Rajinikanth: "பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி" - ரஜினிகாந்த்
Rajinikanth: உடல்நலம் பெற என்னை வாழ்த்திய அனைத்து அரசியல் நண்பர்கள் , திரைப்பட துறையை சார்ந்த நண்பர்கள் , வாழவைக்கும் தெய்வங்களான ரசிகர்களுக்கும் என அனைவருக்கும் நன்றி என ரஜினி தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலின் மற்றும் ரசிகர்களுக்கு நடிகர் ரஜினிகாந்த் நன்றி தெரிவித்துள்ளார். மருத்துவமனையில் இருந்த போது நலம் பெற வாழ்த்து தெரிவித்தமைக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
நலமுடன் வீடு திரும்பிய ரஜினிகாந்த்:
உடல்நலக் குறைபாடு காரணமாக கடந்த 30ம் தேதி அன்று இரவு ரஜினிகாந்த், சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த தகவல் வெளியானதுமே திரைத்துறை வட்டாரத்தில் பரபரப்பு தொற்றிக்கொண்டது. இருப்பினும், முன்கூட்டியே திட்டமிடப்பட்ட சிகிச்சை பெறுவதற்காகவே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ரஜினி தரப்பில் இருந்து விளக்கம் அளிக்கப்பட்டது.
இதையடுத்து பிரதமர் மோடி தொடங்கி முதலமைச்சர் ஸ்டாலின் , நடிகர் விஜய் வரையிலான பலரும், விரைவில் ரஜினி நலம் பெற வேண்டும் என வாழ்த்தினர். இந்நிலையில், சிகிச்சை முடிந்து நடிகர் ரஜினிகாந்த், நேற்று இரவு 11 மணியளவில் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
நன்றி தெரிவித்த ரஜினி:
இந்நிலையில்,பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலின் மற்றும் ரசிகர்களுக்கு நடிகர் ரஜினிகாந்த் நன்றி தெரிவித்துள்ளார். மருத்துவமனையில் இருந்த போது நலம் பெற வாழ்த்து தெரிவித்தமைக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
மேலும், நான் மருத்துவமனையில் இருந்த போது , நான் சீக்கிரம் உடல் நலம் பெற என்னை வாழ்த்திய அனைத்து அரசியல் நண்பர்கள் , திரைப்பட துறையை சார்ந்த நண்பர்கள் , நலன்விரும்பிகள் அனைவருக்கும் நன்றி என ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
மேலும் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
நான் மருத்துவமனையில் இருக்கும்போது, எனது நலன் விசாரித்து, நான் சீக்கிரம் குணமடைய வாழ்த்திய, எனது அருமை நண்பர் தமிழக முதலமைச்சர் மாண்புமிகு @mkstalin மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன் 🙏🏻
— Rajinikanth (@rajinikanth) October 4, 2024
சிகிச்சை:
இதயத்திற்கு செல்லும் ரத்த நாளத்தில் வீக்கம் இருந்ததாகவும், ரத்த நாள வீக்கத்திற்கு சிகிச்சை அளிக்கப்பட்டு ஸ்டென்ட் பொருத்தப்பட்டுள்ளது எனவும் மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து ஐசியு பிரிவில் இருந்து நார்மல் வார்டுக்கு மாற்றப்பட்டு, அவர் மருத்துவர்கள் கண்காணிப்பில் இருந்து வந்தார். அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, சுமார் 3 மாதங்கள் வரை அவர் ஓய்வெடுக்க மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
திரைப்படங்கள்:
ஞானவேல் இயக்கத்தில் என்கவுன்டர் ஸ்பெஷலிஷ்டாக ரஜினிகாந்த் நடித்துள்ள திரைப்படம், வரும் 10ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது. ஏற்கனவே டீசர் மற்றும் மனசிலாயோ போன்ற பாடல்கள் வெளியாகி, படத்தின் மீதான எதிர்பார்ப்பை தூண்டியுள்ளது. தொடர்ந்து, அண்மையில் வேட்டையன் படத்தின் டிரெய்லரும் வெளியானது குறிப்பிடத்தக்கது. இதனை தொடர்ந்து, நடிகர் ரஜினிகாந்த், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் கூலி படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.