மேலும் அறிய

தீவிரமடையும் கோடநாடு வழக்கு: விசாரணையில் ஜெயலலிதா டிரைவரின் அண்ணன் கூறியது என்ன?

கோடநாடு வழக்கில் சயனை தொடர்ந்து, முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா கார் டிரைவராக இருந்த கனகராஜின் அண்ணன் தனபாலிடம், நீலகிரி போலீசார் ஒரு மணி நேரம் ரகசிய விசாரணை நடத்தினர்.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு சொந்தமான நீலகிரியில் உள்ள கோடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017 ம் ஆண்டு ஏப்ரல் 23 ஆம் தேதி கொள்ளை சம்பவம் நடைபெற்றது. இரவில் ஆயுதங்களுடன் ஸ்டேட்டுக்குள்  அத்துமீறி நுழைந்த கும்பல், பாதுகாவலராக இருந்த ஓம்பகதூர் என்பவரை கொலை செய்து விட்டு, சில மதிப்புமிக்க பொருட்களை திருடிச் சென்றது. இந்த கொலை மற்றும் கொள்ளை சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இது தொடர்பாக சயன், சதீசன் , உதயகுமார் , சம்சிர் அலி, தீபு ,சந்தோஷ், திலிப் ஜாய், வாளையார் மனோஜ், மனோஜ்  உள்ளிட்ட 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக உதகை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.

கோடநாடு வழக்கில் தொடர்புடைய 5 பேர் அடுத்தடுத்து உயிரிழந்தனர். குறிப்பாக இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் ஓட்டுநர் கனகராஜ், சேலம் மாவட்டத்தில் நடந்த கார் விபத்தில் உயிரிழந்தார். அதேபோல கோடநாடு எஸ்டேட்டில் கம்யூட்டர் ஆப்ரேட்டராக பணியாற்றிய தினேஷ்குமார் என்பவர் தற்கொலை செய்து கொண்டார். கனகராஜின் நண்பரும், முக்கிய குற்றவாளியான சயன் கேரள மாநிலம் பாலக்காடு அருகே குடும்பத்துடன் செல்லும் போது கார் விபத்தில் சிக்கினார். அதில் சயனின் மனைவி மற்றும் மகள் இருவரும் உயிரிழந்தனர்.

தீவிரமடையும் கோடநாடு வழக்கு: விசாரணையில் ஜெயலலிதா டிரைவரின் அண்ணன் கூறியது என்ன?

கடந்த 2019 ம் ஆண்டில் அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு கோடநாடு கொலை, கொள்ளை தொடர்பு இருப்பதாக முக்கிய குற்றவாளியான சயன் கூறியிருந்தார். இந்நிலையில் இந்த வழக்கில் கூடுதல் விசாரணை தேவையுள்ளது என நீதிமன்றத்தில் தெரிவித்த நீலகிரி காவல் துறையினர், சயானை விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் அனுப்பியது. இதையடுத்து கடந்த 17 ம் தேதி ஆஜரான சயனிடம் 3 மணி நேரம் காவல் துறையினர் விசாரணை நடத்தினர். இதையடுத்து கோடநாடு வழக்கில் தன்னை குறி வைப்பதாக முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்ட, இவ்வழக்கு அரசியல் வட்டாரத்தில் பேசு பொருளாக மாறியுள்ளது.

தீவிரமடையும் கோடநாடு வழக்கு: விசாரணையில் ஜெயலலிதா டிரைவரின் அண்ணன் கூறியது என்ன?

இந்நிலையில் நீலகிரி மாவட்ட குற்றபிரிவு அலுவலகத்தில், விபத்தில் உயிரிழந்த கனகராஜ் அண்ணன், தனபால் ஆஜரானார். தனபாலிடம் நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆசிஷ் ராவத், விசாரணை அதிகாரி வேல்முருகன், குன்னூர் டி.எஸ்.பி., சுரேஷ் ஆகியோர் ஒரு மணி நேரம் விசாரணை நடத்தினர். அப்போது கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக தனபால் காவல் துறையினரிடம் வாக்குமூலம் அளித்தார். சயனை தொடந்து கனகராஜின் அண்ணன் தனபாலிடம் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு இருப்பது, வழக்கு விசாரணை தீவிரமடைந்து இருப்பதை வெளிக்காட்டும் வகையில் அமைந்துள்ளது.

சசிகலா, எடப்பாடி பழனிசாமி, சுதாகரன் ஆகியோரை விசாரிக்க உத்தரவிட வேண்டும் என இவ்வழக்கில் கைதாகியுள்ள சதீஷன், சந்தோஷ் சாமி உள்ளிட்ட 3 பேர் சார்பில் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதேபோல கோடநாடு வழக்கில் தொடர்புடையவர்களை கண்டறிந்து சட்டத்திற்கு முன் நிறுத்தவே விரிவான விசாரணை நடைபெற்று வருவதாக நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு விளக்கம் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தலைப்பு செய்திகள்

புதுச்சேரியில் கல்லூரி மாணவர்களுக்கு விரைவில் இலவசப் பேருந்து சேவை - அமைச்சர் நமச்சிவாயம் அறிவிப்பு!
புதுச்சேரியில் கல்லூரி மாணவர்களுக்கு விரைவில் இலவசப் பேருந்து சேவை - அமைச்சர் நமச்சிவாயம் அறிவிப்பு!
மெட்ரோவுக்கு மேலே பிரம்மாண்ட பாலம்... நடுவில் இப்படி ஒரு பிரச்னையா? அதிகாரிகளின் அதிரடி பிளான்!
மெட்ரோவுக்கு மேலே பிரம்மாண்ட பாலம்... நடுவில் இப்படி ஒரு பிரச்னையா? அதிகாரிகளின் அதிரடி பிளான்!
உங்களுடன் நீண்ட நேரம் பேச விரும்பியும், இக்கட்டான நிலையில் பேச இயலாத நிலையில் இருக்கிறேன் - மாநாட்டில் திருமா வேதனை !
உங்களுடன் நீண்ட நேரம் பேச விரும்பியும், இக்கட்டான நிலையில் பேச இயலாத நிலையில் இருக்கிறேன் - மாநாட்டில் திருமா வேதனை !
TVK VCK Alliance: இனி விஜய்கூடதான் டிராவல்.. ஆட்சியில் உக்காந்து 3 மாசம் முடிஞ்சு சொன்ன திருமா - என்ன காரணம்?
TVK VCK Alliance: இனி விஜய்கூடதான் டிராவல்.. ஆட்சியில் உக்காந்து 3 மாசம் முடிஞ்சு சொன்ன திருமா - என்ன காரணம்?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK VCK Alliance: இனி விஜய்கூடதான் டிராவல்.. ஆட்சியில் உக்காந்து 3 மாசம் முடிஞ்சு சொன்ன திருமா - என்ன காரணம்?
TVK VCK Alliance: இனி விஜய்கூடதான் டிராவல்.. ஆட்சியில் உக்காந்து 3 மாசம் முடிஞ்சு சொன்ன திருமா - என்ன காரணம்?
Director Cheran: ”அப்பா - மகன் சண்டையால் படம் நின்னு போச்சு” அன்புமணி - ராமதாஸால் கடுப்பான இயக்குனர் சேரன்
”அப்பா - மகன் சண்டையால் படம் நின்னு போச்சு” அன்புமணி - ராமதாஸால் கடுப்பான இயக்குனர் சேரன்
Aavin Price: ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்த தமிழக அரசு முடிவு? உற்பத்தியாளர்கள் ஹாப்பி & கலக்கத்தில் பயனர்கள்
ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்த தமிழக அரசு முடிவு? உற்பத்தியாளர்கள் ஹாப்பி & கலக்கத்தில் பயனர்கள்
உழைக்கும் வர்க்கத்தின் தோழன்... ஹெவி ஃபெர்பார்மன்ஸ் பண்ணும் TVS XL 100 Heavy Duty வாங்கலாமா?
உழைக்கும் வர்க்கத்தின் தோழன்... ஹெவி ஃபெர்பார்மன்ஸ் பண்ணும் TVS XL 100 Heavy Duty வாங்கலாமா?
TN Weather News: இன்றைய கனமழை எச்சரிக்கை..! எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா? தமிழக வானிலை அறிக்கை
இன்றைய கனமழை எச்சரிக்கை..! எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா? தமிழக வானிலை அறிக்கை
IND vs SL 1st Test: சுருண்ட இலங்கை.. இமாலய இலக்கை நிர்ணயிக்குமா இந்தியா? வெற்றி வசப்படுமா?
IND vs SL 1st Test: சுருண்ட இலங்கை.. இமாலய இலக்கை நிர்ணயிக்குமா இந்தியா? வெற்றி வசப்படுமா?
Hybrid SUV: இனி பட்ஜெட்டில் ஸ்ட்ராங்கான ஹைப்ரிட்னா நாங்க தான்..! பட்டையை கிளப்பும் 3 எஸ்யுவிக்கள் - முழு விவரம்
இனி பட்ஜெட்டில் ஸ்ட்ராங்கான ஹைப்ரிட்னா நாங்க தான்..! பட்டையை கிளப்பும் 3 எஸ்யுவிக்கள் - முழு விவரம்
Trump Threatens Oman: “குறுக்கால வந்தா குண்டுமழையால சின்னாபின்னமாக்குவோம்
“குறுக்கால வந்தா குண்டுமழையால சின்னாபின்னமாக்குவோம்"; ஓமனுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை; எதற்காக.?
Embed widget