மேலும் அறிய
Advertisement
செருப்புக்கு ஏற்றார்போல் பாதங்களை செதுக்க முடியாது - மதுரை எம்.பி சு.வெங்கடேசன் ட்வீட்
”பாதங்களின் அளவுக்கு செருப்பு இருக்க வேண்டுமேயொழிய, செருப்புக்கு தகுந்தாற் போல பாதங்களை செதுக்க முடியாது. மாநில மொழித் தேர்ச்சிக்கு வழி செய்ய சு.வெங்கடேசன் கோரிக்கை.
அஞ்சல் பணி நியமன முறையில் மாற்றம் செய்து மாநில மொழி அறிவை உறுதிபடுத்த ஒன்றிய அமைச்சருக்கு நான் எழுதிய கடிதத்திற்கு,அஞ்சல் இயக்குனரகத்தின் பரிசீலனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக இந்திய அஞ்சல் அலுவலகத்தில் பதில் அளித்துள்ளது. சு.வெங்கடேசன் ட்வீட்.
மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ஜூலை 07, 2021 அன்று ஒன்றிய அரசின் தகவல் தொடர்பு அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அவர்களுக்கு கடிதம் எழுதி இருந்தேன். தபால் துறையில் மக்கள் தொடர்பு நிலையில் உள்ள அலுவலர்கள் நியமனங்களுக்கு நடைபெறும் தேர்வுகளில் மாநில மொழி தேர்ச்சிக்கு எந்த ஏற்பாடும் இல்லை. அஞ்சல் உதவியாளர், அஞ்சல் பிரிப்பு உதவியாளர், ஆய்வாளர்கள் ஆகிய பணிகளை செய்யும் ஊழியர்களுக்கான தேர்வுகளை அலுவலர் நியமன ஆணையம் (Staff Selection Commission) நடத்தும் போது தமிழில் அவர்கள் உரையாடக் கூடியவர்களா என்று கூட சோதித்துப் பார்ப்பதில்லை. இவர்களிடம் சேவை நாடி வரும் பொது மக்கள் திண்டாடுகிறார்கள்.
அஞ்சல் உதவியாளர்கள் முன் வரிசைப் பணியாளர்கள். அஞ்சல் பிரிப்பு உதவியாளர்கள் தபால்கள் உரிய முகவரிக்கு போய்ச் சேருவதை உறுதி செய்ய வேண்டியவர்கள். ஆய்வாளர்கள் கிராமப்புற அஞ்சல் அலுவலகப் பணிகளை மேற்பார்வை இடுபவர்கள். இவர்களுக்கு உள்ளூர் மொழிகள் தெரியாவிட்டால் எப்படி பணி புரிய முடியும்? சேவைகள்தான் சிரமத்திற்கு ஆளாகும்.அஞ்சல் பணி நியமன முறையில் மாற்றம் செய்து மாநில மொழி அறிவை உறுதிபடுத்த ஒன்றிய அமைச்சருக்கு நான் எழுதிய கடிதத்திற்கு,அஞ்சல் இயக்குனரகத்தின் பரிசீலனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக @IndiaPostOffice பதில் அளித்துள்ளது. பதிலுக்கு நன்றி.
— Su Venkatesan MP (@SuVe4Madurai) September 25, 2021
பாதங்களுக்கு செருப்பே தவிர செருப்புக்கு பாதம் அல்ல. pic.twitter.com/gmGo3qKxrJ
இப்பணி நியமனங்கள் அகில இந்திய அளவில் மேற்கொள்ளப்படுவது என்றாலும் எனது கோரிக்கை அஞ்சல் இயக்குனரகத்தின் பரிசீலனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக "இந்தியா போஸ்ட்" பதில் அளித்துள்ளது. பதிலுக்கு நன்றி.
பாதங்களின் அளவுக்கு செருப்பு இருக்க வேண்டுமே ஒழிய, செருப்புக்கு தகுந்தாற் போல பாதங்களை செதுக்க முடியாது. மொழி தெரியாதவர்களிடம் மக்கள் எப்படி உரையாடுவது? சேவை பெறுவது? மக்கள் நலனே முக்கியம். அஞ்சல் உதவியாளர், அஞ்சல் பிரிப்பு உதவியாளர், ஆய்வாளர்கள் தேர்வுகளை கடந்த காலங்களில் இருந்தது போல மாநில அளவில் நடத்துங்கள். மாநில மொழித் தேர்ச்சிக்கு வழி செய்யுங்கள்.
மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - Karankadu Eco Tourism : காரசார நண்டு, கடல் பயணம், காரங்காடு சூழல் சுற்றுலா.. கண்டிப்பா ஒரு டூர் போடுங்க..!
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
பொழுதுபோக்கு
ஆட்டோ
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion