மேலும் அறிய

தேர்தல் முடிவுகள் 2024

(Source: ECI/ABP News/ABP Majha)

பாமகவின் நிழல் நிதிநிலை அறிக்கை வெளியீடு : பரிந்துரைகள் என்னென்ன?

பா.ம.க. சார்பில் ஆண்டுதோறும் நிழல் நிதிநிலை அறிக்கை வெளியிடுவது வழக்கம். இந்த நிலையில், நடப்பாண்டிற்கான நிதிநிலை அறிக்கை பா.ம.க. சார்பில் இன்று வெளியிடப்பட்டுள்ளது.

10 பக்கங்கள் கொண்ட இந்த நிதிநிலை அறிக்கையில் மொத்தம் 126 பரிந்துரைகள் இடம்பெற்றுள்ளன. இந்த நிதிநிலை அறிக்கையில் இடம்பெற்றுள்ள முக்கிய பரிந்துரைகள் பின்வருமாறு:-

  • 2021-22ம் ஆண்டில் தமிழ்நாட்டின் வருவாய் வரவுகள் ரூபாய் 4 லட்சத்து 98 ஆயிரத்து 585 கோடியாக இருக்கும். இது கடந்தாண்டின் வருவாய் வரவைவிட ரூபாய் 2 லட்சத்து 22 ஆயிரத்து 125 கோடி அதிகமாக இருக்கும். கனிம வளங்களை சிறப்பாக கையாள்வதன் மூலம் வரி அல்லாத வருவாயாக ரூபாய் 2 லட்சத்து 9 ஆயிரம் கோடி 945 கோடி ஈட்ட திட்டம் வகுத்திருப்பதால்தான் இந்த அளவு அதிக வரி வருவாய் சாத்தியமாகிறது.
  • நடப்பாண்டின் மொத்த செலவினம் ரூபாய் 5 லட்சத்து 5 ஆயிரத்து 786 கோடியாகவும், வருவாய் செலவினம் ரூபாய் 4 லட்சத்து 27 ஆயிரத்து 426 கோடியாக இருக்கும். வருவாய் செலவினத்தில் ரூபாய் 50 ஆயிரம் கோடி நிலுவையில் உள்ள கடனை அடைப்பதற்காக அசலாக செலுத்தப்படும்.
  • 2021-22ம் ஆண்டில் தமிழக அரசின் வருவாய் கணக்கில் ரூபாய் 71 ஆயிரத்து 159 கோடி உபரியாக இருக்கும். நிதிப்பற்றாக்குறை ரூபாய் 7 ஆயிரத்து 201 கோடி என்ற அளவில் குறைவாக இருக்கும்.
  • தமிழகத்தின் ஒட்டுமொத்த மாநில உற்பத்தி மதிப்பு ரூபாய் 23 லட்சம் கோடி என்ற இலக்கை எட்டியிருக்க வேண்டும். ஆனால், ரூபாய் 20 லட்சம் கோடி என்ற இலக்கை அடைய போராட வேண்டியிருக்கும்.
  • 2020-21ம் ஆண்டில் மாநில அரசின் சொந்த வரி வருவாய் இலக்கை விட 17.64 சதவீத வீழ்ச்சி அடைந்து, ரூபாய் 1 லட்சத்து 9 ஆயிரத்து 968 கோடியாக குறைந்துள்ளது. மொத்த வருவாய் 17.63 சதவீதம் வீழ்ச்சியடைந்து ரூபாய் 1 லட்சத்து 80 ஆயிரத்து 700 கோடியாக குறைந்துள்ளது.
  • 2020-21ம் ஆண்டின் வருவாய் பற்றாக்குறை ரூபாய் 21,617.61 கோடி என்ற இலக்கைவிட மூன்று மடங்கு அதிகரித்து,ரூபாய் 65,994.06 கோடி என்ற உச்சத்தை அடைந்துள்ளது. நிதிப்பற்றாக்குறையும் ரூபாய் 59,346.29 கோடி என்ற இலக்கை கடந்து ரூபாய் 96,889.97 கோடியாக அதிகரித்துள்ளது.
  • 2021-22ம் ஆண்டில் தமிழக அரசின் சொந்த வரி வருவாய் ரூபாய் 1 லட்சத்து 35 ஆயிரத்து 641 கோடியாகவும், மொத்த வருவாய் 2 லட்சத்து 19 ஆயிரத்து 991 ஆகவும் இருக்க வேண்டும். ஆனால்,இந்த இலக்கை எட்ட முடியாது.
  • நடப்பாண்டில் வருவாய் பற்றாக்குறை ரூபாய் 41 ஆயிரத்து 417 கோடியாகவும், நிதிப்பற்றாக்குறை ரூபாய் 84 ஆயிரத்து 202 கோடியாக இருக்க வேண்டும். ஆனால். இவை இன்னும் கூடுதலாக அதிகரிக்கும்.
  • 2021-22ம் ஆண்டில் தமிழக அரசு ரூபாய் 1 லட்சம் கோடிக்கும் கூடுதலாக கடன் வாங்க நேரிடும்.
  • 2021-22ம் ஆண்டில் தமிழக அரசின் மொத்த கடன் ரூபாய் 10 லட்சம் கோடியாக இருக்கும்.
  • நடப்பாண்டின் முடிவில் ஒவ்வொருவர் பெயரிலும் ரூபாய் 1 லட்சத்து 27 ஆயிரத்து 388 கடன் இருக்கும்.
  • 2021-22ம் ஆண்டில் வட்டியாக மட்டும் ரூபாய் 85 ஆயிரம் கோடி செலுத்த வேண்டியிருக்கும்.
  • அடுத்த 5 ஆணடுகளுக்கு தொடர்ச்சியாக 10 சதவீதத்திற்கும் அதிகமான ஆண்டுப் பொருளாதார வளர்ச்சி எட்டப்பட வேண்டும்.
  • மத்திய அரசின் வரி வருவாயில் மாநிலங்களுக்கு 50 சதவீத பங்கு அளிக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.
  • 2021-22ம் ஆண்டில் வரியில்லா வருவாய் ரூபாய் 2.09 லட்சம் கோடியாக அதிகரிக்கும்.
  • பொதுத்துறை நிறுவனங்களை லாபத்தில் இயங்கச் செய்லதன் மூலம் ரூபாய் 25 ஆயிரம் கோடி கிடைக்கும்.
  • கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோரின் குடும்பங்களுககு தலா ரூபாய் 1 லட்சம் நிதி
  • செங்கல்பட்டு தடுப்பூசி வளாகத்தை தமிழக அரசே ஏற்று நடத்தும். கொரோனா தடுப்பூசி அதிக எண்ணிக்கையில் உற்பத்தி செய்யப்படும்.
  • தமிழ்நாட்டில் உலகத்தரம் வாய்ந்த உயர்கல்வி நிறுவனங்கள் தொடங்கப்படும்.
  • 5 ஆண்டுகளுக்கு மேலாக வேலையில்லாமல் தவிக்கும் இளைஞர்களுக்கு உதவித்தொகை உயர்த்தப்படுகிறது. மாதம் ரூபாய் 5 ஆயிரம் வரை பட்டமேற்படிப்பு முடித்தவர்களுக்கு வழங்கப்படும்.
  • ஏழைக்குடும்பங்களுக்கு மாதந்தோறும் ரூபாய் 2 ஆயிரம் வழங்கப்படும்.
  • ஆகஸ்ட் 15 முதல் முழுமையான மதுவிலக்கு அமல்படுத்தப்படும்.
  • மருத்துவப் படிப்புகளில் ஈழத்தமிழர்களுக்கு 10 இடங்கள் சிறப்பு ஒதுக்கீடாக வழங்கப்படும்.
  • ஈழத்தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்கப்படும்.
  • தமிழ்நாட்டில் 100 சதவீத அரசு வேலைகளும் தமிழர்களுக்கு மட்டுமே கிடைக்க சட்டவிதிகள் மாற்றப்படும்.
  • தமிழ்நாட்டில் தேசிய குடிமக்கள் பதிவேடு தயாரிக்கப்படாது.
  • தமிழ்நாட்டில் மும்மொழிக் கொள்கை அறிமுகப்படுத்தப்படாது.
  • சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தை விட சிறப்பானதாக தமிழ்நாடு பாடத்திட்டம் வலுப்படுத்தப்படும்.

இவ்வாறு 126 பரிந்துரைகள் இதில் இடம்பெற்றுள்ளன.  

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"நாயகன் மீண்டும் வரான்" வீட்டுக்கு வரும் அஸ்வின்.. சிஎஸ்கேவின் மாஸ்டர் ஸ்ட்ரோக்!
IPL Auction 2025 LIVE: அண்ணன் வரார் வழியவிடு! மீண்டும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரவி அஷ்வின்
IPL Auction 2025 LIVE: அண்ணன் வரார் வழியவிடு! மீண்டும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரவி அஷ்வின்
Good Bad Ugly : காப்பியடிச்ச பாட்டு வேண்டாம்..கோபத்தில் இசையமைப்பாளரை மாற்றிய குட் பேட் அக்லி பட இயக்குநர்
Good Bad Ugly : காப்பியடிச்ச பாட்டு வேண்டாம்..கோபத்தில் இசையமைப்பாளரை மாற்றிய குட் பேட் அக்லி பட இயக்குநர்
Rishabh Pant: 10 நிமிஷத்தில் ஸ்ரேயாஸை காலி செய்த ரிஷப் பண்ட்.. ஏலத்தில் தட்டித்தூக்கிய LSG!
10 நிமிஷத்தில் ஸ்ரேயாஸை காலி செய்த ரிஷப் பண்ட்.. தட்டித்தூக்கிய LSG!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

IPL Auction 2025 | ராகுலின் STATS தெரியுமா?கோட்டைவிட்ட RCB - CSK..தட்டி தூக்கிய டெல்லி | KL RahulAR Rahman Saira Divorce Reason : வலியும் வேதனையும் அதிகம்  பிரிந்த AR ரஹ்மான்  சாய்ரா பானுIPL Auction 2025 : IPL Auction 2025 | சுத்து போட்ட 7 அணிகள்! 2025 IPL-ன் முதல் RTM! பல்ஸை எகிர வைத்த அர்ஷ்தீப் | Arshdeep singh

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"நாயகன் மீண்டும் வரான்" வீட்டுக்கு வரும் அஸ்வின்.. சிஎஸ்கேவின் மாஸ்டர் ஸ்ட்ரோக்!
IPL Auction 2025 LIVE: அண்ணன் வரார் வழியவிடு! மீண்டும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரவி அஷ்வின்
IPL Auction 2025 LIVE: அண்ணன் வரார் வழியவிடு! மீண்டும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரவி அஷ்வின்
Good Bad Ugly : காப்பியடிச்ச பாட்டு வேண்டாம்..கோபத்தில் இசையமைப்பாளரை மாற்றிய குட் பேட் அக்லி பட இயக்குநர்
Good Bad Ugly : காப்பியடிச்ச பாட்டு வேண்டாம்..கோபத்தில் இசையமைப்பாளரை மாற்றிய குட் பேட் அக்லி பட இயக்குநர்
Rishabh Pant: 10 நிமிஷத்தில் ஸ்ரேயாஸை காலி செய்த ரிஷப் பண்ட்.. ஏலத்தில் தட்டித்தூக்கிய LSG!
10 நிமிஷத்தில் ஸ்ரேயாஸை காலி செய்த ரிஷப் பண்ட்.. தட்டித்தூக்கிய LSG!
IPL Expensive Player List: மாஸ் காட்டிய பண்ட், ஸ்ரேயஸ்.. ஐபிஎல்லில் அதிக விலைக்கு ஏலம் போன டாப் 10  வீரர்கள் பட்டியல் இதோ!
IPL Expensive Player List: மாஸ் காட்டிய பண்ட், ஸ்ரேயஸ்.. ஐபிஎல்லில் அதிக விலைக்கு ஏலம் போன டாப் 10 வீரர்கள் பட்டியல் இதோ!
Mohammed Siraj : கோலியின் செல்லப்பிள்ளையை கோட்டைவிட்ட ஆர்சிபி! சோகத்தில் RCB ரசிகர்கள்
Mohammed Siraj : கோலியின் செல்லப்பிள்ளையை கோட்டைவிட்ட ஆர்சிபி! சோகத்தில் RCB ரசிகர்கள்
PM Modi: ” சிட்டுக்குருவி ரெம்ப தூரமா போயிருச்சு ” சிட்டுக்குருவி குறித்து உருக்குமாக பேசிய பிரதமர் மோடி.!
PM Modi: ” சிட்டுக்குருவி ரெம்ப தூரமா போயிருச்சு ” சிட்டுக்குருவி குறித்து உருக்குமாக பேசிய பிரதமர் மோடி.!
Shreyas Iyer: அடிச்சது ஜாக்பாட்.. ஏத்திவிட்ட டெல்லி.. அடித்துத்தூக்கிய பஞ்சாப்
Shreyas Iyer: அடிச்சது ஜாக்பாட்.. ஏத்திவிட்ட டெல்லி.. அடித்துத்தூக்கிய பஞ்சாப்
Embed widget