மேலும் அறிய

பட்ஜெட் உரை மரபுகளை மாற்ற வேண்டும்: நிதி அமைச்சர் எழுதவில்லை... - PTR பழனிவேல் தியாகராஜன் !

பட்ஜெட் வாசிப்பு முறையை மாற்றுவது குறித்து தீவிரமாக யோசிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

நிதி அமைச்சர் இந்த பட்ஜெட்டை எழுதியிருக்க முடியாது; மரபுகளை மாற்ற வேண்டும்" - தனியார் தொலைக்காட்சிக்கு முன்னாள் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேட்டி.

முன்னாள் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தனது பேட்டியில்
 
பட்ஜெட் உரைகளை மணி கணக்கில் வாசிக்கும் தற்போதைய நடைமுறையை மாற்றி, இயற்கையான முறையில் உரையாற்றும் புதிய வழிமுறையைக் கொண்டு வர வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வலியுறுத்தியுள்ளார். தனியார் தொலைக்காட்சிக்கு தனுது பேட்டியளித்துள்ளார்.  தற்போதைய பட்ஜெட் தாக்கல் முறை குறித்து அவர் பல்வேறு விமர்சனங்களை முன்வைத்துள்ளார். தனது கணிப்பின்படி தற்போதைய பட்ஜெட்டை தற்போதைய நிதி அமைச்சர் எழுதியிருக்க முடியாது  யாரோ அதிகாரிகள் எழுதிக் கொடுத்த ஒரு நீண்ட ஆவணத்தைப் படிக்கும்போதுதான், வாசிப்பதில் சிரமங்களும் தடுமாற்றங்களும் இயற்கையாகவே ஏற்படுகின்றன என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
 
ஒரு நீண்ட ஆவணத்தைப் படிப்பது மிகவும் கடினமான காரியமாக இருந்தது
 
தமது பதவிக்கால பட்ஜெட் தயாரிப்பு அனுபவத்தைப் பகிர்ந்த அவர், "முந்தைய காலங்களில் நான் பட்ஜெட் தயாரித்தபோது, அந்த ஆவணத்தை நானேதான் எழுதினேன். என்னால் உறுதியாகக் கூற முடியும். நான் முதலில் அதை ஆங்கிலத்தில் எழுதி, பின்னர் யாரையாவது கொண்டு தமிழில் மொழிபெயர்க்கச் செய்து, அதை ஒருமுறைக்கு இருமுறை பயிற்சி செய்து வாசித்தேன். அப்படி இருந்தும் கூட, இரண்டு அல்லது மூன்று மணி நேரம் ஒரு நீண்ட ஆவணத்தைப் படிப்பது மிகவும் கடினமான காரியமாக இருந்தது" என்று குறிப்பிட்டுள்ளார்.
 
நேரடியாகப் பேசும் வழக்கம் கொண்டவர்
 
மேலும், சபையில் சில விதிமுறைகள் நல்லதாக இருந்தாலும், சிலவற்றை நாம் உறுதியாக மாற்ற வேண்டும். பொதுவாக எந்தவித தாள்களோ அல்லது ஆவணங்களோ இன்றி 99% நேரடியாகப் பேசும் வழக்கம் கொண்டவர், புள்ளிவிவரங்களைக் கூட நினைவில் வைத்தே பேசுவதாகவும் அவர் கூறினார். அதிகபட்சமாக, இரண்டு மணி நேர உரையாக இருந்தால் எண்களை மட்டும் ஒரு குறிப்புச் சீட்டில் எழுதி வைத்துக் கொண்டு பேசும்போது, அது மிகவும் இயற்கையாகவும், மக்கள் கேட்பதற்கு சுவாரசியமாகவும் இருக்கும் என்று அவர் ஆலோசனை வழங்கியுள்ளார். பட்ஜெட் உரைகளை நீண்ட நேரம் வாசிக்கும் தற்போதைய நடைமுறை தேவையா என்பதைப் பற்றி நாம் சிந்திக்க வேண்டும்.
 
பட்ஜெட் வாசிப்பு முறையை மாற்றுவது குறித்து தீவிரமாக யோசிக்க வேண்டும்
 
இன்றைய காலகட்டத்தில் பட்ஜெட் தொடர்பான அனைத்து விவரங்களும் இணையத்திலேயே பதிவேற்றப்பட்டு விடுகின்றன. சட்டமன்ற மானியக் கோரிக்கைகளின் போது, உரை அவைக் குறிப்பில் ஏறிவிட்டதாகக் கொண்டு விவாதத்தைத் தொடங்குவது போன்ற நடைமுறையை பட்ஜெட்டுக்கும் பின்பற்றலாம். பட்ஜெட்டின் முக்கிய அம்சங்களை (Highlights) மட்டும் சபையில் இயற்கையாகப் பேசிவிட்டு, முழு விவரங்களையும் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளலாம். அதிகாரிகளின் சிந்தனை என்பது எப்போதும் பழைய மரபுகளையே தொடர்ந்து நீட்டிக்கச் செய்வதாக இருக்குமே தவிர, அவர்களிடம் புதிய கோணத்திலான சிந்தனை (Out of the box thinking) இருப்பதில்லை என்றும், எனவே இந்த பட்ஜெட் வாசிப்பு முறையை மாற்றுவது குறித்து தீவிரமாக யோசிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

Advertisement

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor
Advertisement

தலைப்பு செய்திகள்

Manickam Tagore: ”ஐ.டி. விங் போல.. RSS அஜெண்டாவ பேசிக்குட்டு” பாஜகவை போட்டு பொளந்த மாணிக்கம் தாகூர்
”ஐ.டி. விங் போல.. RSS அஜெண்டாவ பேசிக்குட்டு” பாஜகவை போட்டு பொளந்த மாணிக்கம் தாகூர்
EPS vs SP Velumani: தூது விட்ட இபிஎஸ்.. சமாதானத்திற்கு நோ சொன்ன எஸ்பி வேலுமணி! பொதுச்செயலாளர் பதவிக்கு குறி..!
EPS vs SP Velumani: தூது விட்ட இபிஎஸ்.. சமாதானத்திற்கு நோ சொன்ன எஸ்பி வேலுமணி! பொதுச்செயலாளர் பதவிக்கு குறி..!
TN Investment: 200 நாட்களில் 190 ஒப்பந்தங்கள்..! ரூ.1.73 லட்சம் கோடி, 1.98 லட்சம் வேலைவாய்ப்புகள் - தவெக அரசு பெருமிதம்
200 நாட்களில் 190 ஒப்பந்தங்கள்..! ரூ.1.73 லட்சம் கோடி, 1.98 லட்சம் வேலைவாய்ப்புகள் - தவெக அரசு பெருமிதம்
45 நாட்களாகியும் கிடைக்காத 7 வயது சிறுமி ! சிபிசிஐடி விசாரணையில் அடுத்தடுத்து திருப்பங்கள் - கண்ணீரில் பெற்றோர்!
45 நாட்களாகியும் கிடைக்காத 7 வயது சிறுமி ! சிபிசிஐடி விசாரணையில் அடுத்தடுத்து திருப்பங்கள் - கண்ணீரில் பெற்றோர்!
Advertisement
Advertisement

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Investment: 200 நாட்களில் 190 ஒப்பந்தங்கள்..! ரூ.1.73 லட்சம் கோடி, 1.98 லட்சம் வேலைவாய்ப்புகள் - தவெக அரசு பெருமிதம்
200 நாட்களில் 190 ஒப்பந்தங்கள்..! ரூ.1.73 லட்சம் கோடி, 1.98 லட்சம் வேலைவாய்ப்புகள் - தவெக அரசு பெருமிதம்
Manickam Tagore: ”ஐ.டி. விங் போல.. RSS அஜெண்டாவ பேசிக்குட்டு” பாஜகவை போட்டு பொளந்த மாணிக்கம் தாகூர்
”ஐ.டி. விங் போல.. RSS அஜெண்டாவ பேசிக்குட்டு” பாஜகவை போட்டு பொளந்த மாணிக்கம் தாகூர்
TN Weather News: 18 மாவட்டங்களுக்கு இன்று கனமழை எச்சரிக்கை.. சென்னை நிலவரம்? தமிழக வானிலை அறிக்கை
18 மாவட்டங்களுக்கு இன்று கனமழை எச்சரிக்கை.. சென்னை நிலவரம்? தமிழக வானிலை அறிக்கை
TN Govt: 10ம் வகுப்பு படித்தவர்களுக்கு ரூ.58,000 வரை ஊதியம்..! தேர்வே இல்லை - ஊராட்சி செயலர் வேலை முழு விவரம்
10ம் வகுப்பு படித்தவர்களுக்கு ரூ.58,000 வரை ஊதியம்..! தேர்வே இல்லை - ஊராட்சி செயலர் வேலை முழு விவரம்
IPL 2027 Mini Auction: தெறிக்குது சியா என்ட்ரி... மினி ஏலத்தில் பங்கேற்கும் சேவாக் வாரிசு! விலை எவ்ளோ?
IPL 2027 Mini Auction: தெறிக்குது சியா என்ட்ரி... மினி ஏலத்தில் பங்கேற்கும் சேவாக் வாரிசு! விலை எவ்ளோ?
கள்ளக்குறிச்சி எம்எல்ஏ-வை விசாரிக்கும் யாருக்கும் அஞ்சாதா 'பெண் சிங்கம்' - ' யார் இந்த சிருஷ்டி சிங் ஐபிஎஸ்?
கள்ளக்குறிச்சி எம்எல்ஏ-வை விசாரிக்கும் யாருக்கும் அஞ்சாதா 'பெண் சிங்கம்' - ' யார் இந்த சிருஷ்டி சிங் ஐபிஎஸ்?
இன்று அறிமுகமாகிறது Toyota Innova Hycross Facelift கார்..! இந்த 5 விஷயம்தான் ஹைலைட்..!
இன்று அறிமுகமாகிறது Toyota Innova Hycross Facelift கார்..! இந்த 5 விஷயம்தான் ஹைலைட்..!
"தான்தோன்றித்தனமாக நடந்துகொண்ட தவெக அரசு" - திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அண்ணாமலை கண்டனம்!
Embed widget