மேலும் அறிய

தனிநபர் சொத்து VS அறக்கட்டளை சொத்து ; வாங்கும் போது கூடுதல் விழிப்புணர்வு ஏன் அவசியம் ?

சொத்து வாங்குபவர்கள் நிறுவனங்கள் மற்றும் அறக்கட்டளைகளிடம் (Trust) வாங்கும் போது ஆவணங்கள் முறையாக இருந்தாலும் கூடுதல் சட்ட விழிப்புணர்வு அவசியம் என்கின்றனர் வல்லுனர்கள்

அறக்கட்டளை சொத்து வாங்கும் போது கூடுதல் விழிப்புணர்வு

இன்றைய சூழலில் புதிதாக சொத்து வாங்க நினைக்கும் மக்கள் , யாரிடம் வாங்குவது என்பதில் பல்வேறு குழப்பங்களை சந்திக்கின்றனர். இதில், பொதுவாக தனி நபர்களிடம் இருந்து தான் சொத்து வாங்குவோம், அதில் என்ன பிரச்சனை வந்துவிடப் போகிறது என்ற எண்ணம் உள்ளது..

இதில் நிறுவனங்கள் , அறக்கட்டளை போன்ற அமைப்புகளிடம் இருந்தும் தனி நபர்கள் சொத்து வாங்குவது வழக்கமாக உள்ளது. தனி நபர்களிடம் இருந்து வாங்குவதை காட்டிலும் , நிறுவனங்களிடம் இருந்து சொத்து வாங்கும் போது ஆவணங்கள் தெளிவாக இருக்கும் என்று மக்கள் நம்புகின்றனர்.

உண்மையில் தனி நபர்களை காட்டிலும், அறக்கட்டளை போன்ற நிறுவனங்கள் சொத்து தொடர்பான ஆவணங்களை முறையாக பராமரிக்கும் என்பதில் மாற்று கருத்து இல்லை. ஆனால், தனி நபர்களிடம் இருந்து சொத்து வாங்குவதை விட அறக்கட்டளை சொத்து வாங்கும் போது கூடுதல் விழிப்புடன் இருக்க வேண்டும்

அதிகாரம் பெற்ற நபர் யார் ?

பொதுவாக தனி நபர் உரிமையாளர் என்றால் அதில் வில்லங்கம் பார்ப்பது எளிதாக முடிந்து விடும். ஆனால், அறக்கட்டளையிடம் சொத்து வாங்கும் போது, அது யார் பெயரில் தற்போது உள்ளது, இதற்கு முன் எப்படி வாங்கப்பட்டது என்பதை பார்க்க வேண்டும். சில சமயங்களில் தனி நபர்கள் பெயரில் உள்ள சொத்து, அறக்கட்டளை பெயருக்கு மாற்றப்படுவதாக ஆவணங்களில் குறிப்பிடப்பட்டு இருக்கும்.

அத்தகைய சொத்துகளை பரிமாற்றம் செய்யும் நிலையில் , அதற்கான அதிகாரம் பெற்ற நபர் யார் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். அறக் கட்டளை போன்ற அமைப்புகளின் சொத்துக்கள் விற்பனைக்கு வரும் போது , அதை விற்பதற்கான தீர்மானம் என்ன என்பதற்கான ஆதாரத்தை பெற வேண்டும்.

ஏமாற்றங்களை தவிர்க்கலாம்

விற்பனை நடவடிக்கைகளை மேற்கொள்ள யாருக்கு அதிகாரம் உள்ளது என்று பார்க்க வேண்டும். இது போன்ற சொத்துக்கள் விஷயத்தில் வில்லங்கம் தொடர்பான ஆய்வுகளையும் கூடுதல் கவனத்துடன் மேற்கொள்ள வேண்டும். சில இடங்களில் அறக் கட்டளைகள் வழிபாட்டு அமைப்புகளுடன் தொடர்பில் இருக்கும் போது சொத்து வாங்குவோருக்கு கூடுதல் பிரச்னை ஏற்படும்.

அறக்கட்டளைக்கு சொத்தை தானமாக கொடுத்தவர் ஏதாவது நிபந்தனைகள் விதித்துள்ளாரா என்பது போன்ற விபரங்களை விசாரிப்பது அவசியம். குறிப்பிட்ட சில பணிகளுக்காக மட்டும் என்ற நிபந்தனையின் பேரில் வழங்கப்பட்ட சொத்துக்களை வாங்கும் போது அதன் உண்மை நிலவரத்தை தெளிவாக விசாரிக்க வேண்டும்.

வழக்கத்தை விட கூடுதல் நேரம் செலவிட்டு இது போன்ற விஷயங்களை விசாரித்து செயல்பட்டால் ஏமாற்றங்களை தவிர்க்கலாம் என்கின்றனர் ரியல் எஸ்டேட் சொத்து மதிப்பீட்டாளர்கள். அறக்கட்டளைக்கு சொத்தை தானமாக கொடுத்தவர் ஏதாவது நிபந்தனை விதித்துள்ளாரா என்பது போன்ற விபரங்களை விசாரிப்பது அவசியம்

தலைப்பு செய்திகள்

CM Vijay: மக்கள் திருந்த 6 மாசம் டைம்.. மொத்தமாக மாறப்போகும் தமிழ்நாடு.. விஜய் எடுத்த முடிவு!
CM Vijay: மக்கள் திருந்த 6 மாசம் டைம்.. மொத்தமாக மாறப்போகும் தமிழ்நாடு.. விஜய் எடுத்த முடிவு!
Tamil Nadu Top News : 'இன்றைய முக்கிய செய்திகள்’ இதை தெரிந்துகொண்டாலே போதும்..!
Tamil Nadu Top News : 'இன்றைய முக்கிய செய்திகள்’ இதை தெரிந்துகொண்டாலே போதும்..!
சென்னை டூ கன்னியாகுமரி.. இனி 8 மணி நேரத்தில் செல்லலாம்.. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!
சென்னை டூ கன்னியாகுமரி.. இனி 8 மணி நேரத்தில் செல்லலாம்.. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!
இரும்பு உத்தரங்கள் வந்தாச்சு... பணிகள் ஸ்பீடு பிடிச்சாச்சு:திருச்சி கோட்டை மேம்பாலம் ஜனவரிக்குள் திறக்க நடவடிக்கை?
இரும்பு உத்தரங்கள் வந்தாச்சு... பணிகள் ஸ்பீடு பிடிச்சாச்சு:திருச்சி கோட்டை மேம்பாலம் ஜனவரிக்குள் திறக்க நடவடிக்கை?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: மக்கள் திருந்த 6 மாசம் டைம்.. மொத்தமாக மாறப்போகும் தமிழ்நாடு.. விஜய் எடுத்த முடிவு!
CM Vijay: மக்கள் திருந்த 6 மாசம் டைம்.. மொத்தமாக மாறப்போகும் தமிழ்நாடு.. விஜய் எடுத்த முடிவு!
சென்னை டூ கன்னியாகுமரி.. இனி 8 மணி நேரத்தில் செல்லலாம்.. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!
சென்னை டூ கன்னியாகுமரி.. இனி 8 மணி நேரத்தில் செல்லலாம்.. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!
D.K.Shivakumar: உங்க வேலையை பார்க்குறது நல்லது.. விஜயை சீண்டிய டி.கே.ஷிவகுமார்.. நடந்தது என்ன?
D.K.Shivakumar: உங்க வேலையை பார்க்குறது நல்லது.. விஜயை சீண்டிய டி.கே.ஷிவகுமார்.. நடந்தது என்ன?
விக்கிரவாண்டி மக்களுக்காக அடித்துக் கொண்ட அரசியல் கட்சிகள்.. கலவரப்பூமியான சட்டசபை!
விக்கிரவாண்டி மக்களுக்காக அடித்துக் கொண்ட அரசியல் கட்சிகள்.. கலவரப்பூமியான சட்டசபை!
தமிழகத்தில் நாளை எந்தெந்த மாவட்டத்துக்கு கனமழை எச்சரிக்கை - இன்றைய வானிலை அறிக்கை இதோ
தமிழகத்தில் நாளை எந்தெந்த மாவட்டத்துக்கு கனமழை எச்சரிக்கை - இன்றைய வானிலை அறிக்கை இதோ
JCD Prabhakar: முழு அதிகாரத்தில் அடித்து ஆடும் சபாநாயகர்..! அப்செட்டில் அமைச்சர்கள், கொந்தளிக்கும் TVKவினர்
முழு அதிகாரத்தில் அடித்து ஆடும் சபாநாயகர்..! அப்செட்டில் அமைச்சர்கள், கொந்தளிக்கும் TVKவினர்
Trump Praises India: “அவங்க பண்றது தான் கரெக்ட்.!“ இந்தியாவை பாராட்டி தள்ளிய ட்ரம்ப்.! எதற்காக தெரியுமா.?
“அவங்க பண்றது தான் கரெக்ட்.!“ இந்தியாவை பாராட்டி தள்ளிய ட்ரம்ப்.! எதற்காக தெரியுமா.?
Renault Kwid on EMI: ரெனால்ட் க்விட்டோட புத்தம் புது பதிப்ப லோன்ல வாங்க பிளான் இருக்கா.? அப்போ முன்பணம், EMI விவரம் இதோ
ரெனால்ட் க்விட்டோட புத்தம் புது பதிப்ப லோன்ல வாங்க பிளான் இருக்கா.? அப்போ முன்பணம், EMI விவரம் இதோ
Embed widget