மேலும் அறிய

ரூ.1,200 கொடுத்தால் அன்லிமிடெட் பீர்! புதுச்சேரியில் சர்ச்சை விளம்பரம்; 2 ரெஸ்டோ பார்களுக்கு சீல்

கலால் விதிகளை மீறி, சமூக வலைத்தளங்களில் மதுபான சலுகைகளை விளம்பரப்படுத்தியதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து, புதுச்சேரியில் செயல்பட்டு வந்த 2 ரெஸ்டோ பார்களுக்கு கலால் துறையினர் அதிரடியாக சீல் வைத்தனர்.

புதுச்சேரி: கலால் விதிகளை மீறி, சமூக வலைத்தளங்களில் மதுபானச் சலுகைகளை விளம்பரப்படுத்தியதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து, புதுச்சேரியில் செயல்பட்டு வந்த இரண்டு ரெஸ்டோ பார்களுக்கு கலால் துறையினர் அதிரடியாக சீல் வைத்தனர். வெயிலுக்கு இளநீர், மோர் குடிப்பதைவிட பீர் குடிக்கலாம் என்றும், குறிப்பிட்ட தொகையைச் செலுத்தி எத்தனை பீர் வேண்டுமானாலும் குடிக்கலாம் என்றும் வெளியிடப்பட்ட விளம்பரம் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், மாவட்ட ஆட்சியர் உத்தரவின்பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரியில் அதிகரிக்கும் ரெஸ்டோ பார்கள்

புதுச்சேரியில் சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில் பல்வேறு பகுதிகளில் ரெஸ்டோ பார்கள் செயல்பட்டு வருகின்றன. வார இறுதி நாட்களில் மட்டுமே புதுச்சேரிக்கு வந்து மதுபானங்களை அருந்திச் செல்லும் வெளிமாநில மற்றும் உள்ளூர் மதுப்பிரியர்களின் வருகை, தற்போது வார நாட்களிலும் அதிகரித்து வருவதாகக் கூறப்படுகிறது.

இதற்கிடையே, பள்ளிகள், கல்லூரிகள், கோயில்கள் மற்றும் குடியிருப்புப் பகுதிகளுக்கு அருகிலும் ரெஸ்டோ பார்கள் செயல்பட அனுமதி வழங்கப்படுவதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இதனால், பொதுமக்கள் மத்தியில் பல்வேறு கேள்விகளும் அதிருப்தியும் ஏற்பட்டுள்ளன.

மேலும், வாடிக்கையாளர்களை ஈர்ப்பதற்காகச் சில ரெஸ்டோ பார்கள் பல்வேறு சலுகைகளையும் அறிவித்து வருகின்றன. குறிப்பாக, ஆண்களுடன் வரும் பெண்களுக்கு இலவசமாக மதுபானம் வழங்கப்படும் என்பது போன்ற விளம்பரங்களும் வெளியிடப்படுவதாகக் கூறப்படுகிறது.

கலால் விதிகளை மீறும் விளம்பரங்கள்?

புதுச்சேரி கலால் துறையின் விதிகளின்படி, மதுபான விற்பனையை ஊக்குவிக்கும் வகையில் விளம்பரப் பலகைகள் வைப்பது மற்றும் வாடிக்கையாளர்களைக் கவரும் நோக்கில் பரிசுப் பொருட்கள் உள்ளிட்ட சலுகைகளை விளம்பரப்படுத்துவது தொடர்பாகக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

இருப்பினும், இந்த விதிமுறைகளை மீறி மதுபானச் சலுகைகள் குறித்த விளம்பரப் பதாகைகள் சில இடங்களில் வைக்கப்படுவதாகப் புகார்கள் எழுந்தன. பொதுமக்களின் புகார்களைத் தொடர்ந்து மாவட்ட நிர்வாகமும் கலால் துறையும் அவற்றை அகற்றும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்ததாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து, நேரடியாக விளம்பரப் பதாகைகளை வைப்பதற்குப் பதிலாக, சமூக வலைத்தளங்கள் வாயிலாக வாடிக்கையாளர்களைக் கவரும் முயற்சியில் சில ரெஸ்டோ பார் உரிமையாளர்கள் ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக, இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் மதுபானச் சலுகைகள் குறித்த வீடியோக்களும், ரெஸ்டோ பார்களில் இசைக்கு ஏற்ப பெண்கள் நடனமாடும் காட்சிகளும் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகின்றன.

‘மோருக்குப் பதில் பீர் குடிக்கலாம்’ - சர்ச்சையை ஏற்படுத்திய வீடியோ!

இந்தச் சூழலில், புதுச்சேரி திருவள்ளுவர் சாலையில் செயல்பட்டு வரும் ஒரு ரெஸ்டோ பார் உரிமையாளர் வெளியிட்ட வீடியோ பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அந்த வீடியோவில், எல் நினோ காரணமாக வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், இளநீர் குடிக்கலாம் என்றாலும் இரண்டு இளநீருக்கு மேல் குடிக்க முடியாது என்றும், மோர் குடித்தால் அதிகமாகக் குடிக்கும்போது வயிற்றுப் பிரச்சினை ஏற்படலாம் என்றும் கூறியுள்ளார்.

தொடர்ந்து, “அதற்குப் பதிலாக உங்களுக்கு அன்லிமிடெட் பீர் வேண்டுமா? எங்களிடம் வாருங்கள். ரூ.1,200 செலுத்தினால் எத்தனை பீர் வேண்டுமானாலும் குடிக்கலாம். ஆனால், இடையில் சிறுநீர் கழிக்கச் சென்றால் அந்தச் சலுகை கிடையாது” என்ற பொருளில் விளம்பரம் செய்திருந்தார்.

வெயிலில் இருந்து தப்பிக்க இளநீர், மோர் போன்றவற்றை அருந்துவதற்குப் பதிலாக பீர் குடிக்கலாம் எனக் கூறி மதுபானத்தை ஊக்குவிக்கும் வகையில் இந்த விளம்பரம் வெளியிடப்பட்டிருந்தது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

மாவட்ட ஆட்சியரிடம் புகார்

இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவியதைத் தொடர்ந்து, பொதுமக்கள் மற்றும் மதுப்பிரியர்கள் சிலர் இதுகுறித்து புதுச்சேரி கலால் துறை மற்றும் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்தனர்.

மதுபான விற்பனையை ஊக்குவிக்கும் வகையில் சமூக வலைத்தளங்களில் இதுபோன்ற விளம்பரங்களை வெளியிடுவது கலால் விதிகளுக்கு எதிரானது என்றும், இதுபோன்ற செயல்களைக் கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் புகாரில் வலியுறுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, சம்பந்தப்பட்ட ரெஸ்டோ பார்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன் கலால் துறைக்கு உத்தரவிட்டார்.

2 ரெஸ்டோ பார்களுக்கு அதிரடியாக சீல்

மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் அடிப்படையில், கலால் துறையினர் விசாரணை மற்றும் நடவடிக்கைகளை மேற்கொண்டனர். இதன் தொடர்ச்சியாக, கலால் சட்டம் மற்றும் 1970-ஆம் ஆண்டு விதிமுறைகளை மீறியதாகக் கூறி, புதுச்சேரியில் செயல்பட்டு வந்த இரண்டு ரெஸ்டோ பார்களுக்கு இன்று அதிரடியாகச் சீல் வைக்கப்பட்டது.

புதுச்சேரி கருவடிக்குப்பம் பகுதியில் செயல்பட்டு வரும் ‘ராஜராஜன் வைன்ஸ்’ மற்றும் திருவள்ளுவர் சாலையில் செயல்பட்டு வரும் ‘ராணா ஃபுட் ஸ்டாப்’ (Rana Food Stop – Atoms Kitchen) ஆகிய இரண்டு ரெஸ்டோ பார்களிலும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. புதுச்சேரி கலால் துறை தாசில்தார் ராகேஷ் கண்ணா தலைமையில், போலீசார் முன்னிலையில் சம்பந்தப்பட்ட ரெஸ்டோ பார்களுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.

சமூக வலைத்தள விளம்பரங்களுக்கும் நடவடிக்கை!

பொதுமக்களைக் கவரும் வகையில் மதுபானச் சலுகைகளை அறிவித்து, குறிப்பாக சமூக வலைத்தளங்கள் மூலம் மதுபானப் பயன்பாட்டை ஊக்குவிக்கும் விளம்பரங்களை வெளியிடுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை இந்தச் சம்பவம் உணர்த்துவதாகப் பார்க்கப்படுகிறது. புதுச்சேரியில் சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் துறையின் வளர்ச்சிக்கு ரெஸ்டோ பார்கள் பங்களித்து வந்தாலும், அவை கலால் துறை விதிமுறைகளுக்கு உட்பட்டு இயங்க வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

குறிப்பாக, மதுபான விற்பனையை ஊக்குவிக்கும் விளம்பரங்கள், கவர்ச்சிகரமான சலுகைகள் மற்றும் சமூக வலைத்தளப் பதிவுகள் தொடர்பாகக் கலால் துறை இனி தீவிர கண்காணிப்பை மேற்கொள்ளுமா என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது. அன்லிமிடெட் பீர்’ என்ற விளம்பரம் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், புதுச்சேரியில் இரண்டு ரெஸ்டோ பார்களுக்கு சீல் வைக்கப்பட்டுள்ள சம்பவம் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Voters List: வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு! - மொத்தம் எத்தனை பேர்? பெயர் சேர்ப்பு, திருத்தம் செய்வது எப்படி? முழு விவரம் இதோ!
TN Voters List: வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு! - மொத்தம் எத்தனை பேர்? பெயர் சேர்ப்பு, திருத்தம் செய்வது எப்படி? முழு விவரம் இதோ!
கள்ளக்குறிச்சி எம்எல்ஏ விவகாரம்: தமிழக அரசு எதையோ மறைக்கிறதா? - அண்ணாமலை கேள்வி
கள்ளக்குறிச்சி எம்எல்ஏ விவகாரம்: தமிழக அரசு எதையோ மறைக்கிறதா? - அண்ணாமலை கேள்வி
மீண்டும் மீண்டுமா? ராணிப்பேட்டையிலும் கண்டறியப்பட்ட போலி நூல்கள்! - பின்னணியில் யார்?
மீண்டும் மீண்டுமா? ராணிப்பேட்டையிலும் கண்டறியப்பட்ட போலி நூல்கள்! - பின்னணியில் யார்?
வங்கக்கடலில் புயல் உருவாக வாய்ப்பு: தமிழகத்தில் கனமழை எச்சரிக்கை, சென்னைக்கு என்ன?
வங்கக்கடலில் புயல் உருவாக வாய்ப்பு: தமிழகத்தில் கனமழை எச்சரிக்கை, சென்னைக்கு என்ன?
Advertisement
Advertisement

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Voters List: தமிழ்நாட்டில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு - திருத்தம் மேற்கொள்ள அறிவிப்பு வெளியிட்ட தேர்தல் ஆணையம்!
TN Voters List: தமிழ்நாட்டில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு - திருத்தம் மேற்கொள்ள அறிவிப்பு வெளியிட்ட தேர்தல் ஆணையம்!
முதல்வர் விஜய்யின் மெகா அறிவிப்பு.. சொந்த வீடு இல்லாதவர்களுக்கு குட் நியூஸ்.. புதிய வீடுகள் யாருக்கு கிடைக்கும்?
முதல்வர் விஜய்யின் மெகா அறிவிப்பு.. சொந்த வீடு இல்லாதவர்களுக்கு குட் நியூஸ்.. புதிய வீடுகள் யாருக்கு கிடைக்கும்?
மீண்டும் மீண்டுமா? ராணிப்பேட்டையிலும் கண்டறியப்பட்ட போலி நூல்கள்! - பின்னணியில் யார்?
மீண்டும் மீண்டுமா? ராணிப்பேட்டையிலும் கண்டறியப்பட்ட போலி நூல்கள்! - பின்னணியில் யார்?
வங்கக்கடலில் புயல் உருவாக வாய்ப்பு: தமிழகத்தில் கனமழை எச்சரிக்கை, சென்னைக்கு என்ன?
வங்கக்கடலில் புயல் உருவாக வாய்ப்பு: தமிழகத்தில் கனமழை எச்சரிக்கை, சென்னைக்கு என்ன?
"Diversion politics, துணிச்சல் இல்லாத முதல்வர்" - எதிர்க்கட்சித்தலைவர் கடும் தாக்கு!
"சட்டம் ஒழுங்கு சீரழிந்துள்ளதாக திட்டமிட்டு பரப்பப்படும் அவதூறு" - திமுகவை கடுமையாக சாடிய அமைச்சர்!
திறந்த 15 நாட்களில்.. தனிஷ்க் நகைக்கடையில் 35 கிலோ தங்க நகைகள் கொள்ளை.. இதன் மதிப்பு எத்தனை கோடி தெரியுமா?
திறந்த 15 நாட்களில்.. தனிஷ்க் நகைக்கடையில் 35 கிலோ தங்க நகைகள் கொள்ளை.. இதன் மதிப்பு எத்தனை கோடி தெரியுமா?
பள்ளி மாணவர்களுக்கு ரெயின் கோட், கம்பளி ஸ்வெட்டர்..! ரூ.52 கோடியில் 4 புதிய டெண்டர்கள் - விஜய் அரசு அதிரடி
பள்ளி மாணவர்களுக்கு ரெயின் கோட், கம்பளி ஸ்வெட்டர்..! ரூ.52 கோடியில் 4 புதிய டெண்டர்கள் - விஜய் அரசு அதிரடி
Embed widget