School Holiday Rain : மிக முக்கிய அறிவிப்பு.. தொடரும் மழை.. பள்ளிகளுக்கு இன்று விடுமுறை
நீலகிரியில் தொடர் மழை காரணமாக நான்கு தாலுகா பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
நீலகிரியில் தொடர் மழை காரணமாக நான்கு தாலுகா பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கனமழையால் கூடலூர், பந்தலூர், உதகை, குந்தா ஆகிய தாலுகா பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் அம்ரித் உத்தரவிட்டுள்ளார். கூடலூரில் சாலைகளில் மரம் விழுந்து கேரளா, கர்நாடகாவும் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
— Tamilnadu Weather-IMD (@ChennaiRmc) July 12, 2022
தமிழ்நாடு புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் தொடர்ந்து கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இச்சூழலில், இன்று வரை மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, ஜூலை 13ஆம் தேதி அன்று வட தமிழ்நாடு, தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்கள், புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
— Tamilnadu Weather-IMD (@ChennaiRmc) July 12, 2022
ஜூலை 14 மற்றும் 15 தேதிகளில் கன்னியாகுமரி, திருநெல்வேலி, மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜூலை 16 ஆம் தேதியை பொறுத்தவரை, தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான/மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் கூறப்பட்டுள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 34-35 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்