மேலும் அறிய

Advocate General: புதிய தலைமை வழக்கறிஞராக பி.எஸ் ராமன் இன்று பதவியேற்பு.. யார் இவர்?

தமிழ்நாட்டின் புதிய தலைமை வழக்கறிஞராக பி.எஸ் ராமன் இன்று பதவி ஏற்க உள்ளார்.

தமிழ்நாடு தலைமை வழக்கறிஞராக இருந்த ஆர். சண்முகசுந்தரம் நேற்று ராஜினாமா செய்த நிலையில், தமிழ்நாட்டின் புதிய தலைமை வழக்கறிஞராக பட்டாபி சுந்தர் ராமன் எனப்படும் பி எஸ் ராமன் இன்று பதவி ஏற்கிறார்.

இதற்கு ஆளுநர் நேற்று இரவு ஒப்புதல் அளித்த நிலையில் இன்று காலை ஆளுநர் மாளிகையில் அதற்கான ஆவணங்களில் கையெழுத்திடுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்றத்தில் அவரது அறையில் பதவி ஏற்கிறார்.

யார் இந்த பி.எஸ் ராமன்?

பட்டாபி சுந்தர் ராமன் எனப்படும் பி எஸ் ராமன் சென்னை சட்டக் கல்லூரியில் சட்டப்படிப்பை முடித்து, 1985-ம் ஆண்டு வழக்கறிஞராக பதிவு வகித்தார். சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றிய இவர் 2004 ஆம் ஆண்டு மூத்த வழக்கறிஞராக சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்தது.

மூத்த வழக்கறிஞர் மற்றும் தமிழ்நாட்டின் முன்னாள் அட்வகேட்-ஜெனரல் அதாவது தலைமை வழக்கறிஞர் பி.எஸ் ராமன் முன்னாள் அட்வகேட் ஜெனரலும் திமுக அரசியல்வாதியுமான வி.பி.ராமனின் இளைய மகன் ஆவார். இவரது மூத்த சகோதரர் பிரபல மேடை மற்றும் தொலைக்காட்சி நடிகர் மோகன் வி. ராம் ஆவார்.

ராமன் சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் இந்திய உச்ச நீதிமன்றத்தில் பயிற்சி செய்துவந்தார். 11 ஜூன் 2006 அன்று, ஆர். முத்துக்குமாரசாமிக்குப் பதிலாக ராமன் கூடுதல் அட்வகேட்-ஜெனரலாக நியமிக்கப்பட்டார். 29 ஜூலை 2009 அன்று தமிழ்நாடு வழக்கறிஞர் ஜி. மாசிலாமணி ராஜினாமா செய்தபோது ராமன் அட்வகேட் ஜெனரலாக அப்போதைய முதல்வர் கருணாநிதி நியமனம் செய்தார். இவர் தமிழ்நாடு தொடர்பான பல்வேறு முக்கிய வழக்குகளில் ஆஜராகி வாதிட்டுள்ளார். அதன்பின் தற்போது மீண்டும் திமுக ஆட்சியில் அட்வகேட் ஜெனரலாக பதவி ஏற்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.  

திமுக ஆட்சி அமைந்ததும், தலைமை செயலாளர் முதல் பல்வேறு அதிகாரிகள் மாற்றம் செய்யப்பட்டனர்.  அப்போது, ஆர். சணுமுகசுந்தரம் தலைமை வழக்கறிஞராக நியமனம் செய்யப்பட்டார்.  இவர், 1995 ஆம் ஆண்டு ஜெயலலிதாவுக்கு எதிரான வழக்கில் தீவிரமாக இருந்தார். டான்சி நிலத்தை முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வாங்கிது தொடர்பான வழக்கில் ஆவணத்தை தயார் செய்து கொண்டிருந்த போது ரவுடி கும்பலால் கடுமையாக தாக்கப்பட்டார்.  

1989 முதல் 1991 வரையிலான திமுக ஆட்சி காலத்தில்  கூடுதல் குற்றவியல் வழக்கறிஞராகவும், 1996 முதல் 2001 ஆம் ஆண்டு வரை மாநில தலைமை அரசு குற்றவியல் வழக்கறிஞராகவும் பதவிவகித்தவர் இவர். மேலும், 2000ஆம் ஆண்டில் மூத்த வழக்கறிஞராக சென்னை உயர் நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்டார்.

அதன் பின், 2002 முதல் 2008 வரை மாநிலங்களவை உறுப்பினராக இருந்தார். 2015 ஆம் ஆண்டு முதல் 2017  ஆம் ஆண்டு வரை  மெட்ராஸ் பார் அசோசியேசன் தலைவராக இருந்தவர் சண்முகசுந்தரம்.

கடந்த 2022 ஆம் ஆண்டு ராஜினாமா முடிவை தமிழக முதல்வரிடம் கொடுத்தபோது, தற்போதய சூழலில் ராஜினாமா செய்ய வேண்டாம் என்று முதல்வர் கேட்டுக்கொண்டதால், தலைமை வழக்கறிஞராக  பணியாற்றிவந்தார். ஆனால் தற்போது மீண்டும் தனது பதவியை ராஜினாமா செய்வதாக தெரிவித்துள்ளார்.

TRB Annual Planner 2024: நோட் பண்ணிக்கோங்க! ஆசிரியர் தகுதித் தேர்வு உள்ளிட்ட 7 வகைப் பணிகள்: தேர்வு அட்டவணையை வெளியிட்ட டிஆர்பி!

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"சிலர் விஷத்தை விதைக்கிறாங்க" நாடாளுமன்றத்தில் இறங்கி அடித்த மோடி!
"தமிழ்நாட்டுக்கு பெரியார்.. குஜராத்துக்கு காந்தி" நாடாளுமன்றத்தில் பாஜகவை அதிரவிட்ட ராகுல் காந்தி!
சபரிமலை செல்லும் பக்தர்கள் மலைவழிச்சாலையில் இரவு நேர பயணத்தை தவிர்க்க வேண்டும் - மாவட்ட நிர்வாகம்
சபரிமலை செல்லும் பக்தர்கள் மலைவழிச்சாலையில் இரவு நேர பயணத்தை தவிர்க்க வேண்டும் - மாவட்ட நிர்வாகம்
எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக மீண்டும் உயர் நீதிமன்றத்தில் வழக்கு
எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக மீண்டும் உயர் நீதிமன்றத்தில் வழக்கு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Gukesh Dommaraju Profile : குருவை மிஞ்சிய சிஷ்யன்?சொல்லி அடித்த 7 வயது சிறுவன்!யார் இந்த குகேஷ்?Aadhav Arjuna on DMK: ”என்ன அவங்க திட்ட சொன்னங்க”விசிகவை தூண்டிவிட்ட திமுக?ஆதவ் பகீர் குற்றச்சாட்டுVijay Trisha Relationship | கிசு கிசு..விஜய்யுடன் த்ரிஷா EVKS  Elangovan: ஜெ. கலைஞரை அலறவிட்டவர் சிவாஜியின் சிஷ்யன்..! யார் இந்த EVKS இளங்கோவன்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"சிலர் விஷத்தை விதைக்கிறாங்க" நாடாளுமன்றத்தில் இறங்கி அடித்த மோடி!
"தமிழ்நாட்டுக்கு பெரியார்.. குஜராத்துக்கு காந்தி" நாடாளுமன்றத்தில் பாஜகவை அதிரவிட்ட ராகுல் காந்தி!
சபரிமலை செல்லும் பக்தர்கள் மலைவழிச்சாலையில் இரவு நேர பயணத்தை தவிர்க்க வேண்டும் - மாவட்ட நிர்வாகம்
சபரிமலை செல்லும் பக்தர்கள் மலைவழிச்சாலையில் இரவு நேர பயணத்தை தவிர்க்க வேண்டும் - மாவட்ட நிர்வாகம்
எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக மீண்டும் உயர் நீதிமன்றத்தில் வழக்கு
எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக மீண்டும் உயர் நீதிமன்றத்தில் வழக்கு
"சிக்கன் சாப்பிடல" பிரச்னையை கிளப்பிய பாஜக.. பேக் அடித்த முதல்வர்!
TN Rain Alert: டிச.16-ம் தேதி 6 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை - வானிலை மையம் அறிவிப்பு!
TN Rain Alert: டிச.16-ம் தேதி 6 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை - வானிலை மையம் அறிவிப்பு!
இனி, பிணையில்லாம 2 லட்சம் வரை கடன் வாங்கலாம்.. விவசாயிகளுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த ஆர்பிஐ!
இனி, பிணையில்லாம 2 லட்சம் வரை கடன் வாங்கலாம்.. விவசாயிகளுக்கு ஹேப்பி நியூஸ்!
3000 ஆண்டு ஆவணம்.. 90'S கிட்ஸ் ஃபேவரட்.. மாவளி சுற்றுதல் வரலாறு தெரியுமா ? 
3000 ஆண்டு ஆவணம்.. 90'S கிட்ஸ் ஃபேவரட்.. மாவளி சுற்றுதல் வரலாறு தெரியுமா ? 
Embed widget