரரின் இன்ஸ்டா பதிவு... என்ன சொல்லியிருக்கார்.?
Embed widget