மேலும் அறிய

புதுச்சேரி அரசு செவிலியர்களுக்கு புதிய சீருடை அறிமுகம்: 30 ஆண்டு போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி!

புதுச்சேரி அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் செவிலியர்களுக்கு புதிய வண்ணத்திலான சீருடையை அறிமுகப்படுத்தி அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

புதுச்சேரி : புதுச்சேரி அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் செவிலியர்களுக்கு புதிய வண்ணத்திலான சீருடையை அறிமுகப்படுத்தி புதுச்சேரி அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

 

இது குறித்து புதுச்சேரி அரசு செவிலியர் அரசு ஊழியர்கள் சங்கம் (PGNOA) வெளியிட்டுள்ள பத்திரிகை அறிக்கையில் கூறியிருப்பதாவது:

புதிய அரசாணை வெளியீடு

புதுச்சேரி அரசு சுகாதாரத் துறை சார்பில் G.O.Ms.No.22 (நாள்: 27.07.2026) என்ற வரலாற்றுச் சிறப்புமிக்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதன் மூலம் Nursing Officer, Senior Nursing Officer, Assistant Nursing Superintendent மற்றும் Deputy Nursing Superintendent ஆகிய நிலைகளில் உள்ள அரசு செவிலியர்களுக்கு புதிய சீருடை உறுதியாகியுள்ளது.

புதிய சீருடை விவரம்:

பெண்கள்: கேமல் நிற சுடிதார் (Camel Colour Suit Salwar) மற்றும் வெள்ளை நிற ஓவர் கோட்.

ஆண்கள்: கேமல் நிற சட்டை (Camel Colour Formal Shirt), காபி நிற பேண்ட் (Coffee Colour Pants) மற்றும் வெள்ளை நிற ஓவர் கோட்.

காலணி: பணியின் போது வெள்ளை நிற ஷூ மற்றும் வெள்ளை நிற சாக்ஸ் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

30 ஆண்டு கால வரலாறு

ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் இருந்த பாரம்பரிய சீருடை மாற்றப்பட்டு, கடந்த 11.07.1996 முதல் வெள்ளை நிற சுடிதார் மற்றும் வெள்ளை ஓவர் கோட் நடைமுறைக்கு வந்தது. கடந்த 30 ஆண்டுகளாக இந்தச் சீருடையே பயன்பாட்டில் இருந்து வந்தது.

காலப்போக்கில் தனியார் செவிலியர் கல்லூரி மாணவர்கள், ANM பயிற்சி மாணவர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் இதே வெள்ளை நிற சீருடையைப் பயன்படுத்தத் தொடங்கியதால், அரசு செவிலியர்களுக்கான தொழில்முறைத் தனித்துவம் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டது.

"அரசு செவிலியர்களுக்கென தனித்துவமான, கண்ணியமான மற்றும் நவீன அடையாளத்தை உருவாக்க வேண்டும் என்பதற்காக PGNOA சங்கம் தொடர்ந்து போராடி வந்தது."

தொடர் முயற்சிகளுக்கு வெற்றி

சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பெங்களூரில் நடைபெற்ற தேசிய ஆலோசனைக் கூட்டத்தில், இந்திய அரசின் நர்சிங் அட்வைசர் திருமதி தீபிகா அவர்களிடம் PGNOA சார்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. மாநிலங்கள் தங்களுக்கான தனித்துவமான சீருடையை தேர்வு செய்யலாம் என்ற வழிகாட்டுதல் கிடைத்ததைத் தொடர்ந்து, தலைமைச் செயலகம் மற்றும் சுகாதாரத் துறை இயக்குநர் அலுவலகங்களில் தொடர்ந்து அழுத்தமாக வலியுறுத்தப்பட்டது.

இதன் பலனாக தற்போது இந்த புதிய சீருடை அரசாணை வெளியாகியுள்ளது.

நன்றி தெரிவிப்பு

இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றிக்கு ஒத்துழைப்பு வழங்கிய மாண்புமிகு புதுச்சேரி துணைநிலை ஆளுநர், முதலமைச்சர், சுகாதாரத் துறை செயலாளர், இயக்குநர் மற்றும் அனைத்து துறை அதிகாரிகளுக்கும், ஆதரவளித்த சுகாதார ஊழியர் சங்கங்களின் சம்மேளனத்திற்கும் புதுச்சேரி அரசு செவிலியர் அரசு ஊழியர்கள் சங்கம் (PGNOA) தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது.

இந்த மாற்றம் அரசு செவிலியர்களின் தொழில்முறை கண்ணியத்தையும், சமூக மதிப்பையும் மேலும் உயர்த்தும் என்று சங்க நிர்வாகிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்

Advertisement

தலைப்பு செய்திகள்

Udhayanidhi Stalin: இந்த உருட்டல் மிரட்டல் வேண்டாம்.! FILE-ஐ ஓபன் பண்ணுங்க சிஎம் - சட்டசபையில் சீறிய உதயநிதி
இந்த உருட்டல் மிரட்டல் வேண்டாம்.! FILE-ஐ ஓபன் பண்ணுங்க சிஎம் - சட்டசபையில் சீறிய உதயநிதி
ரூ.68 கோடியில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம்! கழிவுநீருக்கு பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு! காஞ்சிபுரத்தில் என்ன நடக்கிறது?
காஞ்சிபுரத்தில் 68 கோடியில் சுத்திகரிப்பு நிலையம்! கழிவுநீருக்கு பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு!
பாங்காக் விமானத்தில் வந்த 'கடத்தல் குருவி': சென்னை ஏர்போர்ட்டில் மடக்கிப் பிடித்த சுங்கத்துறை அதிகாரிகள்!
பாங்காக் விமானத்தில் வந்த 'கடத்தல் குருவி': சென்னை ஏர்போர்ட்டில் மடக்கிப் பிடித்த அதிகாரிகள்!
புதிய தொழில்முனைவோருக்கு பொன்னான வாய்ப்பு: தமிழக அரசின் ‘நீட்ஸ்’ திட்டத்தில் ₹75 லட்சம் வரை மானியக் கடன்!
புதிய தொழில்முனைவோருக்கு பொன்னான வாய்ப்பு: தமிழக அரசின் ‘நீட்ஸ்’ திட்டத்தில் ₹75 லட்சம் வரை மானியக் கடன்!
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK TVK: களேபரமான விவாதம் - அராஜகத்தில் ஈடுபட்ட திமுகவினர்? நாஞ்சில் சம்பத் மீது சேர் தூக்கியடிப்பு
களேபரமான விவாதம் - அராஜகத்தில் ஈடுபட்ட திமுகவினர்? நாஞ்சில் சம்பத் மீது சேர் தூக்கியடிப்பு
Education Scheme: கடனில்லை, ரூ.36 லட்சம் வரை நிதியுதவி - கல்வி திட்டத்திற்கு விண்ணப்பிப்பது எப்படி? தேவையான ஆவணங்கள்
கடனில்லை, ரூ.36 லட்சம் வரை நிதியுதவி - கல்வி திட்டத்திற்கு விண்ணப்பிப்பது எப்படி? தேவையான ஆவணங்கள்
Somalia Pirates: மீண்டும் கடலிறங்கிய சோமாலியா கொள்ளையர்கள்.! துருக்கி கப்பல் கடத்தல்; 6 இந்தியர்களின் கதி என்ன.?
மீண்டும் கடலிறங்கிய சோமாலியா கொள்ளையர்கள்.! துருக்கி கப்பல் கடத்தல்; 6 இந்தியர்களின் கதி என்ன.?
TN Weather News: சென்னை உட்பட இன்று எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு? தமிழக வானிலை அறிக்கை
சென்னை உட்பட இன்று எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு? தமிழக வானிலை அறிக்கை
Kia Sorento Hybrid Diesel: ஃபார்ச்சூனருக்கு செக் வைக்குமா சொரெண்டோ.! ஹைப்ரிட் டீசல் பதிப்பை இறக்கும் கியா; அசத்தும் ஏஐ உதவியாளர்.!
ஃபார்ச்சூனருக்கு செக் வைக்குமா சொரெண்டோ.! ஹைப்ரிட் டீசல் பதிப்பை இறக்கும் கியா; அசத்தும் ஏஐ உதவியாளர்.!
Toyota Fortuner Legender on EMI: மெர்சலான டொயோட்டா ஃபார்ச்சூனர் லெஜெண்டர லோன்ல வாங்க உங்க சம்பளம் எவ்ளோ இருக்கணும்.? EMI என்ன.?
மெர்சலான டொயோட்டா ஃபார்ச்சூனர் லெஜெண்டர லோன்ல வாங்க உங்க சம்பளம் எவ்ளோ இருக்கணும்.? EMI என்ன.?
Royal Enfield: பெஸ்ட் பைக்கை பீஸ்ட் ஆக்கும் ராயன் என்ஃபீல்ட் - ஹிமாலயன் 750, 5 அம்சங்கள் - லாஞ்ச், விலை விவரங்கள்
பெஸ்ட் பைக்கை பீஸ்ட் ஆக்கும் ராயன் என்ஃபீல்ட் - ஹிமாலயன் 750, 5 அம்சங்கள் - லாஞ்ச், விலை விவரங்கள்
Hybrid Ceiling Fan: கார்ல தான இருந்துச்சு, இப்போ சீலிங் ஃபேன்லயும் ஹைப்ரிட் வந்துடுச்சா.?! என்ன ஸ்பெஷல் தெரியுமா.?
கார்ல தான இருந்துச்சு, இப்போ சீலிங் ஃபேன்லயும் ஹைப்ரிட் வந்துடுச்சா.?! என்ன ஸ்பெஷல் தெரியுமா.?
Embed widget