மேலும் அறிய

பாமக சட்டப்பேரவை குழு தலைவர்பதவி; சபாநாயகர் மீது அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டு

சட்டப்பேரவையில் திமுகவுக்கு தாளம் போடுவவர்களுக்கு மட்டுமே அங்கீகாரம் வழங்கும் பேரவைத் தலைவரின் ஜனநாயகப் படுகொலையை மக்கள் மன்னிக்க மாட்டார்கள்.

பா.ம.க. சட்டமன்றக் கட்சித் தலைவர் பதவியை திமுகவுக்கு தாளம் போடுபவர்களுக்கு ஆதரவாக சபாநாயகர் ஜனநாயக படுகொலை செய்வதா? என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டு வைத்துள்ளார்.
 
இதுகுறித்து அவர் வெளிட்டுள்ள அறிக்கையில்.,
 
பாட்டாளி மக்கள் கட்சியின் சட்டப்பேரவைக் குழுவுக்கு புதிய தலைவர், துணைத் தலைவர் உள்ளிட்ட நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டது குறித்து சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு அவர்களுக்கு முறைப்படி தகவல் தெரிவித்து 22 நாள்கள் ஆகும் நிலையில், அதை அங்கீகரிக்க சட்டப்பேரவைத் தலைவர் மறுத்து வருவது கண்டிக்கத்தக்கது. சட்டப்பேரவையில் திமுகவுக்கு தாளம் போடுவவர்களுக்கு மட்டுமே அங்கீகாரம் வழங்கும் பேரவைத் தலைவரின் ஜனநாயகப் படுகொலையை மக்கள் மன்னிக்க மாட்டார்கள்.

பாட்டாளி மக்கள் கட்சியின் சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டம் கடந்த செப்டம்பர் 24&ஆம் தேதி சென்னையில் பாட்டாளி மக்கள் கட்சியின் அலுவலகத்தில் எனது முன்னிலையில் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் சட்டப்பேரவைக் குழுத் தலைவர் பதவியிலிருந்து ஜி.கே.மணி விடுவிக்கப்பட்டு புதிய தலைவராக தருமபுரி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் எஸ்.பி. வெங்கடேஸ்வரன் அவர்களும், துணைத்தலைவர் பதவிக்கு மேட்டூர் சட்டப்பேரவை உறுப்பினர்  சதாசிவம் அவர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். புதிய கொறடாவாக மயிலம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் திரு. சி.சிவக்குமார் அவர்கள் ஏற்கனவே தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். புதிய நியமனங்களுக்கு அன்றே எனது   தலைமையில் நடைபெற்ற பாட்டாளி மக்கள் கட்சியின் அரசியல் தலைமைக் குழு கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து தமிழ்நாடு சட்டப்பேரவையின் ஆவணங்களில் இந்த மாற்றங்களை பதிவு செய்து, உரிய ஆணைகளை விரைந்து பிறப்பிக்க வேண்டும் என்று கடந்த செப்டம்பர் 24&ஆம் தேதி சட்டப்பேரவைத் தலைவருக்கு நான் முறைப்படி கடிதம் எழுதியிருந்தேன்.

எனது கடிதத்தை கடந்த மாதம் 25&ஆம் தேதி பாட்டாளி மக்கள் கட்சியின் சட்டப்பேரவைக் குழு புதிய நிர்வாகிகளும், கட்சியின் செய்தித் தொடர்பாளர் வழக்கறிஞர் பாலு அவர்களும் பேரவைத் தலைவரை சந்தித்து அளிக்க நேரம் கேட்டனர். அப்போது பேரவைத் தலைவர் சென்னையில் இல்லாத நிலையில், அவர் கேட்டுக் கொண்டவாறு பேரவைச் செயலாளரிடம் கடிதம் ஒப்படைக்கப்பட்டது. பேரவைத் தலைவரிடமும் இந்த தகவல்கள் தெரிவிக்கப்பட்டன. அவற்றைக் கேட்டுக் கொண்ட பேரவைத் தலைவர் விதிமுறைகளின் படி விரைந்து முடிவெடுத்து அறிவிப்பதாக பா.ம.க. சட்டப்பேரவை உறுப்பினர்களிடம் தெரிவித்திருந்தார்.

அதற்கு முன்பாகவே கட்சித் தலைவர் மீது அவதூறான குற்றச்சாட்டுகளைக் கூறியதற்காக கடந்த ஜூலை 3&ஆம் நாள்  சேலம் மேற்கு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் திரு. இரா. அருள் அவர்கள் பாட்டாளி மக்கள் கட்சியின் அடிப்படை உறுப்பினர், சட்டமன்ற கொறடா உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்பட்டார். அவருக்கு பதில் புதிய கொறடாவாக மயிலம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திரு. சி.சிவக்குமார் அவர்கள் தேர்வு செய்யப்பட்ட தகவலையும் அன்றைய தினமே பேரவைத் தலைவரிடம்  தெரிவித்திருந்தோம். அதன் மீதும் விதிகளின்படி நடவடிக்கை எடுப்பதாக பேரவைத் தலைவர் வாக்குறுதி அளித்திருந்தார்.

ஆனால், அதன்பின் இன்றுடன் 22 நாள்களாகிவிட்ட நிலையில் பா.ம.க. சட்டப்பேரவைக் குழுத் தலைவரை மாற்றி விட்டு, அப்பதவிக்கு புதிதாக தேந்தெடுக்கப்பட்டவரை பேரவைத் தலைவர் அங்கீகரிக்கவில்லை. பேரவைக் கூட்டம் தொடங்கிய நாளில் பா.ம.க. சட்டப்பேரவைக் கட்சி நிர்வாகிகளும், வழக்கறிஞர் பாலுவும் மீண்டும் பேரவைத் தலைவரை சந்தித்து இதுகுறித்து வலியுறுத்தினார்கள். அப்போது எனது கடிதம் ஆய்வில் இருப்பதாகக் கூறிய பேரவைத் தலைவர், அவை முன்னவரான நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் அவர்களை சந்தித்து பேசும்படி கூறினார். அதன்படியே பா.ம.க. குழுவினர் முன்னவர் துரைமுருகனை சந்தித்து பேசினார்கள். அவரும் பேரவைத் தலைவரிடம் பேசி முடிவெடுப்பதாக தெரிவித்தார். ஆனால், அதன்பின் இரு நாள்களாகியும் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. பேரவையில் நடைபெறும் விவாதங்களில் பா.ம.க. சட்டப்பேரவைக் கட்சித் தலைவர் என்று கூறிக் கொண்டு ஜி.கே.மணிக்கு மட்டுமே வாய்ப்பளிக்கப்பட்டு வருகிறது. இந்த விஷயத்தில் பேரவைத் தலைவரின் செயல்பாடுகள் நியாயமற்றவை.

இந்த சிக்கல் குறித்து பேரவைத் தலைவரிடம் கேட்கும் போதெல்லாம், இது குறித்து ஆய்வு செய்து வருகிறேன் என்ற பழைய பல்லவியையே அவர் மீண்டும், மீண்டும் பாடி வருகிறார். இதில் ஆய்வு செய்ய என்ன இருக்கிறது? என்பது தான் தெரியவில்லை. பாட்டாளி மக்கள் கட்சிக்கு மொத்தம்  5 சட்டப்பேரவை உறுப்பினர்கள். அவர்களில் ஒருவர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டு விட்டார். மீதமுள்ள நால்வரின் மூவர் கூடி புதிய நிர்வாகிகளைத் தேர்வு செய்துள்ளனர். அவர்கள் மூவரும் நேரடியாகவே பேரவைத் தலைவரை சந்தித்து மனு அளித்திருக்கிறார்கள். எனது தலைமையில் செயல்படும் கட்சி தான் பா.ம.க. என்று தேர்தல் ஆணையமும் அறிவித்திருக்கிறது. இவ்வளவுக்குப் பிறகும் தெளிவான முடிவை எடுக்காமல் ஆய்வு செய்து வருகிறேன் என்று பேரவைத் தலைவர் அப்பாவு அவர்கள் கூறிவருவதில் பெரும் உள்நோக்கம் இருக்கிறது.

ஆட்சிக்கு வந்து நான்கரை ஆண்டுகள் ஆகியும் மக்களுக்கு ஆக்கப்பூர்வமாக எதையும் செய்யாமல், விளம்பரங்கள் மற்றும் நாடகங்கள் மூலமாகவே காலம் தள்ளிவரும் திமுக அரசு, அதற்காகவே பேரவைக்கு உள்ளேயும், வெளியேயும் தாளம் போட சிலரை வைத்திருக்கிறது. அவ்வாறு  தாளம் போடுவர்கள் இருந்தால் தான் தங்களுக்கு பிழைப்பு நடக்கும் என்பதற்காகவே ஜனநாயக முறையில் பாட்டாளி மக்கள் கட்சின் சட்டமன்றக் குழு தலைவர் உள்ளிட்ட பதவிகளுக்கு தேர்ந்தெடுக்கப் பட்டவர்களை அங்கீகரிக்காமல் ஆளுங்கட்சிக்கு வேண்டியவர்களை பதவியில் நீடிக்க அனுமதிப்பது நியாயமல்ல.

வலிமையாக செயல்படும் கட்சிகளையெல்லாம் உடைத்து, அதில் ஒரு பிரிவை தங்களுக்கு ஆதரவாக செயல்பட வைப்பது திமுகவின் கலை ஆகும். அதே ஆயுதத்தை பாட்டாளி மக்கள் கட்சிக்கு எதிராகவும் திமுக பயன்படுத்தி வருகிறது என்று ஏற்கனவே நான் குற்றஞ்சாட்டியிருந்தேன். அதற்கு கருவியாக பயன்படுத்தப்பட்டவர்களை பாதுகாக்கத் துடிப்பதன் மூலம்  எனது குற்றச்சாட்டு இப்போது உண்மையாகியுள்ளது. திமுக ஏவிய ஆயுதம் முனை மழுங்கி மொக்கையான பிறகும் அக்கட்சித் தலைமை திருந்த மறுக்கிறது.

பேரவையில் நிறைவேற்றப்படும் சட்டங்களுக்கு ஆளுனர் ஒப்புதல் அளிக்க காலக்கெடு நிர்ணயிக்க வேண்டும் என்று முழங்கிய திமுகவும், அதற்கு தோள் கொடுத்து வரும் பேரவைத் தலைவரும் பேரவைக் குழு நிர்வாகிகள் நியமனத்தில் மட்டும் காலவரையே இல்லாமல் ஆய்வு செய்வோம் என்பது என்ன நீதி? தங்களுக்கு ஒரு நீதி.... எதிர்க்கட்சிகளுக்கு ஒரு நீதி என்பது தான் திராவிட மாடல் அரசின் கொள்கையா?

பேரவைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்படுபவர் அந்த நொடியே அரசியல் அடையாளங்களை இழந்து விடுகிறார். நீதி பிறழாது நடுநிலையுடன் செயல்படுவது தான் அவரது பணி ஆகும். திமுகவைச் செர்ந்த பி.டி. ஆர் பழனிவேல் இராஜன் போன்ற  பெருந்தகையாளர்கள் அப்படித் தான் செயல்பட்டிருக்கிறார்கள். அந்த இருக்கையில் அமர்பவர்கள் அதேபோல் செயல்படுவதன் மூலம் தான் அந்த இருக்கைக்கு பெருமை சேர்க்க முடியும். எனவே, ஆளுங்கட்சியின் விருப்பப்படி, ஜனநாயகப் படுகொலைகளை நிகழ்த்துவதை விடுத்து, பாட்டாளி மக்கள் கட்சியின் சட்டப்பேரவைக்குழு தலைவர், துணைத் தலைவர், கொறடா ஆகிய பதவிகளுக்கு தேர்வு செய்யப்பட்டோரை பேரவைத் தலைவர் அப்பாவு அவர்கள் அங்கீகரிக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன். ஜனநாயகப் படுகொலை தொடர்ந்தால், அதற்கு எதிராக போராட்டம் நடத்துவதற்கும் பா.ம.க. தயங்காது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Vaiko Slams TVK Vijay:
Vaiko Slams TVK Vijay: "குற்ற உணர்ச்சி இல்லை.. ஆத்திச்சூடி அறியாதவர் கனவுலகில் ஆட்சி செய்கிறாரா?" விஜய்-யை கடுமையாக சாடிய வைகோ
TN School Holiday: கொட்டித்தீர்த்த மழை! பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்த மாவட்ட ஆட்சியர்
TN School Holiday: கொட்டித்தீர்த்த மழை! பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்த மாவட்ட ஆட்சியர்
Bihar Elections 2025: 18 மாவட்டங்கள், 121 தொகுதிகள் - 1314 வேட்பாளர்கள், 3.75 கோடி வாக்காளர்கள் -  பீகார் தேர்தல்
Bihar Elections 2025: 18 மாவட்டங்கள், 121 தொகுதிகள் - 1314 வேட்பாளர்கள், 3.75 கோடி வாக்காளர்கள் - பீகார் தேர்தல்
IND Vs AUS T20: தொடரை கைப்பற்றுமா இந்தியா? ஸ்கை, கில்லுக்கு ஃபார்ம் வருமா? இன்று 4வது டி20 போட்டி
IND Vs AUS T20: தொடரை கைப்பற்றுமா இந்தியா? ஸ்கை, கில்லுக்கு ஃபார்ம் வருமா? இன்று 4வது டி20 போட்டி
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

திரை தீ பிடிக்கும்... ஒன்றுசேரும் ரஜினி - கமல்! ரஜினி கடைசி படமா?
Christiano Ronaldo Marriage | 10 வருட காதல்..5 குழந்தைகள்!காதலியை கரம்பிடிக்கும் ரொனால்டோ
அருள் காரை நொறுக்கியது ஏன்? தாக்குதலின் ஆரம்ப புள்ளி! பகீர் CCTV காட்சி
Madhampatti Rangaraj  | ’’அது கட்டாய கல்யாணம்!பணத்துக்காக இப்படியா?’’ மாதம்பட்டி ரங்கராஜ் பகீர் DNA TEST-க்கு வா’’
திமுகவில் வைத்திலிங்கம்?விழும் முக்கிய விக்கெட்டுகள் அதிர்ச்சியில் OPS | Vaithilingam Joins DMK

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Vaiko Slams TVK Vijay:
Vaiko Slams TVK Vijay: "குற்ற உணர்ச்சி இல்லை.. ஆத்திச்சூடி அறியாதவர் கனவுலகில் ஆட்சி செய்கிறாரா?" விஜய்-யை கடுமையாக சாடிய வைகோ
TN School Holiday: கொட்டித்தீர்த்த மழை! பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்த மாவட்ட ஆட்சியர்
TN School Holiday: கொட்டித்தீர்த்த மழை! பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்த மாவட்ட ஆட்சியர்
Bihar Elections 2025: 18 மாவட்டங்கள், 121 தொகுதிகள் - 1314 வேட்பாளர்கள், 3.75 கோடி வாக்காளர்கள் -  பீகார் தேர்தல்
Bihar Elections 2025: 18 மாவட்டங்கள், 121 தொகுதிகள் - 1314 வேட்பாளர்கள், 3.75 கோடி வாக்காளர்கள் - பீகார் தேர்தல்
IND Vs AUS T20: தொடரை கைப்பற்றுமா இந்தியா? ஸ்கை, கில்லுக்கு ஃபார்ம் வருமா? இன்று 4வது டி20 போட்டி
IND Vs AUS T20: தொடரை கைப்பற்றுமா இந்தியா? ஸ்கை, கில்லுக்கு ஃபார்ம் வருமா? இன்று 4வது டி20 போட்டி
Maruti Suzuki: ஒன்லி ஒன், சூப்பர் ஒன்.. 3 கோடி கார்களை விற்றுத் தீர்த்த மாருதி - கொட்டிக் கொடுக்கும் ஹேட்ச்பேக், செடான்
Maruti Suzuki: ஒன்லி ஒன், சூப்பர் ஒன்.. 3 கோடி கார்களை விற்றுத் தீர்த்த மாருதி - கொட்டிக் கொடுக்கும் ஹேட்ச்பேக், செடான்
Trump Tariff: ட்ரம்ப் போட்ட வரிகள் - ”சந்தேகமும், கேள்விகளும் இருக்கு” அமெரிக்க உச்சநீதிமன்றம் அதிரடி
Trump Tariff: ட்ரம்ப் போட்ட வரிகள் - ”சந்தேகமும், கேள்விகளும் இருக்கு” அமெரிக்க உச்சநீதிமன்றம் அதிரடி
MK Stalin : திருடப்படும் மக்கள் தீர்ப்பு!  அம்பலப்பட்ட சதி.. வாய்திறக்காத தேர்தல் ஆணையம்! முதல்வர் ஸ்டாலின் கண்டனம்
MK Stalin : திருடப்படும் மக்கள் தீர்ப்பு! அம்பலப்பட்ட சதி.. வாய்திறக்காத தேர்தல் ஆணையம்! முதல்வர் ஸ்டாலின் கண்டனம்
Special Feature:
Special Feature: "திறமைக்கும் பாரம்பரியத்திற்கும் தலைவணங்கும் ஐஸ்வர்யா ரே சர்கார்"
Embed widget