மேலும் அறிய

PM Modi Chennai Visit: தமிழ்நாட்டிற்கு வரும் பிரதமர் மோடி..! எத்தனை மணிக்கு எங்கெல்லாம் செல்கிறார்..? முழு அட்டவணை

PM Modi Chennai Visit Schedule: ஒருநாள் பயணமாக தமிழ்நாடு வரும் பிரதமர் மோடியின் முழு பயண விவரங்களை கீழே விரிவாக காணலாம்.

PM Modi Chennai Visit Schedule:  ஒருநாள் பயணமாக நாளை தமிழகம் வரும் பிரதமர் மோடியின், முழு பயண விவரங்களை இந்த தொகுப்பில் அறியலாம்...

பிரதமர் மோடி தமிழகம் வருகை:

ஒருநாள் பயணமாக நாளை தமிழகம் வரும் பிரதமர் மோடி, சென்னை விமான நிலையத்தில் ரூ.1,260 கோடியில் அமைக்கப்பட்டுள்ள புதிய ஒருங்கிணைந்த முனையக் கட்டடத்தை நாட்டிற்கு அர்பணிக்கிறார். தொடர்ந்து  சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நடைபெறும் விழாவில், சென்னை-கோவை இடையிலான ‘வந்தே பாரத்’ அதிவிரைவு ரயில் சேவையை கொடியசைத்து தொடங்கிவைக்கிறார்.

அதோடு,  தாம்பரம்-செங்கோட்டை இடையிலான விரைவு ரயில் சேவையைத் தொடங்கி வைப்பதுடன், ரூ.294 கோடி மதிப்பில் திருத்துறைப்பூண்டி- அகஸ்தியம்பள்ளி இடையே 37 கி.மீ. தொலைவுக்கு அமைக்கப்பட்டுள்ள அகல ரயில் பாதையை நாட்டுக்கு அர்ப்பணித்து வைக்கிறார். இறுதியாக, மயிலாப்பூர், ஆர்.கே.மடம் சாலையில் உள்ள ராமகிருஷ்ண மடத்தின் 125-வது ஆண்டு விழாவில் பங்கேற்கும் பிரதமர், மாலை 6.30 மணியளவில் பல்லாவரம் மைதானத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் ரூ.3,700 கோடி மதிப்பிலான சாலைத் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.

5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு:

பிரதமரின் வருகையை முன்னிட்டு, சென்னையில் ரயில், விமானம், பேருந்து நிலையங்களில் 5 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பாதுகாப்புப் பணியில் 22 ஆயிரம் காவலர்கள் ஈடுபட்டுள்ளனர். சென்னை மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளில் ட்ரோன்கள் மற்றும் ஆளில்லா வான்வழி வாகனங்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

மோடியின் பயண விவரம்:

பிற்பகல் 01.35: ஐதராபாத் விமான நிலையத்தில் இருந்து இந்திய விமானப்படை விமானம் மூலம் மோடி சென்னைக்கு புறப்படுகிறார்

பிற்பகல் 2:45 : சென்னை விமான நிலையம் வந்தடைகிறார்

பிற்பகல் 2:50 : சென்னை விமான நிலையத்தில் இருந்து சாலை வழியாக புறப்படுகிறார்

பிற்பகல் 2:55 : விமான நிலையத்தின் புதிய முனையத்திற்கு வருகை தருகிறார்

மாலை 3:00 - 3:15 : சென்னை விமான நிலையத்தின் புதிய முனையத்தை திறந்து வைக்கிறார்

மாலை 3:20 : விமான நிலையத்தின் முனையத்தில் இருந்து புறப்படுகிறார்

மாலை 3:25 : சென்னை விமான நிலையம் வந்தடைகிறார்

மாலை 3:30 : எம்ஐ-17 ஹெலிகாப்டரில் பயணம் செய்கிறார் 

 மாலை 3:50 : ஐஎன்எஸ் அடையாறு ஹெலிபேடுக்கு வந்தடைவார்

மாலை 3:55 : அடையாறில் இருந்து சாலை மார்க்கமாக புறப்படுகிறார்

 மாலை 4:00 : சென்ட்ரல் ரயில் நிலையம் வந்தடைவார்

மாலை 4.00 - 4:20 : சென்னை - கோவை இடையிலான வந்தே பாரத் ரயில் சேவையை தொடங்கி வைப்பார் 

மாலை 4:25 :சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து புறப்படுகிறார்

 மாலை 4:40 : மயிலாப்பூரில் உள்ள ராமகிருஷ்ண மடத்திற்கு வருகை தருகிறார்

மாலை 4:45 - 5:45 : ராமகிருஷ்ண மடத்தின் 125வது ஆண்டு நிறைவு விழாவில் கலந்து கொள்வார் 

மாலை 5:45 :ராமகிருஷ்ண மடத்தில் இருந்து புறப்படுகிறார்

மாலை 5:55 : அடையாறு ஹெலிபேட் வந்தடைவார்

மாலை 6:00 : அடையாறு ஹெலிபேடில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் புறப்படுவார் 

மாலை 6:20 : சென்னை விமான நிலையம் வருகை தருவார்

மாலை 6:25 : சென்னை விமான நிலையத்தில் இருந்து சாலை மார்க்கமாக கிளம்புகிறார்

மாலை 6:30 : சென்னை ஆல்ஸ்டோம் கிரிக்கெட் மைதானத்திற்கு வருகை 

மாலை 6:30- 7:30 : பல்வேறு அரசு நலத்திட்டங்களை துவக்கி வைத்தல்/ அடிகட்டு நாட்டுதல்

மாலை 7:35 : நிகழ்ச்சி நடக்கும் இடத்தில் இருந்து புறப்படுவார் 

மாலை 7:40 : சென்னை விமான நிலையத்திற்கு வருகை தருவார்

மாலை 7:45 : சென்னை விமான நிலையத்தில் இருந்து இந்திய விமானப்படை விமானம் மூலம் மைசூருக்கு புறப்படுவார்

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

பூந்தமல்லி- வடபழனி மெட்ரோ ரயில்.! பொதுமக்களுக்கு குஷி- அதிகாரிகளுக்கு முக்கிய உத்தரவிட்ட சிஎம் விஜய்
பூந்தமல்லி- வடபழனி மெட்ரோ ரயில்.! பொதுமக்களுக்கு குஷி- அதிகாரிகளுக்கு முக்கிய உத்தரவிட்ட சிஎம் விஜய்
" கணவரின் காலைப் பிடித்த மனைவி " தலையணையால் அமுக்கிய கள்ளக் காதலன் —தப்பிய கணவனின் அலறல் சத்தம்
TNEB : மின் கட்டணம் அதிகமா வந்திருக்கா.! பணத்தை திரும்ப கொடுக்க போறாங்க- மின்வாரியம் முக்கிய உத்தரவு
மின் கட்டணம் அதிகமா வந்திருக்கா.! பணத்தை திரும்ப கொடுக்க போறாங்க- மின்வாரியம் முக்கிய உத்தரவு
CM Vijay: ஆய்வு செய்கிறாரா?.. ஆசையை தீர்க்கிறாரா? .. விஜயை சுற்றும் சர்ச்சைகள்!
CM Vijay: ஆய்வு செய்கிறாரா?.. ஆசையை தீர்க்கிறாரா? .. விஜயை சுற்றும் சர்ச்சைகள்!

வீடியோ

Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?
RSS to கல்வி அமைச்சர் மோடியின் நம்பிக்கை!யார் இந்த பிரகலாத் ஜோஷி?
வைத்திலிங்கம் ரூ.28 கோடி ஊழல்?
SHIFT ஆகும் CM விஜய் அலுவலகம்.. BEACH VIEW உடன் புதிய OFFICE

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Ramayana Trailer: ரூ.4.000 கோடி ப்ராஜெக்ட் - ராமாயணா திரைப்பட ட்ரெய்லர் எப்படி இருக்கு? சீரியல் & கார்டூனா?
ரூ.4.000 கோடி ப்ராஜெக்ட் - ராமாயணா திரைப்பட ட்ரெய்லர் எப்படி இருக்கு? சீரியல் & கார்டூனா?
Super Speciality: DMK ஆட்சி கடந்து TVK வந்தாலும் நிரம்பாத சூப்பர் ஸ்பெஷாலிட்டி இடங்கள் - காரணங்களும், சிக்கல்களும்
DMK ஆட்சி கடந்து TVK வந்தாலும் நிரம்பாத சூப்பர் ஸ்பெஷாலிட்டி இடங்கள் - காரணங்களும், சிக்கல்களும்
Chennai Corporation: CMDA வரிசையில் சென்னை மாநகராட்சி..! உச்சத்தில் கடன்சுமை, வருவாய் பற்றாக்குறை - அரசு உதவுமா?
CMDA வரிசையில் சென்னை மாநகராட்சி..! உச்சத்தில் கடன்சுமை, வருவாய் பற்றாக்குறை - அரசு உதவுமா?
CM Vijay: ஆய்வு செய்கிறாரா?.. ஆசையை தீர்க்கிறாரா? .. விஜயை சுற்றும் சர்ச்சைகள்!
CM Vijay: ஆய்வு செய்கிறாரா?.. ஆசையை தீர்க்கிறாரா? .. விஜயை சுற்றும் சர்ச்சைகள்!
பாமகவே பாஜக, அதிமுககிட்ட தொங்குது.. அன்புமணியை வெளுத்து வாங்கிய மாணிக்கம் தாகூர்!
பாமகவே பாஜக, அதிமுககிட்ட தொங்குது.. அன்புமணியை வெளுத்து வாங்கிய மாணிக்கம் தாகூர்!
TNEB : மின் கட்டணம் அதிகமா வந்திருக்கா.! பணத்தை திரும்ப கொடுக்க போறாங்க- மின்வாரியம் முக்கிய உத்தரவு
மின் கட்டணம் அதிகமா வந்திருக்கா.! பணத்தை திரும்ப கொடுக்க போறாங்க- மின்வாரியம் முக்கிய உத்தரவு
Gold rate today : உயர்ந்தது தங்கம் விலை.! ஒரு சவரனுக்கு எவ்வளவு.? இன்றைய தங்கம், வெள்ளி விலை என்ன.?
உயர்ந்தது தங்கம் விலை.! ஒரு சவரனுக்கு எவ்வளவு.? இன்றைய தங்கம், வெள்ளி விலை என்ன.?
இனிமேல் பாட்டிலுக்கு 10 ரூபாய் வாங்க மாட்டோம்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் உறுதி!
இனிமேல் பாட்டிலுக்கு 10 ரூபாய் வாங்க மாட்டோம்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் உறுதி!
Embed widget