PM Modi YouTube Channel: முதலிடத்தில் மோடி; நான்காம் இடத்தில் ஸ்டாலின்.... இணையத்தை கலக்கும் அரசியல் தலைவர்கள்!
உலக அரசியல் தலைவர்களில் இந்த எண்ணிக்கையை முதலில் எட்டியவர் பிரதமர் மோடி
சமூக வலைதளத்துக்குள் உலகம் ஆக்டிவ்வாக இருக்கிறது. அப்படி, பிரதமர் நரேந்திர மோடியும் சமூக வலைதளங்களில் ஆக்டிவ்வாக. ட்விட்டர், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் கோடி கணக்கில் ஃபாலோயர்களை அவர் கொண்டிருக்கிறார். அந்த வகையில், பிரதமர் மோடியின் யூடியூப் சேனலை பின்பற்றுபவர்களின் எண்ணிக்கையும் தற்போது 1 கோடியை தாண்டியுள்ளது.
உலக அரசியல் தலைவர்களில் இந்த எண்ணிக்கையை முதலில் எட்டியவர் பிரதமர் மோடி. அவரது யூடியூப் சேனல் கடந்த 2007ஆம் ஆண்டு அவர் குஜராத் முதலமைச்சராக இருந்தபோது தொடங்கப்பட்டது. இதில் பிரதமர் மோடி பேசியது, பங்கேற்ற நிகழ்ச்சிகள், உருக்கமான, நெகிழ்ச்சியான நிகழ்வுகள் அனைத்தும் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.
இந்த வீடியோக்கள் இதுவரை 164.31 கோடி பார்வையாளர்களை கொண்டிருக்கிறது. அதில் அதிகபட்சமாக கடந்த 2019ஆம் ஆண்டு பிரதமர் மோடிக்கு அளிக்கப்பட்ட வரவேற்பின் 14 நொடிகளுக்கு ஓடக்கூடிய காட்சி அதிகபட்சமாக 7 கோடி பார்வைகளையும், இஸ்ரோ தலைவர் சிவனை கட்டியணைத்து மோடி ஆறுதல் கூறிய 26 நொடிகளுக்குள் அடங்கிய காட்சி சுமார் 5.42 கோடி பார்வைகளையும், பாலிவுட் நடிகர் அக்ஷய் குமாருக்கு அளித்த 1 மணி நேரத்திற்கும் மேலான பேட்டி 5.15 கோடி பார்வைகளையும் பெற்றுள்ளது.
சமூக வலைதளங்களிலும் ஃபாலோயர்ஸ் கணக்கில் முதலிடத்தில் இருக்கிறார் பிரதமர் மோடி. அவர், ட்விட்டரில் சுமார் 7.5 கோடி ஃபாலோயர்களையும், ஃபேஸ்புக்கில் 4 கோடி லைக்குகளையும் பெற்றிருக்கிறார்.
பிரதமர் மோடிக்கு அடுத்தபடியாக 36 லட்சம் சப்ஸ்கிரைபர்ஸ்களுடன் இரண்டாவது இடத்தில் பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சனோரா உள்ளார். 30.7 லட்சம் பேர் சப்ஸ்கிரைபர்ஸ்களுடன் மெக்சிகோ அதிபர் ஆண்ட்ரெஸ் மேனுவல் லோபஸ் மூன்றாவது இடத்தில் உள்ளார். அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு 7.03 லட்சம் சப்ஸ்க்ரைபர்கள் உள்ளனர்.
இந்திய அளவில் ஒப்பிடும் போது அரசியல் தலைவர்களில் மோடிக்கு அடுத்த இடத்தில் ராகுல் காந்தி உள்ளார். ராகுல் காந்தியின் யூடியூப் பக்கத்தில் 5.25 லட்சம் சப்ஸ்கிரைபர்ஸ் உள்ளனர்.
அவருக்கு அடுத்ததாக சசிதரூருக்கு 4.39 லட்சம் சப்ஸ்க்ரைபர்களும், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு 2.12 லட்சம் சப்ஸ்க்ரைபர்களும், டெல்லி துணை முதலமைச்சர் மணிஷ் சிசோடியாவுக்கு 1.37 லட்சம் சப்ஸ்க்ரைபர்களும் உள்ளனர். கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி உள்ளிட்டவர்களுக்கு யூடியூப் சேனல்களே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்