மேலும் அறிய

ஜெயலலிதா வித்திட்டது; யாருக்கும் உரிமை இல்லை; இது அவரின் ஆட்சி – ஓபிஎஸ்

மத்திய அரசு நிதி ஒதுக்கினாலும், ஒதுக்காவிட்டாலும் அத்திக்கடவு - அவினாசித் திட்டம் நிறைவேற்றப்படும் என்று அப்பகுதி மக்களுக்கு உறுதியளித்தவர் மாண்புமிகு இதய தெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்கள்.

அத்திக்கடவு அவினாசி திட்டத்துக்கு யாரும் உரிமை கொண்டாட முடியாது என முன்னாள் முதலமைச்சர் ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அத்திக்கடவு அவினாசி திட்டம் என்பது பில்லூர் அருகில் பவானி ஆற்றிலிருந்து 2,000 கன அடி வெள்ள உபரி நீரை எடுத்து கோயம்புத்தூர், திருப்பூர் மற்றும் ஈரோடு மாவட்டங்களிலுள்ள பொதுப் பணித் துறை ஏரிகள், ஊராட்சி ஒன்றிய குளங்கள் மற்றும் ஏனைய நீர்நிலைகளில் நிரப்பும் திட்டமாகும். இந்தத் திட்டத்திற்கு, தி.மு.க. அங்கம் வகித்த அப்போதைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு ஒப்புதல் அளிக்காத நிலையில், நீர்ப்பாசனம், நிலத்தடி நீர் செறிவூட்டுதல் மற்றும் குடிநீர் வழங்கல் திட்டமாக செயல்படுத்திட ஆணையிட்டவர் மாண்புமிகு தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் இதய தெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்கள்,

இந்தத் திட்டம் நிறைவேற்றப்பட வேண்டுமென்பதற்கான குரல் 1957 ஆம் ஆண்டு முதல் ஓங்கி ஒலித்துக் கொண்டிருந்தாலும், இந்தத் திட்டத்திற்கு விதை போட்ட பெருமை மாண்புமிகு இதய தெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்களையே சாரும். மத்திய அரசு நிதி ஒதுக்கினாலும், ஒதுக்காவிட்டாலும் அத்திக்கடவு - அவினாசித் திட்டம் நிறைவேற்றப்படும் என்று அப்பகுதி மக்களுக்கு உறுதியளித்தவர் மாண்புமிகு இதய தெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்கள்.

மேலும், 07-08-2015 அன்று மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள் மாண்புமிகு தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் இதய தெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்களை போயஸ் தோட்ட இல்லத்தில் சந்தித்தபோது, தமிழ்நாடு தொடர்பான திட்டங்கள் குறித்த அறிக்கையினை மாண்புமிகு அம்மா அவர்கள் மாண்புமிகு பாரதப் பிரதமர் அவர்களிடம் வழங்கினார்கள். இந்த அறிக்கையில், 1,862 கோடி ரூபாய் மதிப்பிலான அத்திக்கடவு - அவினாசித் திட்டத்திற்கு நிதி உதவி கோரும் பொருளும் இடம் பெற்றிருந்தது.

இதனைத் தொடர்ந்து, 16-02-2016 அன்று சமர்ப்பிக்கப்பட்ட 2016-2017 ஆம் ஆண்டிற்கான இடைக்கால வரவு-செலவுத் திட்டத்தில், அத்திக்கடவு - அவினாசித் திட்டம் இடம்பெற்றிருந்தது. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் புரட்சித் தலைவி அம்மா அவர்களின் ஆணையின்படி, மத்திய அரசிற்கு திருத்திய கருத்துரு உடனடியாக அனுப்பப்படும் என்றும், அதே சமயத்தில் இத்திட்டத்திற்கான ஆரம்ப கட்டப் பணிகள் தொடங்கப்படும் என்றும் நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இவற்றை, நிதி அமைச்சர் என்ற முறையில் பேரவையில் வாசிக்கும் பாக்கியத்தை எனக்கு அளித்தவர் மாண்புமிகு இதய தெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்கள்.

இதனைத் தொடர்ந்து, 18-02-2016 நாளிட்ட பொதுப் பணித் துறை அரசாணை எண் 66 மூலம் அத்திக்கடவு - அவினாசி திட்டத்தினை நடைமுறைப்படுத்தும் வகையில், மூன்று கோடியே 27 இலட்சம் ரூபாய் நிதியை அனுமதித்து அரசாணை வெளியிடப்பட்டது.

இதன் பின்னர்; தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை பொதுத் தேர்தலையொட்டி சூறாவளிப் பிரச்சாரத்தை மேற்கொண்ட மாண்புமிகு இதய தெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்கள், அத்திக்கடவு - அவினாசித் திட்டம் நிறைவேற்றப்படும் என்ற வாக்குறுதியை அப்பகுதி மக்களுக்கு வழங்கினார்கள்.

மாண்புமிகு அம்மா அவர்களின் சூறாவளி தேர்தல் சுற்றுப்பயணம் காரணமாக, மாண்புமிகு அம்மா அவர்களின் ஆளுமை காரணமாக, மாண்புமிகு அம்மா அவர்களின் பன்மொழித் திறன் காரணமாக, மீண்டும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி தமிழ்நாட்டில் அமைக்கப்பட்டது. தொடர்ந்து இரண்டாவது முறையாக, மாண்புமிகு அம்மா அவர்களின் தலைமையில் ஆட்சி அமைக்கப்பட்ட நிலையில், யாரும் எதிர்பாராத வகையில் மாண்புமிகு அம்மா அவர்களுக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டு நம்மையெல்லாம் விட்டு பிரிந்து சென்றுவிட்டார்கள். இதனைத் தொடர்ந்து, மாண்புமிகு அம்மா அவர்களின் பாதையில் நடைபெற்ற ஆட்சி, மாண்புமிகு அம்மா அவர்களின் கனவுத் திட்டமான அத்திக்கடவு - அவினாசித் திட்டத்தை நிறைவேற்றியது. மாண்புமிகு அம்மா அவர்கள் நம்மை விட்டு பிரிந்த நிலையில், 2017 முதல் 2021 வரை நடைபெற்ற அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி என்பது மாண்புமிகு அம்மா அவர்களின் ஆட்சி. மாண்புமிகு அம்மா அவர்களின் கனவு நனவாக்கப்பட்டது அவ்வளவுதான். இன்றைக்கு, அத்திக்கடவு - அவினாசித் திட்டம் நிறைவேற்றப்பட்டு இருக்கிறது என்றால் அதற்கு முழு முதற்க் காரணம் மாண்புமிகு இதய தெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்கள்தான். இதற்கு யாரும் உரிமை கொண்டாட முடியாது என்பதை அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் சார்பில் தெரிவித்துக் கொள்கிறேன்." எனத் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Pongal 2026: ”பொங்கலோ பொங்கல்” - தமிழ்நாடு முழுவதும் பொங்கல் பண்டிகை உற்சாக கொண்டாட்டம்!
Pongal 2026: ”பொங்கலோ பொங்கல்” - தமிழ்நாடு முழுவதும் பொங்கல் பண்டிகை உற்சாக கொண்டாட்டம்!
Avaniyapuram Jallikattu: வாடிவாசலில் துள்ளிக்குதிக்கும் காளைகள்.. தொடங்கியது அவனியாபுரம் ஜல்லிக்கட்டு!
Avaniyapuram Jallikattu: வாடிவாசலில் துள்ளிக்குதிக்கும் காளைகள்.. தொடங்கியது அவனியாபுரம் ஜல்லிக்கட்டு!
ஆசிரியர் தற்கொலை: 50 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் - இபிஎஸ் வலியுறுத்தல்
ஆசிரியர் தற்கொலை: 50 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் - இபிஎஸ் வலியுறுத்தல்
"உனக்கு அழிவு ஆரம்பம்” - போகிக்கு விஜய் டி-ஷர்டை எரித்த வைஷ்ணவி.. கொந்தளித்த தவெக படை!
ABP Premium

வீடியோ

”மானத்த பத்தி நீங்க பேசலாமா?” அடக்குமுறைகளை எதிர்க்கும் இஸ்லாமிய தமிழச்சி! | Wahitha Begum
அயோத்தி செல்லும் ராகுல்! காங்கிரஸ் பக்கா ப்ளான் கொந்தளிக்கும் பாஜகவினர் | Rahul Gandhi Visit Ayodhya
’’ரவுடிகள்..கோமாளிகள்’’விஜய் ரசிகர்களை திட்டிய சுதா கொங்கரா

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Pongal 2026: ”பொங்கலோ பொங்கல்” - தமிழ்நாடு முழுவதும் பொங்கல் பண்டிகை உற்சாக கொண்டாட்டம்!
Pongal 2026: ”பொங்கலோ பொங்கல்” - தமிழ்நாடு முழுவதும் பொங்கல் பண்டிகை உற்சாக கொண்டாட்டம்!
Avaniyapuram Jallikattu: வாடிவாசலில் துள்ளிக்குதிக்கும் காளைகள்.. தொடங்கியது அவனியாபுரம் ஜல்லிக்கட்டு!
Avaniyapuram Jallikattu: வாடிவாசலில் துள்ளிக்குதிக்கும் காளைகள்.. தொடங்கியது அவனியாபுரம் ஜல்லிக்கட்டு!
ஆசிரியர் தற்கொலை: 50 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் - இபிஎஸ் வலியுறுத்தல்
ஆசிரியர் தற்கொலை: 50 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் - இபிஎஸ் வலியுறுத்தல்
"உனக்கு அழிவு ஆரம்பம்” - போகிக்கு விஜய் டி-ஷர்டை எரித்த வைஷ்ணவி.. கொந்தளித்த தவெக படை!
Video: சபரிமலை மகரஜோதி தரிசன வீடியோ... விண்ணைப்பிளந்த ஐயப்ப பக்தர்களின் சரண கோஷம்
சபரிமலை மகரஜோதி தரிசன வீடியோ... விண்ணைப்பிளந்த ஐயப்ப பக்தர்களின் சரண கோஷம்
பகுதி நேர ஆசிரியர் தற்கொலை: அரசு பொறுப்பேற்க வேண்டும்! அன்புமணி ராமதாஸ் கண்டனம்
பகுதி நேர ஆசிரியர் தற்கொலை: அரசு பொறுப்பேற்க வேண்டும்! அன்புமணி ராமதாஸ் கண்டனம்
பராசக்தி சர்ச்சை: காங்கிரஸின் எதிர்ப்பை பயன்படுத்திக்கொண்ட பாஜக? - திமுக செந்தில்குமார் பரபரப்பு குற்றச்சாட்டு
பராசக்தி சர்ச்சை: காங்கிரஸின் எதிர்ப்பை பயன்படுத்திக்கொண்ட பாஜக? - திமுக செந்தில்குமார் பரபரப்பு குற்றச்சாட்டு
Mattu Pongal Kolam: மாட்டுப் பொங்கலுக்கு என்ன கோலம் போடலாம்..? இந்த டிசைன் ட்ரை பண்ணுங்க
Mattu Pongal Kolam: மாட்டுப் பொங்கலுக்கு என்ன கோலம் போடலாம்..? இந்த டிசைன் ட்ரை பண்ணுங்க
Embed widget