கருர் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு பிரத்யேக இருக்கைகள்
மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கோரிக்கை மனு அளிக்க வரும் மாற்றுத்திறனாளிகளை கூட்ட அரங்கு வரை அழைத்து வருவதை தவிர்த்து, அவர்களுக்கென்று பிரத்யேக இருக்கைள் அமைத்து அமரவைக்கப்பட்டனர்.
மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் தமிழ்நாடு கதர் கிராமத் தொழில் வாரியம் சார்பில் ரூ. 3.26,400 இலட்சம் மதிப்பீட்டில் 16 பயனாளிகளுக்கு மண்பாண்டம் தயாரிக்க நவீன தொழில்நுட்பத்துடன் மாறுபடும் வேகத்துடன் கூடிய சீலா மின்விசை சக்கரம் உபகரணங்கள் மாவட்ட ஆட்சித்தலைவர் த.பிரபுசங்கர் வழங்கினார்கள். கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் த.பிரபுசங்கர் வழங்கினார். இன்றை கூட்டத்தில் ஓய்வூதியம், வங்கிகடன், இலவச வீட்டுமனைப்பட்டா, வேலைவாய்ப்பு, உதவி உபகரணங்கள், குடும்ப அட்டை கோருதல் மற்றும் இதர மனுக்கள் போன்றவைகள் கேட்டு மொத்தம் 316 மனுக்கள் பெறப்பட்டது. இதில் மாற்றுத்திறனாளிகளிடம் 41 மனுக்கள் பெறப்பட்டது.
மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கோரிக்கை மனு அளிக்க வரும் மாற்றுத்திறனாளிகளை கூட்ட அரங்கு வரை அழைத்து வருவதை தவிர்த்து, அவர்களுக்கென்று பிரத்யேக இருக்கைள் அமைத்து அமரவைக்கப்பட்டனர். மாற்றுத்திறனாளிகள் இருக்கும் இடத்திற்கு சென்று மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டு பெறப்பட்ட மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டிய மனுக்களுக்கு இன்றும், பிற மனுக்கள் மீதும் ஒரு வார காலத்தில் துறைரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு தகுதியான பயனாளிகளுக்கு உரிய நிவாரணம் உடனுக்குடன் வழங்கப்பட்டு வருகிறது என மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார்.
அந்தவகையில் மாற்றுத்திறனாளி நலத்துறை சார்பில் தலா ரூ.1,05,000/- மதிப்பீட்டில் 2 மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு ரூ.2,10,000/- மதிப்பீட்டில் பேட்டரியால் இயங்கும் சக்கர நாற்காலியும், 1 மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு ரூ.7,900/- மதிப்பீட்டில் சக்கர நாற்காலியும், தலா ரூ.6,116/- மதிப்பீட்டில் 2 மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு காதொலி கருவிகளையும், 1 மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு ரூ.340/- மதிப்பீட்டில் கருப்பு கண்ணாடி மற்றும் மடக்கு ஊன்றுகோலும் என மொத்தம் 6 மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு ரூ.2,24,356/- மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகளையும், தொடர்ந்து தமிழ்நாடு கதர் கிராமத் தொழில் வாரியம் சார்பில் மண்பாண்ட தொழிலாளர்களுக்கு தலா ரூ..20,400/- 16 பயனாளிகளுக்கு ரூ..3,26,400/- இலட்சம் மதிப்பீடில் மின்விசை சக்கரம் உபகரணங்களையும் என மொத்தம் 22 பயனாளிகளுக்கு ரூ.5,50,756/- இலட்சம் மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் த.பிரபுசங்கர் வழங்கினார்கள்.
இந்நிகழ்வின்போது, மாவட்ட வருவாய் அலுவலர் எம்.லியாகத், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் மந்திரச்சலம், தனித்துணை ஆட்சியர் சமூக பாதுகாப்பு திட்டம் சைபுதின், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் காமாட்சி உள்ளிட்ட அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
கரூர் மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக 34 ஆவது மெகா தடுப்பூசி முகாம்
தமிழகத்தில் தற்போது தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்தும் குறைந்து கொண்டு வரும் நிலையில் கரூர் மாவட்டத்தில் 34-வது மெகா தடுப்பூசி முகாம் 1611 இடங்களில் நடைபெற்றது. இந்த சிறப்பு முகாமில் முதல் தவணை இரண்டாவது தவணை பூஸ்டர் தடுப்பூசி உள்ளிட்ட பல்வேறு தடுப்பூசிகள் போடப்பட்டது. அதிலும் குறிப்பாக 34-வது மெகா தடுப்பூசி முகாமில் 36 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நபர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளன மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளன.
அதேபோல் தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் குறைவாக வருவதால் சற்று மாவட்ட மக்கள் நிம்மதியில் உள்ளனர் எனினும் மாவட்ட மக்கள் சமூக இடைவெளி முக கவசம் உள்ளிட்ட கொரோனா தொற்று விதிகளை பின்பற்ற வேண்டும் என மாவட்ட நிர்வாகம் நாள்தோறும் பொது மக்களுக்கு வேண்டுகோள் விடுத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது