மேலும் அறிய
தனியார் நிறுவனங்களில் வேலை; இனி 8 மணிநேரத்திலிருந்து 12 மணி நேரமா? - அமைச்சர் சொன்ன விளக்கம்
தனியார் நிறுவனங்களில் 12 மணி நேரம் பணியாற்றுவது கட்டாயமல்ல என்று தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் கணேசன் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் கணேசன்
தனியார் நிறுவனங்களில் 12 மணி நேரம் பணியாற்றுவது கட்டாயமல்ல என்று தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் கணேசன் தெரிவித்துள்ளார்.
தனியார் நிறுவனங்களில் வேலை நேரத்தை 8 மணி நேரத்திலிருந்து 12 மணி நேரமாக உயர்த்துவது தொடர்பான சட்ட மசோதா சட்டப்பேரவையில் இன்று விவாதத்திற்கு வருகிறது.
இந்நிலையில் சில ஐ டி நிறுவனங்கள் 12 மணி நேர வேலைக்கு சம்மதம் தெரிவித்ததால் இந்த சட்ட மசோதா கொண்டு வருவதாகவும், மற்றப்படி தனியார் நிறுவனங்களில் வேலை செய்யும் நேரம் 8 மணி நேரம் என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை என்றும் அமைச்சர் கணேசன் தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு விளக்கம் அளித்துள்ளார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்





















