மேலும் அறிய

கரூர்: மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 1 கோடியே, 5 லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள்

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கோரிக்கை மனு அளிக்க வரும் மாற்றுத்திறனாளிகளை கூட்ட அரங்கு வரை அழைத்து வருவதை தவிர்த்து, அவர்களுக்கென்று பிரத்யேக இருக்கைகள் அமைத்து அமர வைக்கப்பட்டனர்.

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் த.பிரபுசங்கர் ரூ.1 கோடியே, 5 இலட்சத்து, 67 ஆயிரம் மதிப்பீலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்கள். கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று (19.09.2022) நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 15 பயனாளிகளுக்கு, 1 கோடியே, 5 இலட்சத்து, 67 ஆயிரம் மதிப்பீலான அரசு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் த.பிரபுசங்கர் வழங்கினார். இன்றைய கூட்டத்தில் ஓய்வூதியம், வங்கிகடன், இலவச வீட்டுமனைப்பட்டா, வேலைவாய்ப்பு, உதவி உபகரணங்கள், குடும்ப அட்டை கோருதல் மற்றும் இதர மனுக்கள் போன்றவைகள் என மொத்தம் 369 மனுக்கள் பெறப்பட்டது. இதில் மாற்றுத்திறனாளிகளிடம் 64 மனுக்கள் பெறப்பட்டது. 

கரூர்: மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 1 கோடியே, 5 லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள்

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கோரிக்கை மனு அளிக்க வரும் மாற்றுத்திறனாளிகளை கூட்ட அரங்கு வரை அழைத்து வருவதை தவிர்த்து, அவர்களுக்கென்று பிரத்யேக இருக்கைகள் அமைத்து அமரவைக்கப்பட்டனர். மாற்றுத்திறனாளிகள் இருக்கும் இடத்திற்கு சென்று மாவட்ட ஆட்சித்தலைவர் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டு பெறப்பட்ட மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டிய மனுக்களுக்கு இன்றும், பிற மனுக்கள் மீதும் ஒரு வார காலத்தில் துறைரீதியான  நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு தகுதியான பயனாளிகளுக்கு உரிய நிவாரணம் உடனுக்குடன் வழங்கப்பட்டு வருகிறது எனவும் மாவட்ட ஆட்சித்தலைவர்  தெரிவித்துள்ளார்.

கரூர்: மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 1 கோடியே, 5 லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள்

அந்த வகையில் மாவட்ட முன்னோடி வங்கியின் சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு சிறு தொழில் தொடங்கிட 1 பயனாளிக்கு ரூ.30,000/- கடன் உதவியும், ஆடு மற்றும் மாடுகள் வாங்கிட 3 பயனாளிகளுக்கு தலா ரூ.75,000/- வீதம் ரூ.2,25,000/- கடன் உதவியும்,  பெட்டிக்கடை வைத்திட 1 பயனாளிக்கு ரூ.50,000/- கடன் உதவியும், “ஸ்டேண் அப்  இண்டியா” திட்டத்தின் கீழ்  மகளிர்களுக்கு மட்டும் பிரத்யேகமாக வழங்கப்படும் கடன் உதவித் திட்டத்தின் சார்பில் திருமதி. மகேஸ்வரி என்பவரின் வேலன் பாலிமர்ஸ் நிறுவனத்திற்கு ரூ.1 கோடி தொழில்கடனும், மாற்றுத்திறனாளி நலத்துறை சார்பில் ஒரு பயனாளிக்கு ரூ.1,950/- மதிப்பீட்டில் நடைபயிற்சி வாகனம், 4 பயனாளிகளுக்கு தலா ரூ.78,850/- வீதம் ரூ.3,15,400/- மதிப்பீட்டில் இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்களையும்,  3 பயனாளிகளுக்கு தலா ரூ.4,999/- வீதம் ரூ.14,997/- மதிப்பீட்டில் காதொலி கருவிகளையும், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையின் சார்பாக 1 பயனாளிக்கு ரூ.4,870/- மதிப்பீட்டில் இலவச சலவைப்பெட்டியையும் மாவட்ட ஆட்சித் தலைவர் வழங்கினார். 

கரூர்: மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 1 கோடியே, 5 லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள்

அதனைத் தொடர்ந்து, தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பாக தமிழ்நாடு நாள் விழாவினை முன்னிட்டு பள்ளி மாணவர்களுக்கு நடத்தப்பெற்ற பேச்சுப்போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு முதல் பரிசு ரூ.10,000/- இரண்டாம் பரிசு ரூ.7,000/-, மூன்றாம் பரிசு ரூ.5,000/-  மற்றும் கட்டுரை போட்டியில்  வெற்றி பெற்ற மாணவர்களுக்கு முதல் பரிசு  ரூ.10,000/- இரண்டாம் பரிசு ரூ.7,000/-, மூன்றாம் பரிசு ரூ.5,000/-முத்தமிழறிஞர் கலைஞர் பிறந்த நாளை முன்னிட்டு 28.07.2022 அன்று  பள்ளி மாணவர்களுக்கு நடத்தப்பட்ட  பேச்சுப்போட்டி மற்றும் கட்டுரை போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு முதல் பரிசு ரூ.5,000/- இரண்டாம் பரிசு  ரூ.3,000/-, மூன்றாம் பரிசு ரூ2,000/- மற்றும் அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்புப் பரிசாக 2 மாணவர்களுக்கு தலா ரூ.2,000/-  மாவட்ட ஆட்சித்தலைவர் த.பிரபுசங்கர் வழங்கினார்.

கரூர்: மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 1 கோடியே, 5 லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள்
 
இந்நிகழ்வின்போது, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் மந்திராசலம், மாவட்ட ஆட்சித்தலைவரின் நேர்முக உதவியாளர் (பொது) தண்டாயுதபாணி,  உதவி ஆணையர் (கலால்) பாலசுப்பிரமணியன், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் காமாட்சி உள்ளிட்ட அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IPL 2025 RCB vs GT: சீறிய சிராஜ்! காப்பாற்றிய லிவிங்ஸ்டன், ஜிதேஷ், டேவிட்! 170 ரன்களை அடிக்குமா குஜராத்?
IPL 2025 RCB vs GT: சீறிய சிராஜ்! காப்பாற்றிய லிவிங்ஸ்டன், ஜிதேஷ், டேவிட்! 170 ரன்களை அடிக்குமா குஜராத்?
நித்தியானந்தா உயிரோடு இருக்கிறாரா? நாளை உடையும் உண்மை! வெளியான முக்கிய அறிவிப்பு!
நித்தியானந்தா உயிரோடு இருக்கிறாரா? நாளை உடையும் உண்மை! வெளியான முக்கிய அறிவிப்பு!
வீட்டைவிட்டு வெளியே வராதீங்க! இரவு 8 மாவட்டங்களில் மழை இருக்கு - வானிலை மையம் அறிவிப்பு!
வீட்டைவிட்டு வெளியே வராதீங்க! இரவு 8 மாவட்டங்களில் மழை இருக்கு - வானிலை மையம் அறிவிப்பு!
Stalin Vs EPS: ஏங்க.. நாங்க பண்றது இருக்கட்டும், நீங்க என்ன பண்ணீங்க.? இபிஎஸ்-ஐ வெளுத்த ஸ்டாலின்...
ஏங்க.. நாங்க பண்றது இருக்கட்டும், நீங்க என்ன பண்ணீங்க.? இபிஎஸ்-ஐ வெளுத்த ஸ்டாலின்...
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

தங்கை ஆணவக்கொலை?அண்ணன் செய்த கொடூரம் நாடகம் ஆடிய குடும்பம்BJP Posters In Ramanathapuram: ”அதிமுக கூட்டணி வேண்டாம் அண்ணாமலையே போதும்” பாஜக போஸ்டரால் பரபரப்புAnnamalai BJP: தேசிய அரசியலில் அண்ணாமலை.. மாநில அரசியலுக்கு ஆப்பு? சீனியர்ஸ் பக்கா ஸ்கெட்ச்Irfan Controversy | சமாதான கொடி தூக்கிய இர்பான் வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்” ESCAPE ஆகுறது வேலையா”

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IPL 2025 RCB vs GT: சீறிய சிராஜ்! காப்பாற்றிய லிவிங்ஸ்டன், ஜிதேஷ், டேவிட்! 170 ரன்களை அடிக்குமா குஜராத்?
IPL 2025 RCB vs GT: சீறிய சிராஜ்! காப்பாற்றிய லிவிங்ஸ்டன், ஜிதேஷ், டேவிட்! 170 ரன்களை அடிக்குமா குஜராத்?
நித்தியானந்தா உயிரோடு இருக்கிறாரா? நாளை உடையும் உண்மை! வெளியான முக்கிய அறிவிப்பு!
நித்தியானந்தா உயிரோடு இருக்கிறாரா? நாளை உடையும் உண்மை! வெளியான முக்கிய அறிவிப்பு!
வீட்டைவிட்டு வெளியே வராதீங்க! இரவு 8 மாவட்டங்களில் மழை இருக்கு - வானிலை மையம் அறிவிப்பு!
வீட்டைவிட்டு வெளியே வராதீங்க! இரவு 8 மாவட்டங்களில் மழை இருக்கு - வானிலை மையம் அறிவிப்பு!
Stalin Vs EPS: ஏங்க.. நாங்க பண்றது இருக்கட்டும், நீங்க என்ன பண்ணீங்க.? இபிஎஸ்-ஐ வெளுத்த ஸ்டாலின்...
ஏங்க.. நாங்க பண்றது இருக்கட்டும், நீங்க என்ன பண்ணீங்க.? இபிஎஸ்-ஐ வெளுத்த ஸ்டாலின்...
BJP TN New Leader: பாஜக தமிழ்நாடு புதிய தலைவர் யார்.? ரேஸில் குதித்த கருப்பு முருகானந்தம்.. புதிய அப்டேட்...
பாஜக தமிழ்நாடு புதிய தலைவர் யார்.? ரேஸில் குதித்த கருப்பு முருகானந்தம்.. புதிய அப்டேட்...
கூப்பிட்றப்ப எல்லாம் அட்ஜஸ்ட் பண்ணனும்.. இன்ஸ்டா பிரபலத்துக்கு நிகழ்ந்த கொடுமையை பாருங்க
கூப்பிட்றப்ப எல்லாம் அட்ஜஸ்ட் பண்ணனும்.. இன்ஸ்டா பிரபலத்துக்கு நிகழ்ந்த கொடுமையை பாருங்க
TNPSC: மாஸ் காட்டும் டிஎன்பிஎஸ்சி; 3 மாதங்களில் 7557 பேர் செலக்ட்- ஜெட் வேகத்தில் செய்த சீர்திருத்தங்கள் தெரியுமா?
TNPSC: மாஸ் காட்டும் டிஎன்பிஎஸ்சி; 3 மாதங்களில் 7557 பேர் செலக்ட்- ஜெட் வேகத்தில் செய்த சீர்திருத்தங்கள் தெரியுமா?
Irfan Controversy: மனுஷனாவும் இல்ல..! இஸ்லாத்தையும் மதிக்கில - காசுக்காக அலையும் இர்ஃபான் - வேடிக்கை பார்க்கும் அரசு
Irfan Controversy: மனுஷனாவும் இல்ல..! இஸ்லாத்தையும் மதிக்கில - காசுக்காக அலையும் இர்ஃபான் - வேடிக்கை பார்க்கும் அரசு
Embed widget