மேலும் அறிய

விண்வெளி ஆராய்ச்சியில் இந்தியாவுக்கு மேலும் ஒரு மைல்கல் - புதுச்சேரி முதல்வர் வாழ்த்து!

இந்தியாவின் விண்வெளித் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு மேலும் வலுசேர்க்கும் சாதனை - புதுச்சேரி மக்கள் சார்பில் வாழ்த்து!

புதுச்சேரி: இந்தியாவின் விண்வெளித் தொழில்நுட்ப வளர்ச்சியில் மேலும் ஒரு மைல்கல்லாக, நவீன என்விஎஸ்-03 (NVS-03) வழிகாட்டு செயற்கைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தி நிலைநிறுத்திய இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத்தின் (இஸ்ரோ) விஞ்ஞானிகள், பொறியாளர்கள் மற்றும் தொழில்நுட்பப் பணியாளர்களுக்கு புதுச்சேரி முதலமைச்சர் என். ரங்கசாமி பாராட்டு தெரிவித்து வாழ்த்து கூறியுள்ளார்.

ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்திலிருந்து ஜிஎஸ்எல்வி-எப்18 (GSLV-F18) ராக்கெட் மூலம் 2,250 கிலோ எடை கொண்ட அடுத்த தலைமுறை வழிகாட்டு செயற்கைக்கோளான என்விஎஸ்-03 விண்ணில் செலுத்தப்பட்டது. தொடர்ந்து, திட்டமிடப்பட்ட புவிநிலை பரிமாற்றச் சுற்றுப்பாதையில் செயற்கைக்கோள் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தச் செயற்கைக்கோள் இந்தியாவின் பிராந்திய வழிகாட்டுதல் அமைப்பான நேவிக் (NavIC) தொழில்நுட்பத்தை மேம்படுத்துவதில் முக்கியப் பங்கு வகிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் துல்லியமான இருப்பிடத் தகவல்கள் மற்றும் வழிகாட்டுதல் சேவைகளை வழங்கும் இந்தியாவின் திறன் மேலும் மேம்படும்.

இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு முதல்வர் ரங்கசாமி வாழ்த்து!

இந்தச் சாதனையைத் தொடர்ந்து, இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத்தின் விஞ்ஞானிகள் மற்றும் பணியாளர்களுக்கு புதுச்சேரி முதலமைச்சர் என். ரங்கசாமி வாழ்த்து செய்தி வெளியிட்டுள்ளார்.

அந்த வாழ்த்து செய்தியில் அவர் தெரிவித்திருப்பதாவது:

இந்தியாவின் விண்வெளித் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு மேலும் வலுசேர்க்கும் வகையில், நேவிக் பிராந்திய செயற்கைக்கோள் வழிகாட்டுதல் அமைப்பை மேம்படுத்துவதற்காக என்விஎஸ்-03 செயற்கைக்கோளை ஜிஎஸ்எல்வி-எப்18 ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தும் முயற்சியில் ஈடுபட்ட இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத்தின் விஞ்ஞானிகள், பொறியாளர்கள் மற்றும் தொழில்நுட்பப் பணியாளர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நாட்டின் தேவைகளுக்கு ஏற்ப துல்லியமான இருப்பிடத் தகவல் மற்றும் வழிகாட்டுதல் சேவைகளை வழங்கும் நேவிக் அமைப்பு, விண்வெளித் துறையில் இந்தியாவின் தன்னிறைவை வலுப்படுத்தும் முக்கியமான முயற்சியாகும். இந்த அமைப்பை மேம்படுத்துவதற்காக இஸ்ரோ மேற்கொண்டு வரும் அர்ப்பணிப்பும், அயராத உழைப்பும் பாராட்டுக்குரியவை.

மாணவர்கள், இளைஞர்களுக்கு ஊக்கமளிக்கும் சாதனை!

விண்வெளி ஆராய்ச்சியில் இந்தியா தொடர்ந்து முன்னேற்றம் கண்டு வருவது அனைவருக்கும் பெருமிதம் அளிக்கிறது. இதுபோன்ற சாதனைகள் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் அறிவியல், தொழில்நுட்பம் உள்ளிட்ட துறைகளில் புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்கி சாதனை படைக்க ஊக்கமளிக்கும் உந்துசக்தியாகத் திகழ்கின்றன.

இந்த விண்வெளிப் பயணம் வெற்றிகரமாக அமைந்து, என்விஎஸ்-03 செயற்கைக்கோள் அதன் நோக்கங்களைச் சிறப்பாக நிறைவேற்ற புதுச்சேரி மக்கள் சார்பிலும், எனது சார்பிலும் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தியாவின் அறிவியல் ஆற்றல் மேலும் உயரட்டும். இஸ்ரோவின் சாதனைப் பயணம் தொடர்ந்து சிறக்கட்டும். இவ்வாறு புதுச்சேரி முதலமைச்சர் என். ரங்கசாமி தனது வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார்.

Advertisement

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor
Advertisement

தலைப்பு செய்திகள்

புதுச்சேரி ஜிப்மரில் ரூ.172.27 கோடியில் 7 புதிய திட்டங்கள் - ஜெ.பி. நட்டா தொடங்கி வைத்தார்!
புதுச்சேரி ஜிப்மரில் ரூ.172.27 கோடியில் 7 புதிய திட்டங்கள் - ஜெ.பி. நட்டா தொடங்கி வைத்தார்!
Geetha Jeevan: ”செருப்பு அணியாமல், சாவு வீட்டில் ஷுட்டிங்” முதலமைச்சர் விஜயை மோசமாக விமர்சித்த கீதா ஜீவன்..
”செருப்பு அணியாமல், சாவு வீட்டில் ஷுட்டிங்” முதலமைச்சர் விஜயை மோசமாக விமர்சித்த கீதா ஜீவன்..
நெல் கொள்முதல் மாற்றம்: கடன் சுமையை மாற்றும் முயற்சி! தமிழக அரசுக்கு அன்புமணி ராமதாஸ் எச்சரிக்கை
நெல் கொள்முதல் மாற்றம்: கடன் சுமையை மாற்றும் முயற்சி! தமிழக அரசுக்கு அன்புமணி ராமதாஸ் எச்சரிக்கை
DMK:மகனுக்காகவா? கட்சிக்காகவா? கொளத்தூர் உட்பட 6 தொகுதி இடைத்தேர்தல் - ஸ்டாலின் முடிவு என்ன?
மகனுக்காகவா? கட்சிக்காகவா? கொளத்தூர் உட்பட 6 தொகுதி இடைத்தேர்தல் - ஸ்டாலின் முடிவு என்ன?
Advertisement
Advertisement

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Geetha Jeevan: ”செருப்பு அணியாமல், சாவு வீட்டில் ஷுட்டிங்” முதலமைச்சர் விஜயை மோசமாக விமர்சித்த கீதா ஜீவன்..
”செருப்பு அணியாமல், சாவு வீட்டில் ஷுட்டிங்” முதலமைச்சர் விஜயை மோசமாக விமர்சித்த கீதா ஜீவன்..
Deepam Festival: திருவண்ணாமலை தீபத் திருவிழா! முதல்முறையான 3000 இலவச தரிசன டிக்கெட்! மொபைலில் டவுன்லோடு செய்வது எப்படி?
Deepam Festival: திருவண்ணாமலை தீபத் திருவிழா! முதல்முறையான 3000 இலவச தரிசன டிக்கெட்! மொபைலில் டவுன்லோடு செய்வது எப்படி?
Anirudh Kavya: ஊரே கூடிய அனிருத் - காவ்யா வரவேற்பு விழா..! வராத அந்த 3 பேர் - என்ன ஆச்சு? அழைப்பு இல்லையா?
ஊரே கூடிய அனிருத் - காவ்யா வரவேற்பு விழா..! வராத அந்த 3 பேர் - என்ன ஆச்சு? அழைப்பு இல்லையா?
Gold Rate Today: தங்கம் வாங்க இதுதான் பெஸ்ட் டைம்! இன்றைய நிலவரம் என்ன? இதோ அப்டேட்!
Gold Rate Today: தங்கம் வாங்க இதுதான் பெஸ்ட் டைம்! இன்றைய நிலவரம் என்ன? இதோ அப்டேட்!
MG Windsor EV: கூடுதல் ரேஞ்சிற்காக பெரிய பேட்டரியுடன் வரும் எம்ஜி விண்ட்சர் - வசதிகளும், விலையும் - லாஞ்ச்?
கூடுதல் ரேஞ்சிற்காக பெரிய பேட்டரியுடன் வரும் எம்ஜி விண்ட்சர் - வசதிகளும், விலையும் - லாஞ்ச்?
SP Velumani: கட்சி இப்படி போனதுக்கு காரணமே நீங்கதான்! யாரு சொல்வதையும் கேக்குறது இல்ல! ஆதங்கத்தை கொட்டிய எஸ்.பி. வேலுமணி!
SP Velumani: கட்சி இப்படி போனதுக்கு காரணமே நீங்கதான்! யாரு சொல்வதையும் கேக்குறது இல்ல! ஆதங்கத்தை கொட்டிய எஸ்.பி. வேலுமணி!
TN Weather News: மீண்டும் வேகமெடுக்கும் பருவமழை..! இன்று எந்த மாவட்டங்களுக்கு வார்னிங் - தமிழக வானிலை அறிக்கை
மீண்டும் வேகமெடுக்கும் பருவமழை..! இன்று எந்த மாவட்டங்களுக்கு வார்னிங் - தமிழக வானிலை அறிக்கை
Crime: ”மத்த பசங்க கூடலாம் ஏன் பேசுற” 11ம் வகுப்பு மாணவிக்கு நேர்ந்த கொடூரம் - 23 வயது காதலன் ஆவேசம்
”மத்த பசங்க கூடலாம் ஏன் பேசுற” 11ம் வகுப்பு மாணவிக்கு நேர்ந்த கொடூரம் - 23 வயது காதலன் ஆவேசம்
Embed widget